[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 12:51.04 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட சிலர் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் ஆதரவு எந்த பொது வேட்பாளருக்கு கிடைக்கப்பெறும் என்பதனை உறுதி செய்து கொள்ளும் முயற்சிகளில் ரணில் விக்ரமசிங்கää கரு ஜயசூரிய மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் முயற்சித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த மூன்று பேருமே இந்திய பிரதமரை சந்திப்பதற்கு நேரத்தை ஒதுக்கித் தருமாறு கோரியுள்ளனர். எனினும் இந்தக் கோரிக்கைக்கு இதுவரையில் இந்திய அரசாங்கம் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொது வேட்பாளர் தொடர்பிலான யோசனைத் திட்டங்கள் இந்தியாவை திருப்திபடுத்தவில்லை எனவும் இதனால் சந்திப்பு நடாத்துவதற்கு நேரம் ஒதுக்குவதனை இந்திய மத்திய அரசாங்கம் காலம் தாழ்த்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தொடர்பிலான யோசனைத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் ää கருத்துக் கணிப்பு ஒன்றை நடாத்தி அதன் பின்னர் யாருக்கு ஆதரளிப்பது என்பதனை இந்தியா தீர்மானிக்கும் என குறிப்பிடப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdmq1.html
ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து அரசாங்கம் திரைப்பட பிரசாரம்!
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 01:00.54 AM GMT ]
“உடைந்த தேசத்திலிருந்து ஆசியாவின் ஆச்சரியம் நோக்கி” என்ற பெயரில் இந்தத் திரைப்படம் வெளியிடப்பட உள்ளது.
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள், வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த திரைப்படத்தில் விபரிக்கப்பட உள்ளது.
30 ஆண்டு கால போரை முடிவுக்குக்கொண்டு வர தடையாக அமைந்த காரணிகள் தொடர்பில் திரைப்படத்தில் சுட்டிக்காட்டப்பட உள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்குதல், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடல், ரணில் விக்ரமசிங்க அமெரிக்கா சென்று புலம்பெயர் சமூகத்துடன் இணைந்து இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் நடாத்த நடவடிக்கை எடுத்தமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலான காட்சிகள் இந்த திரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெறும் காலத்தில் நாடு முழுவதிலும் இந்த திரைப்படம் காண்பிக்கப்பட உள்ளது.
நாடு முழுவதிலும் ஆயிரம் கருத்தரங்குகளை நடாத்தவும் அதில் திரைப்படங்களை காட்சிப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdmq2.html
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கையர்கள் தமிழகத்தில் கைது (செய்தித் துளிகள்)
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 02:11.21 AM GMT ]
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
கியூ பிரிவு காவல்துறையினரால் படகு மூலம் பயணிக்கவிருந்த இந்த இலங்கை அகதிகள் ஒரியூர் என்ற இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் ஆண்களாவர். இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக அறை ஒன்றில் கடந்த இரண்டு நாட்களாக தங்கியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் வருவதை அறிந்த அவர்கள் அறையில் இருந்து வேறு இடம் ஒன்றுக்கு செல்ல முயன்ற வேளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவித்துக் கொள்ள இரு நாடுகளும் இணக்கம்- இந்தியா
இரண்டு நாட்டு எல்லைகளையும் அத்துமீறிய மீனவர்களை விரைவில் விடுவித்துக் கொள்வது என்று இந்திய மற்றும் இலங்கை கரையோர காவல்படையினர் இணக்கம் கண்டுள்ளனர்.
இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இரண்டு தரப்புக்களும் இணங்கியுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி இதனை லோக்சபாவில் நேற்று தெரிவித்தார்.
கடந்த ஜூன் 25ஆம் திகதியன்று புதுடெல்லியில் சந்தித்த இரண்டு நாட்டு கரையோர படையினரும் கரையோர பாதுகாப்பு உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாக அமைச்சர் கூறினார்.
ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாகிஸ்தான் விஜயத்திற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் நோக்கில் அதிகாரிகள் குழுவொன்று தற்போது பாகிஸ்தான் விஜயம் செய்துள்ளது.
ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயம் தொடர்பான நிகழ்ச்சி நிரல் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் இரு நாடுகளினதும் அதிகாரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் சேனுகா செனவிரட்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாரட்ன உள்ளிட்ட பிரதிநிதிகள் தற்போது பாகிஸ்தான் விஜயம் செய்துள்ளனர்.
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அய்ராஸ் அஹம் சோத்ரி உள்ளிட்ட பலருடன் இவ்வாறு இலங்கைப் பிரதிநிpகள் சந்திப்புக்களை நடத்தியுள்ளனர்.
எதிர்வரும் 20ம் திகதி முதல் 22ம் திகதி வரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாகிஸ்தானில் தங்கியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
விமல் வீரவன்சவிற்கு அரசாங்கத்தை விட்டு விலகிச்செல்ல இடமில்லை- லால்காந்த
வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்ல இடமில்லை என ஜே.வி.பியின் மாகாணசபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்சவிற்கு ஓணான் என்றொரு புனைபெயர் காணப்பட்டது. நான் நினைக்கின்றேன் அந்தப் பெயரின் குணாதிசயங்களையே அமைச்சர் தற்போது வெளிப்படுத்தி வருகின்றார்.
ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடைபெறவிருப்பதனால், பத்து வாக்குகளும் ஜனாதிபதிக்கு முக்கியமானது.
இதன் காரணமாகத்தான் ஜனாதிபதி, விமல் வீரவன்சவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். வெளியே செல்லப் போவதாக விமல் எச்சரித்த போதிலும், வெளியே இறங்கிச் செல்ல அவருக்கு இடமில்லை.
இரண்டு தரப்பினரும் தங்களது நோக்கங்களை அடைந்து கொள்ள இவ்வாறு தீர்மானம் எடுத்துள்ளதாகவே நாம் கருதுகின்றோம் என லால்காந்த சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdmq5.html
Geen opmerkingen:
Een reactie posten