[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 02:19.00 AM GMT ]
இராணுவமயம் என்ற சொல்லுக்கு அகராதியில் போருக்கு விருப்பம் கொள்ளல் அல்லது தயார்ப்படுத்தல் என்ற அர்த்தத்தை கொடுக்கிறது.
இதனைதவிர இராணுவமயம் என்ற சொல், அரசியலை தளம்பலடைய செய்யும் ஆயுதம் என்ற முரண்பாட்டு மற்றும் அபாயகரமான அர்த்தத்தையும் கொடுக்கிறது.
இந்த ஆயத்த நிலைக்கு வருடாந்த வரவு செலவுத் திட்டத்தில் அதிகமான நிதித்தொகை பாதுகாப்புக்கு ஒதுக்கப்படுவதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
இலங்கையை பொறுத்தவரை இந்த அனைத்து விடயங்களும் நடந்தேறுகின்றன.
பாதுகாப்பு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. நாட்டில் குற்றச்செயல்கள் மற்றும் அராஜகம் என்ற அடிப்படையில் அரசியல் முடக்க நிலை ஒன்று வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே இலங்கையில் இராணுவமய சமூகம் ஒன்றுக்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdmq7.html
முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்காமல் போனதற்கு ஹக்கீமே காரணம்: ஐ.தே.க (செய்தித் துளிகள்)
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 03:36.07 AM GMT ]
அமைச்சர் ரவூப் ஹக்கீமே முஸ்லிம்களுக்கு நீதி நியாயம் கிடைக்காமல் போனமைக்கான பாவத்தை செய்தவர் என ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
நேற்று பாராளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் சபையில் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
அளுத்கம, பேருவளையில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் முஸ்லிம் மக்களுக்கு நீதி நியாயம் கிடைக்கவில்லை என்றும் எனவே முஸ்லிம்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்காக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப் போவதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.
முஸ்லிம்களுக்கு நீதி நியாயம் கிடைக்காமைக்கான முழுப்பொறுப்பையும் அமைச்சர் ரவூப் ஹக்கீமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
17வது திருத்தத்தை ஐ.தே.கட்சி உட்பட சபையில் 224 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் நீதித்துறை பொலிஸ் அரச சேவைகள் என அனைத்திற்கும் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.
இவ்வாறானதொரு நிலையில் நீதித்துறையில் சுயாதீனம் காணப்பட்டது. ஆனால் இந்த 17வது திருத்தத்தை இல்லாதொழித்து சுயாதீன ஆணைக்குழுக்களை இல்லாது செய்து 18வது திருத்தத்திற்கும் அரசாங்கத்திற்கும் ஆதரவு வழங்கி அதனை நிறைவேற்ற அமைச்சர் ரவூப் ஹக்கீமே ஆதரவு வழங்கினார்.
இதனால் இன்று சட்டமா அதிபர் உயர் நீதிமன்ற நீதிபதிகள், இராணுவத் தளபதி உட்பட அரச உயர் பதவிகளுக்கு ஜனாதிபதியே நியமனங்களை வழங்கும் நிலைமை உருவானது.
ஆனால் 17வது திருத்தம் நடைமுறையில் இருந்த போது இவ்வாறான அரச உயர் பதவிகளுக்கு ஜனாதிபதியினால் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டாலும் அதனை நிராகரிக்கவும் வேறொருவரின் பெயரை பரிந்துரைக்கவுமான அதிகாரம் அரசியலமைப்பு சபைக்கு இருந்தது. ஆனால் 18வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதோடு இந்நிலை மாறி அனைத்தும் ஜனாதிபதியின் கைகளில் சிக்கிக்கொண்டது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கு நீதி நியாயம் கிடைக்கவில்லை என அமைச்சர் ஹக்கீம் சொல்வதால் எந்தப் பயனும் இல்லை.
ஏனென்றால் முஸ்லிம்களை இந்த நிலைக்கு தள்ளிவிட்ட பாவத்தை செய்தவர் ரவூப் ஹக்கீமே என்றார்.
மட்டு.பெரியகல்லாறில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்த்தர் பலி
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் 3.00 மணியளவில் மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் பெரியகல்லாறு மெதடிஸ்த பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் பெரியகல்லாறு பிரதான வீதியை சேர்ந்த புவனேஸ்வரன் (56வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வீதியை கடக்கமுற்பட்ட போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிய நிலையில் உடனடியாக அவர் பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
உயிரிழந்தவருக்கு விபத்தில் காயங்கள் ஏற்படாத நிலையிலும் அதிர்ச்சியில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 4 பேர் கைது
அச்சுறுத்தி சொத்துக்களை கொள்ளையிட்டமை உட்பட பல குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட 4 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தங்காலை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் தங்காலை மித்தெனிய பிரதேசத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் எலிப்பிட்டிய பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பிலும் தகவல் கிடைத்துள்ளது.
கொள்ளையிடப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்த முச்சக்கர வண்டி, இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் என்பனவற்றை தங்காலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் 21 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் கல்கிஸ்சை மற்றும் எம்பிலிப்பிட்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இன்று வலஸ்முல்ல நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
ஐ.தே.கட்சியை சேர்ந்த மேலும் 11 பேர் அரசில் இணையவுள்ளனர் - ரோஹித்த அபேகுணவர்தன
ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து மேலும் 11 பேர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள உள்ளதாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த கறைபடியாதவர்களையே அரசாங்கத்திற்குள் இணைத்துக் கொண்டோம்.
அந்த கட்சியில் மேலும் 11 பேர் இணைந்து கொண்ட பின்னர், ஹெரிசன் போன்ற ஓட முடியாத முயல்கள் மாத்திரமே ஐக்கிய தேசியக் கட்சியில் எஞ்சும்.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும் திறமைசாலிகளே அரசாங்கத்திற்கு வருகின்றனர்.
இதற்கு சிறந்த உதாரணம் தயாசிறி ஜயசேகர, எனவும் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdmry.html
Geen opmerkingen:
Een reactie posten