தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 5 augustus 2014

இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு வருத்தப்படுகிறேன்: இந்தியாவிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய மஹிந்த!

மட்டக்களப்பில் பல்கலைக்கழக மாணவியின் சடலம் பரிசோதனைக்காக தோண்டியெடுப்பு
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 10:14.07 AM GMT ]
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழூர் பிரசேத்தில் உறவினர் வீட்டியில் தங்கியிருந்தபோது உயிரிழந்த மாணவியின் சடலம் இன்று பிரேத பரிசோதனைகளுக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது.
இன்று காலை களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம். றியாழ், அம்பாறை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பி.சி.எஸ்.பெரேரா முன்னிலையில் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.
தோண்டியெடுக்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதன்போது களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கே.சுஜித்பிரியந்த, உப பொலிஸ் பரிசோதகர்களான என்.ரி.அபூபக்கர், கே.ரி.நசீர் மற்றும் உயிரிழந்தவரின் தாயாரின் சார்பில் ஆஜராகிய பிரபல சட்டத்தரணி திருமதி எஸ்.தாரணி ஆகியோர் இருந்தனர்.
மகிழூர் பிரதேசத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 27 ம் திகதி உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது திடீரென உயிரிழந்த 22 வயதுடைய பல்கலைக்கழக மருத்துவப்பீட மாணவியான கெங்காதரன் மாதுமை என்பவர் தனது பெரிய தந்தையால் கொலை செய்யப்பட்டுள்ளதாக மாணவியின் தாயார் சந்தேகம் கொண்டு நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து குறித்த மாணவியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு தோண்டுமாறு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் கடந்த மாதம் திங்கட்கிழமை (07ஆம் திகதி ) பொலிசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
கல்லடியில் வசித்துவந்த குறித்த மாணவி மகிழூரில் சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆரம்பகல்வியை பயின்றுவந்த பின்னர் 2014 கல்வியாண்டு களனி பல்கலைக்கழக மருத்துவபீட மாணிவியாக தெரிவு செய்யப்பட்டு தை மாதம் 17 ம் திகதி பல்கலைக்கழக பதிவேட்டை முடித்து 18 ம் திகதி அதற்கான பயிற்சியை முடித்துக் கொண்டு கல்லடியில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் மகிழூரில் சரஸ்வதி வித்தியாலயத்தின் அதிபர் பாடசாலையின் எழுத்துவேலை மற்றும் மொழிப்பெயர்ப்பு செய்வதற்கு வந்து உதவுமாறு மாணவியை கோரிய நிலையில் மாணவி, தாயார், அம்மம்மா மற்றும் சகோதரிகளுடன் பெப்ரவரி 21 ம்திகதி மகிழூருக்கு சென்று தாயாரின் சகோதரியான பெரியம்மா வீட்டில் தங்கி நின்றுள்ளனர்.
24 ம் திகதி உயிரிழந்த மாணவியின் சகோதரிக்கு பிரத்தியோக வகுப்பு உள்ளதையடுத்து உயிரிழந்த மாணவியை தாயாரின் சகோதரியான பெரியம்மா வீட்டில் விட்டுவிட்டு தாயார், அம்மம்மா, சகோதரிகள் தமது கல்லடி வீட்டிற்கு திரும்பிச் சென்றுள்ளனர்.
25, 26 ம் திகதி பெரியம்மா வீட்டில் தங்கிநின்று பாடசாலைக்கு உதவி செய்தநிலையில் 26ம் திகதி நித்திரைக்கு இரவு 11.30 மணிக்குச் சென்றவர் 27 ம்திகதி காலையில் திடீரென உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனையடுத்து பாம்பு தீண்டியுள்ளதால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்ததையடுத்து சடலம் மகிழூர் மயானத்தில் புதைக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் தாயாரான கெங்காதரன் திலகவதி மகிழூரில் சகோதரி வீட்டில் தங்கியிருந்தபோது எனது மகள் திடீரென உயிரிழந்துள்ளதில் சந்தேகம் உள்ளதாகவும் உயிரிழந்தவரின் தாயாரின் சார்பில் ஆஜராகிய பிரபல சட்டத்தரணி திருமதி எஸ்.தாரணி களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் 370 உபபிரிவு 3 குற்றவியல் நடவடிக்கை மறைக் கோவையின் கீழ் கடந்த யூன் மாதம் 16 ம் திகதி நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து 26-6-2014 ம்திகதி விண்ணப்பிக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எம்.எம். றியாழ் உயிரிழந்தவரின் தாயார் அவரின் சகோதரியான பெரியம்மா உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு அருகில் உள்ள அயலவர்கள், மற்றும் சட்டவைத்தி அதிகாரி ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறும் சடலத்தை புதைத்த மயானத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் 07-07-2014 அன்று திங்கட்கிழமை மீண்டும் விசாரித்த நீதிபதி ஏ.எம்.எம். றியாழ் புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி வைத்திய பரிசோதனைணக்கு உட்படுத்துமாறு களுவாஞ்சிக்குடி பொலிசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
தோண்டியெடுக்கப்பட்ட சடலம் பாதுகாப்புடன் பிரேத பரிசோதனைகளுக்காக அம்பாறை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. குறித்த சடலம் முன்னர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டு.ஆயித்தியமலையில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
மட்டக்களப்பு மாவட்டம் ஆயித்தியமலைப் பொலிஸ் பிரிவிற்குட்ட நெல்லூர் கிராமத்திற்கூடாக மின்சார கம்பி இணைப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த ஊழியர் நேற்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மின்சாரம் தாக்கி இறந்தவர் பொலன்நறுவை ஹிங்குறாகொடயைச் சேர்ந்த மாரசிங்ஹ முதியான்சலாகே விபுலரெட்ன (வயது 22) என்று பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மின்சார விஸ்தரிப்புப் பணிகளுக்காக உப ஒப்பந்த நிறுவனமான தமயந்தி எலெக்ரிகல் நிறுவனத்தின் பணியாட்களில் ஒருவரான விபுலரெட்ன சக ஊழியர்களுடன் சேர்ந்து மின்சார கம்பி இணைப்பு வேலைகளில் ஈடுபடுவதற்கு ஆயத்தமாகி இருந்துள்ளார்.
அந்நேரத்தில் உயர் அழுத்த மின் கம்பியில் மின் நிறுத்தப்படாமல் இருந்துள்ளது. எனினும் இதனை அறியாத நிலையில் அவர் அதனைத் தொட்டவுடன் மின்சாரம் சடுதியாகத் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனை இன்று பிற்பகல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி என்.ஏ. தாஹிரால் மேற்கொள்ளப்பட்டு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyITZLceu7.html


இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு வருத்தப்படுகிறேன்: இந்தியாவிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய மஹிந்த
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 09:47.55 AM GMT ]
ஜெயலலிதா தொடர்பாக இலங்கை அரச இணையத் தளத்தில் கட்டுரை வெளியானதற்கு மஹிந்த ராஜபக்ச வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மீனவர் பிரச்சினை தொடர்பாக கடிதம் எழுதுவதை விமர்சித்து இலங்கை பாதுகாப்புத் துறை இணையத்தில் அவதூறுக் கட்டுரை வெளியானது.
இதற்கு பல எதிர்ப்புக்கள் கிளம்பியது.  இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியிடமும் முதல்வர் ஜெயலலிதாவிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக இலங்கை அரசு தெரிவித்தது.
தொடர்ந்து, இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்திய மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச "இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு வருத்தப்படுகிறேன். இவ் அவதூறுக் கட்டுரை தொடர்பாக அறிக்கை கோரியிருக்கிறேன்" என கூறினார்.
தமிழக முதல்வர் அவதூறு: ரஜினி, கமல், அஜித் போராட்டத்திற்கு வர மறுத்த காரணம் என்ன?
இதற்கு தங்கள் எதிர்ப்பை காட்டும் விதத்தில் தமிழ் திரையுலகத்தினர் நேற்று இலங்கைத் தூதரகத்தை மூடக்கோரி போராட்டம் நடத்தினர்.
இதில் நடிகர்களான விஜய், சூர்யா, ஜீவா மற்றும் இயக்குனர்களில் கே.எஸ்.ரவிக்குமார், முருகதாஸ், பார்த்திபன், சீமான் போன்ற பலர் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில் பெரிதும் எதிர்பார்த்த ரஜினிகாந்த் வருகை தராதது அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதேபோல் கமலும் வரவில்லை, அஜித் பற்றி சொல்லவே தேவையில்லை. ஆனால் இதற்கு என்ன காரணம் என்பது யாருக்கும் தெரியாமலே இருந்து வருகிறது.
இது பற்றி நெருங்கிய வட்டாரங்களை விசாரித்தால் ரஜினி லிங்கா படத்திலும், கமல் உத்தம் வில்லன் படத்திலும் பிஸியாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதே போல் சென்ற வருடம் இலங்கைக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, அவர்களுக்கு ஆதரவு தரும் நோக்கத்தில் தமிழ் திரையுலகம் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது.
இதில் அஜித் காலையிலிருந்து போராட்டம் முடியும் வரை கலந்து கொண்டார், ஆனால் நேற்றைய போராட்டத்தில் இவர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று தெரியவில்லை.
பெரும்பாலும் ஈழத்து மக்கள் பிரச்சினை என்றால் கண்டிப்பாக அனைவரும் கலந்து கொள்வார்கள், ஆனால் இது தனி மனிதருக்கான நிகழ்வு என்பதால் தவிர்த்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten