தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 9 augustus 2014

ராஜீவ் கொலை வழக்கில் தப்பினார் கே.பி

மட்டு மாவட்டத்தில் 30 தமிழ் கிராமங்கள் சிங்கள மயமாக்கப்படும் ஆபத்தில்

கோரலைப்பற்று மற்றும் ஏறாவூர்பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 30 கிராமங்களே இவ்வாற சிங்கள கிராமங்களாக மாற்றப்படவுள்ளன.  பொலனறுவை மற்றும் அம்பாறையில் உள்ள சிங்கள குடும்பங்கள் அங்கு குடியேற்றம் செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் முதல்கட்டமாக அந்த பகுதியில் இராணுவத்தினரை அனுப்பி காணிகளை சுவீகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசாங்கம், சுவீகரிக்கப்பட்ட காணிகளில் விகாரைகளை அமைத்து பௌத்த பிக்குகளை தங்க வைக்க திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர் இந்த கிராமங்கள் சிங்களவர்களின் குடியேற்ற கிராமங்களாக அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/78926.html

மகிந்த அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாது புதிய தடை

2010 நொவம்பர் 19ம் நாள், அரசியலமைப்பின் 31/2 வது பிரிவுக்கமையவே இரண்டாவது பதவிக்காலத்துக்காக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர் என்பதால், மூன்றாவது தடவை அதிபர் தேர்தலில் போட்டியிடும் தகுதி அவருக்கு இல்லை. பின்னர், இரண்டாவது பதவிக்காலத்தில் உள்ள ஒருவர், மூன்றாவது தடவையும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும் என்று, அரசியலமைப்பில் 18வது திருத்தம் கொண்டு வரப்பட்டது .
எவ்வாறாயினும், மகிநத ராஜபக்ச பதவியேற்ற போது அரசியலமைப்பின் 31/2வது பிரிவில், 18வது திருத்தம் இருக்கவில்லை. எனவே, ஏற்கனவே இரண்டு முறை அதிபராகப் பதவி வகித்து விட்ட அவர், மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது” என்றும் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/78929.html

ராஜீவ் கொலை வழக்கில் தப்பினார் கே.பி

ஆகையால், இவரை இந்தியாவிற்கு வரவழைத்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று காவல்துறை அதிகாரி மோகன்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இதன் மீதான தீர்ப்பை திகதி அறிவிக்காமல் ஒத்திவைத்தனர். இந்தநிலையில் இன்று தீர்ப்பு வழங்கினர்.
குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்த முடியாது என்று அறிவித்த நீதிபதிகள் பொலிஸ் அதிகாரியின் மனுவை தள்ளுபடி செய்தனர். குமரன் பத்மநாதன், 1991 ஆம் ஆண்டு நடந்த ராஜீவ்காந்தி கொலை குண்டுவெடிப்பு வழக்கில் சர்வதேச காவல்துறையினரால் தேடப்பட்டவர். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்கும் தலைமைப் பொறுப்பிலும் இருந்து வந்ததாக தெரிகிறது.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பிறகு தன்னை அந்த இயக்கத்தின் தலைவராக அறிவித்துக் கொண்டார். இறுதிக்கட்ட போரின்போது மலேசியாவில் கைது செய்யப்பட்டு, இலங்கை பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்றபோது படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
http://www.jvpnews.com/srilanka/78932.html

Geen opmerkingen:

Een reactie posten