[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 06:08.45 AM GMT ]
தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி இலங்கை அரசின் அதிகார பூர்வ இணையத்தளத்தில் அவதூறுக் கட்டுரை வெளியானது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.
இந்த நிலையில் இலங்கை இந்தியாவிடம் மன்னிப்புக் கோரி கட்டுரையையும் இணையத்தில் இருந்து நீக்கியது.
இதனிடையே நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் இலங்கைத் தூதரை நேரில் அழைத்து கண்டம் தெரிவிக்க வேண்டும் என அ தி மு க கோரிக்கை விடுத்தது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் சுஷ்மா ஸ்சுவராஜ் இலங்கைத் தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிப்பதாக உறுதியளித்தார்.
உறுதியளித்தது போல் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் டில்லியில் உள்ள இலங்கைத் தூதர் சுதர்ஸன் சேனவிரத்னவை நேற்று மாலை நேரில் அழைத்து தமது கண்டனத்தை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அவரிடம் இலங்கை விவகாரங்களைக் கவனிக்கும் மத்திய வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் சுசித்ரா துரை, இந்தியாவின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்தார்.
இதன்படி "இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கை பாதுகாப்புத் துறை இணையதள விவகாரம் தொடர்பாக கடும் அதிருப்தி, கண்டனம் ஆகியவற்றை உங்களிடம் முறைப்படி மத்திய அரசு பதிவு செய்கிறது’’.
இத்தகைய செயல்களில் இனி ஈடுபடக் கூடாது என்று உங்கள் நாட்டு அரசிடம் கூறுங்கள்' என்று சுசித்ரா துரை தெரிவித்தார்.
புலிகளெல்லாம் அழியவில்லை! தமிழ்நாட்டு சிங்கங்களாக மாறுகின்றன: நடிகர் விஜய் உட்பட திரையுலகினர் ஆவேசம்
இலங்கைத் தமிழர்களையும், இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களையும் காப்பாற்ற முயற்சியெடுக்கும் தமிழக முதல்வரை கேலி செய்து இலங்கை பாதுகாப்பு இணையத்தளத்தில் சித்தரித்தமைக்கு தென்னிந்திய நடிகர் விஜய் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையானது ஒட்டுமொத்த தமிழர்களையே இழிவுபடுத்தும் செயல், என் தாயைத் தவறாக பேசியது மாதிரியே நினைத்து வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார்.
“பாவிகளை அழிக்க புலிகள் பிறந்தன. புலிகள் எல்லாம் தமிழ் நாட்டு சிங்கங்களாக மாறி வருவதாக இயக்குனர் ரவிக்குமார் இதன்போது தனது கண்டனத்தை வெளியிட்டார்.
சீமான் தனது உரையில், “தமிழக மக்களையும் இந்தியாவையும் இழிவாக பேசுவது சிங்களவர்களுக்கு புதிதானது அல்ல. இதன் தொடர்ச்சியாக நமது தமிழக முதல்வரையும் இழிவுபடுத்தியிருக்கிறார்கள். நமது முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதியதன் காரணம், தமிழக மீனவர்களை காப்பாற்றுவதற்கும், சிறையில் தவிப்பவர்களைய மீட்பதற்குமான கோரிக்கை மட்டுமே அது.
சர்வதேச கடல் எல்லையை முடிவு செய்யும்போது கச்சதீவு யாருக்கு என்பதைத்தான் முதலில் முடிவு செய்வோம். தமிழக மக்களின் உரிமைக்காக கடிதம் எழுதியதை கொச்சைப்படுத்தியது தவறு. இதற்காக இலங்கை அரசு நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க வேண்டும். 8 கோடி தமிழ் மக்களின் பிரதிநிதியான முதலமைச்சரை இழிவுபடுத்தும்போது இந்திய அரசு அதனை கண்டிக்காமல் இருக்கிறது. இந்த மாதிரி செயலை இலங்கை அரசு தொடர்ந்தால் நாங்களும் போராட்டதை தொடர்வோம் என்றார்.
