தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 5 augustus 2014

இந்தியாவிற்கான இலங்கை தூதருக்கு வெளியுறவுத்துறை சம்மன்!

ஸ்கைப் ஊடாக ஐ.நா விசாரணைக் குழுவில் 30 பேர் சாட்சியம்!
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 12:22.09 AM GMT ]
ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவில், இலங்கையைச் சேர்ந்த 30 பேர் வரையில் சாட்சியமளித்துள்ளனர்.
போர்க்குற்றச் செயல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினரிடம் இவ்வாறு சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சாட்சியமளித்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் வெளியிடப்படவில்லை.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மாநாட்டில் வாய்மொழி மூல அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும் நோக்கிலேயே, இவ்வாறு அவசர அவசரமாக இலங்கையர்களிடமிருந்து சாட்சியங்கள் திரட்டப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விசாரணைக் குழுவிற்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் அடுத்த வாரம் லண்டன் விஜயம் செய்து சாட்சியங்களை திரட்ட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyITZLcer4.html
இந்தியாவிற்கான இலங்கை தூதருக்கு வெளியுறவுத்துறை சம்மன்!
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 01:51.15 AM GMT ]
ஜெயலலிதா, பிரதமர் பற்றிய சர்ச்சைக்குரிய கட்டுரை தொடர்பாக இலங்கை தூதர் சுதர்சன் செனவிரத்னேவுக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
மக்களவையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபையின் மையப் பகுதிக்கு சென்று தங்கள் கோரிக்கையை வலியுறுத்தியும், இலங்கை அரசை கண்டித்தும் குரல் எழுப்பினார்கள்.
அப்போது அவையில் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உறுப்பினர்களின் கவலையில் தான் பங்கு கொள்வதாகவும், இந்த பிரச்சினை தொடர்பாக மத்திய அரசின் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
அத்துடன், இலங்கை தூதரை அழைத்து இந்த பிரச்சினை தொடர்பாக சபையில் உறுப்பினர்கள் வெளிப்படுத்திய உணர்வுகள் அவரிடம் தெரிவிக்கப்படும் என்றும் அப்போது அவர் உறுதி அளித்தார்.
இந்தநிலையில் சர்ச்சைக்குரிய கட்டுரை தொடர்பாக இலங்கை தூதர் சுதர்சன் செனவிரத்னேவுக்கு வெளியுறவு அமைச்சகம் அழைப்பாணை அனுப்பியுள்ளதுடன், கட்டுரை குறித்த எம்பிக்களின் கோபமும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITZLcesz.html

Geen opmerkingen:

Een reactie posten