அரசாங்கத்தை எதிர்க்கும் கலைஞர்களுக்கு மிக விரைவில் சரியான பாடம் கற்பிக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீறியுள்ளார்.
பிரபல சிங்கள சினிமாக் கலைஞர்கள் ஒன்றிணைந்து அண்மையில் எஹலேபொல குமாரிஹாமி என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
ஆங்கிலேயர் காலத்தில் இலங்கையில் வாழ்ந்த வீர சிங்களப் பெண் ஒருவரைப் பற்றிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அலரிமாளிகையில் வைத்து திரையிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
அதன் போது கலந்து கொண்ட கலைஞர்கள் மத்தியில் ஜனாதிபதி கடும் ஆவேசமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார் , ”சந்திரிக்காவின் காலத்தில் எந்தவொரு கலைஞரையும் மதிக்கவேயில்லை.
நான் கலைஞர்களுக்காக எவ்வளவோ செய்திருக்கின்றேன், ஆனால் இன்று என்னை எதிர்க்க பலபேர் கிளம்பி விட்டார்கள்.
அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்று அவர்கள் கருத்து வெளியிடுகின்றார்கள், அவர்களுக்கு மிக விரைவில் தகுந்த பாடம் கற்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளேன்” என்று ஜனாதிபதி கடும் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக திரைப்பட இயக்குனர் சோமரத்தின பாலசூரிய குறித்து ஜனாதிபதி கடுமையான விமர்சித்துள்ளார்.
”அவர் தனது தம்பியை கடற்படைத் தளபதியாக்கும் வரை என்னை நல்லவன் என்று புகழ்ந்து திரிந்தார். இப்போது தமிழர்களுடன் இணைந்து கொண்டு என்னை தூற்றித் திரிகின்றார்” என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஆவேசமான, அநாகரிமான கருத்துக்கள் இதுவரை காலமும் ஆளுங்கட்சி ஆதரவாளர்களாக இருந்த பல சிங்களக் கலைஞர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITZLces5.html
Geen opmerkingen:
Een reactie posten