சரத்குமார் தனது உரையில், இலங்கை அரசு இதை எதற்காக செய்திருக்கிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும். தொடர்ந்து தமிழக மீனவர்களின் கோரிக்கைகளுக்கும் பாதுகாப்புக்காகவும் குரல் கொடுத்திருக்கிறார் நம் முதலமைச்சர். இதில் தைரியமாக ஒரு முதலமைச்சர் ஈடுபட்டு செயல்படுத்தயிருக்கிறார் என்பதுதான் அவர்களது உறுத்தல். இதற்கெல்லாம் அஞ்சமாட்டார் நம் முதலமைச்சர் என்றார்.
விக்ரமன் தனது உரையில், அன்னை இந்திரா என்று கூறுகிறோம், மதர் தெரேஸா என்று கூறுகிறோம், ஆனால் அம்மா என்று நமது முதலமைச்சரை மட்டும் தான் அழைக்கிறோம். இவரை இணையத்தளத்தில் இழிவுபடுத்திய இலங்கை அரசை கண்டிக்கிறேன். சிங்களர்களே உங்களுக்கு தெரியவில்லை நாகரிகம்... பின்பு எதற்கு இங்கே தூதரகம். என இலங்கைக்கு எதிராக தமது கண்டனங்களை திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி- ஜெயலலிதா பற்றி அவதூறு: இலங்கைக்கு எதிராக கிளம்பிய திரையுலகினர்- மக்களவையிலும் எதிரொலி
http://www.tamilwin.com/show-RUmsyITZLcet3.html
ஜெயலலிதாவை அவமதித்து கட்டுரை வெளியிட்டவருக்கு எதிராக நடவடிக்கை!- இல. பாதுகாப்பு அமைச்சு
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 05:51.42 AM GMT ]
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் கட்டுரையை வெளியிட்டவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக உள்ளக மட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என்றும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளரும் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
அத்துடன் தமிழகத்தில் நேற்று வரை நீடித்த குறித்த விடயத்துக்கு எதிரான எதிர்ப்பு போராட்டங்கள் புதிதானவை அல்லவெனவும் தமிழகத்தின் கடந்தகால மன நிலையையே இப்போராட்டங்கள் தற்போதும் வெளிப்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பிரசுரிக்கப்பட்டிருந்த கட்டுரை ஒன்றில் தமிழக முதல்வர் ஜெயலலித்தாவை அவதூறு செய்யும் விதமாக கருத்துக்கள் இருப்பதாக கூறியும் அதற்கு இலங்கையின் ஜனாதிபதி பகிரங்கமாக மன்னிப்பு கோரவேண்டும் எனவும், இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வண்ணம் உறுதியான நடவடிக்கைகள் அவசியம் எனவும் குறித்த கட்டுரையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும் நேற்று தமிழகமெங்கும் பாரிய எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இது தொடர்பில் ஊடகமொன்று பாதுகாப்பு அமைச்சை வினவிய போதே அதன் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிக சூரிய மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழ் திரை உலகினர், அ.தி.மு.க. வினர், தமிழக வழக்கறிஞர்கள், எம்.ஜி.ஆர்.முன்னேற்றக் கழகத்தினர் உள்ளிட்ட பல தரப்பினரும் நேற்று தமிழகமெங்கும் போராட்டங்களை மேற்கொண்டனர்.
அத்துடன் நேற்று முன்தினம் திருச்சியில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததுடன், நேற்று முன்தினம் இலங்கையிலிருந்து சென்ற 15 வயதுக்கு உட்பட்ட தேசிய கிரிக்கட் அணி சென்னை விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் இது தொடர்பில் ருவான் வணிகசூரிய மேலும் தெரிவித்ததாவது,
குறித்த கட்டுரையையை வெ ளியிட்டமை தொடர்பில் நாம் மன்னிப்பு கோரினோம். அதனை இணையத்திலிருந்தும் நீக்கிவிட்டோம்.
அந்த கட்டுரையை எமது அனுமதியின்றி பிரசுரித்த நபருக்கு எதிராக அமைச்சு மட்டதில் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு பாதுகாப்பு அமைச்சு குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
அமைச்சு என்ற ரீதியில் அதனை நாம் முன்னெடுத்துள்ளோம் என்றார்.
