[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 08:56.06 AM GMT ]
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் வங்கி கணக்கு விபரங்களை அறிய நடத்தும் விசாரணைகளுக்கு தடை விதிக்க கோரி, தேசிய அபிவிருத்தி வங்கி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய அபிவிருத்தி வங்கியில் உள்ள முன்னாள் பிரதம நீதியரசரின் வங்கி கணக்குகள் தொடர்பில் அணுகி விசாரணைகளை நடத்த நீதிமன்றம் ஏற்கனவே குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுமதி வழங்கியிருந்தது. எனினும் வங்கி, மேல் நீதிமன்றத்தின் அந்த உத்தரவை சவாலுக்கு உட்படுத்தியிருந்ததுடன் தடையுத்தரவு கோரியிருந்தது.
தேசிய அபிவிருத்தி வங்கியில் உள்ள முன்னாள் பிரதம நீதியரசரின் 101110002058 (பழைய இலக்கம் 1000002001360) வங்கி கணக்கு குறித்து விசாரணை நடத்தப்படும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இலங்கையின் 43 வது பிரதம நீதியரசரான ஷிராணி பண்டாரநாயக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் 2013 ஆம் ஆண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிராக சுமத்தப்பட்ட நிதி முறைகேடுகள், அனைத்து வழக்குகளில் தலையிடும் குற்றச்சாட்டுக்கள் உட்பட தம்மீது சுமத்தப்பட்டுள்ள சகல குற்றச்சாட்டுக்களையும் அவர் மறுத்துள்ளார்.
முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிராக சுமத்தப்பட்ட நிதி முறைகேடுகள், அனைத்து வழக்குகளில் தலையிடும் குற்றச்சாட்டுக்கள் உட்பட தம்மீது சுமத்தப்பட்டுள்ள சகல குற்றச்சாட்டுக்களையும் அவர் மறுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcep0.html
ஐ.தே.க.வை இளைஞர்களிடம் கையளிக்கத் தயார்!: ரணில் அறிவிப்பு
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 09:08.36 AM GMT ]
பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிங்குராக்கொடை பகுதியில் நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளும் இளைஞர்களிடம் கையளிக்கப்படுவதற்கான காலம் கனிந்துள்ளது. கட்சியில் இளைஞர்களை முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்காலத்துக்கான வளமான சொத்துக்கள். அரசியலிலும் அவர்களின் பங்களிப்பு உரிய முறையில் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
அந்த வகையில் இனிவரும் காலங்களில் கட்சிக்குள் இளைஞர்களை உள்வாங்கி, அவர்களுக்குப் பொறுப்புகளை வழங்கும் வகையில் அனைவரும் செயற்பட வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcep1.html
சட்டவிரோத யானை வளர்ப்பில் ஈடுபடும் கோட்டை நீதிவான்!: திடுக்கிடும் அறிக்கை
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 09:16.01 AM GMT ]
கோட்டை நீதிவான் திலிண கமகே யானைக்குட்டியொன்றை வளர்த்து வருகின்றார்.
இது தொடர்பாக ஊடகங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அண்மையில் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
எனினும் வனசீவராசிகள் திணைக்களத்தின் அனுமதியுடன், தான் சட்டபூர்வமாகவே அதனை வளர்த்து வருவதாக நீதிவான் திலிண கமகே அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதற்கிடையில் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம், இது தொடர்பில் வன சீவராசிகள் திணைக்களம் மற்றும் ஏனைய அரச அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு, நீதிவான் திலிண கமகேவின் யானைக்குட்டி தொடர்பான விபரங்களை கேட்டிருந்தது.
இதனையடுத்து அவர் போலியான ஆவணங்கள் மூலம் சட்டவிரோத யானை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
தற்போது இந்த விவகாரம் நீதித்துறை முக்கியஸ்தர்கள் வசம் கையளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு குறைந்த பட்சம் இரண்டு லட்சம் ரூபா அபராதம் மற்றும் ஐந்து வருட சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனத் தெரிய வருகின்றது.
மேலும் நீதிபதி பதவியும் பறிக்கப்படலாம், எனினும் கோட்டை நீதிவான் திலிண கமகே, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவுக்கு நெருக்கமானவர் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcep2.html
கொலன்னாவை நகர சபையில் அடிதடி! கோத்தாவின் ஆதரவாளர் அடாவடி
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 09:34.06 AM GMT ]
கொலன்னாவை நகர சபையின் தலைவராக இருக்கும் ரவீந்திர உதயசாந்த என்பவர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர்.
இதனைப் பயன்படுத்திக் கொண்டு இவர் பிரதேசத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் முறைகேடான நகரசபை நிர்வாகம் மூலம் பெருந்தொகைப் பணத்தை கையாடியுள்ளார்.
இவற்றுக்கெல்லாம் மேலதிகமாக பிரதேசத்தில் குப்பை கூளங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் அவர் பெருந்தொகையொன்றை கமிஷனாக வசூலிக்கின்றார். இதன் காரணமாக அந்நிறுவனங்கள் தமது பணியை செவ்வ்னே நிறைவேற்றுவதில்லை.
நகரசபைத் தலைவரின் இந்த நடவடிக்கைகளை பிரதித் தலைவர் சுரேஷ் கோதாகொட கடுமையாக எதிர்த்து வந்துள்ளார். இது இரண்டு தரப்பினருக்கும் இடையில் கடும் முறுகலை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் பிரதித் தலைவர் சுரேஷ் கோதாகொட, நகர சபைத்தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்களால் கடுமையாகத்தாக்கப்பட்டுள்ளார். பொலிசாரின் முன்னிலையில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் பொலிசார் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சுரேஷ் கோதாகொட, நகர சபைத் தலைவர் சுரேஷ் கோதாகொட சட்டவிரோத ஆயுதங்களை தன் வசம் வைத்திருப்பதாகவும், போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
தன் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்திலும் நகர சபை தலைவர் கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியதாகவும், ஆனால் பொலிசார் அவருக்கு ஆதரவாக செயற்பட்டதாகவும் அவர் தொடர்ந்தும் குற்றம் சாட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcep3.html
Geen opmerkingen:
Een reactie posten