புலிகளெல்லாம் அழியவில்லை! தமிழ்நாட்டு சிங்கங்களாக மாறுகின்றன: நடிகர் விஜய் உட்பட திரையுலகினர் ஆவேசம்
இலங்கைத் தமிழர்களையும், இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களையும் காப்பாற்ற முயற்சியெடுக்கும் தமிழக முதல்வரை கேலி செய்து இலங்கை பாதுகாப்பு இணையத்தளத்தில் சித்தரித்தமைக்கு தென்னிந்திய நடிகர் விஜய் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையானது ஒட்டுமொத்த தமிழர்களையே இழிவுபடுத்தும் செயல், என் தாயைத் தவறாக பேசியது மாதிரியே நினைத்து வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார்.
“பாவிகளை அழிக்க புலிகள் பிறந்தன. புலிகள் எல்லாம் தமிழ் நாட்டு சிங்கங்களாக மாறி வருவதாக இயக்குனர் ரவிக்குமார் இதன்போது தனது கண்டனத்தை வெளியிட்டார்.
சீமான் தனது உரையில், “தமிழக மக்களையும் இந்தியாவையும் இழிவாக பேசுவது சிங்களவர்களுக்கு புதிதானது அல்ல. இதன் தொடர்ச்சியாக நமது தமிழக முதல்வரையும் இழிவுபடுத்தியிருக்கிறார்கள். நமது முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதியதன் காரணம், தமிழக மீனவர்களை காப்பாற்றுவதற்கும், சிறையில் தவிப்பவர்களைய மீட்பதற்குமான கோரிக்கை மட்டுமே அது.
சர்வதேச கடல் எல்லையை முடிவு செய்யும்போது கச்சதீவு யாருக்கு என்பதைத்தான் முதலில் முடிவு செய்வோம். தமிழக மக்களின் உரிமைக்காக கடிதம் எழுதியதை கொச்சைப்படுத்தியது தவறு. இதற்காக இலங்கை அரசு நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க வேண்டும். 8 கோடி தமிழ் மக்களின் பிரதிநிதியான முதலமைச்சரை இழிவுபடுத்தும்போது இந்திய அரசு அதனை கண்டிக்காமல் இருக்கிறது. இந்த மாதிரி செயலை இலங்கை அரசு தொடர்ந்தால் நாங்களும் போராட்டதை தொடர்வோம் என்றார்.
சரத்குமார் தனது உரையில், இலங்கை அரசு இதை எதற்காக செய்திருக்கிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும். தொடர்ந்து தமிழக மீனவர்களின் கோரிக்கைகளுக்கும் பாதுகாப்புக்காகவும் குரல் கொடுத்திருக்கிறார் நம் முதலமைச்சர். இதில் தைரியமாக ஒரு முதலமைச்சர் ஈடுபட்டு செயல்படுத்தயிருக்கிறார் என்பதுதான் அவர்களது உறுத்தல். இதற்கெல்லாம் அஞ்சமாட்டார் நம் முதலமைச்சர் என்றார்.
விக்ரமன் தனது உரையில், அன்னை இந்திரா என்று கூறுகிறோம், மதர் தெரேஸா என்று கூறுகிறோம், ஆனால் அம்மா என்று நமது முதலமைச்சரை மட்டும் தான் அழைக்கிறோம். இவரை இணையத்தளத்தில் இழிவுபடுத்திய இலங்கை அரசை கண்டிக்கிறேன். சிங்களர்களே உங்களுக்கு தெரியவில்லை நாகரிகம்... பின்பு எதற்கு இங்கே தூதரகம். என இலங்கைக்கு எதிராக தமது கண்டனங்களை திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி- ஜெயலலிதா பற்றி அவதூறு: இலங்கைக்கு எதிராக கிளம்பிய திரையுலகினர்- மக்களவையிலும் எதிரொலி
http://www.tamilwin.com/show-RUmsyITZLcet1.html
Geen opmerkingen:
Een reactie posten