[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 08:44.07 AM GMT ]
இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு அளுத்கமை, தர்கா நகர் பகுதியில் நடைபெற்றுள்ளது.
கடத்தல் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் பொலிஸார் உடனடியாக செயற்பட்டு, விசேட குழுவொன்றை அமைத்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் மாணவி மீட்கப்பட்டுள்ளார். அவரைக் கடத்திய வாலிபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவி கடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLceo7.html
பதவிகளுக்கு ஆசைப்படுவோரே அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர்!: அமரவீரவின் கண்டுபிடிப்பு
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 08:44.33 AM GMT ]
ஊவா மாகாண சபைத்தேர்தல் தொடர்பான பிரசாரக் கூட்டம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை பதுளையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
முன்னைய காலங்களில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தவர்கள் எல்லாம் இன்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளனர். அமைச்சுப் பதவி உள்ளிட்ட பல்வேறு பதவிகளைப் பெற்றுக் கொண்டவுடன் அரசாங்கத்துக்கு எதிரான அவர்களின் விமர்சனங்கள் இடைநடுவில் நின்றுவிட்டது.
தற்போதும் ஒரு சிலர் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவர்களும் முன்னையவர்கள் போன்று அதிகார பதவிகளை எதிர்பார்த்தே அரசாங்கத்தை விமர்சிப்பதாக தெரிகிறது.
அந்த வகையில் இவர்களும் எதிர்காலத்தில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளக் கூடும். அதற்கான வாய்ப்பாகவே அரசாங்கத்துக்கு எதிரான விமர்சனம் மூலம் அவர்கள் தங்களைப் பிரபலப்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றார்கள் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcepy.html
தவறு செய்தவர்களைத் தண்டிக்கத் தயங்கப் போவதில்லை: ஜனாதிபதி மஹிந்த - பௌத்தர்களை காக்க ஐனாதிபதியால் மட்டும் முடியும்!
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 08:52.30 AM GMT ]
மாத்தறை, கம்புறுபிட்டிய பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எனது அரசாங்கத்தில் தவறு செய்கின்றவர்களுக்கு இடமில்லை. அவர்கள் யாராக இருந்தாலும் தண்டிப்பதற்கு நான் தயங்க மாட்டேன்.
கடந்த காலங்களிலும் தவறு செய்தவர்களைத் தண்டிப்பதில் இந்த அரசாங்கம் முன்மாதிரியுடன் செயற்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களிலும் அவ்வாறே செயற்படும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே போன்று நாட்டுக்கு எதிராக துரோகமிழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மன்னிக்கப்படக் கூடாது. நாட்டைத் துண்டாடும் அவர்களின் நோக்கத்திற்கு இடமளிக்கக் கூடாது என்றும் ஜனாதிபதி தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிப் பதவியில் மஹிந்தவே தொடர வேண்டும்! அஸ்கிரிய பீட அரசியல் ஈடுபாடு
ஜனாதிபதி பதவியில் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்திருப்பதே பௌத்தர்களுக்கு அனுகூலமாக இருக்கும் என்று அஸ்கிரிய பீடத்தின் பிரதி மகாநாயக்கர் தெரிவித்துள்ளார்.
பௌத்த மதகுருமார்களுக்கு அரசியல் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதனைப் பாதுகாக்க வேண்டிய அஸ்கிரிய பீடம் அண்மைக்காலமாக அரசியல் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றது.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அஸ்கிரிய பீடத்தின் பிரதி மகாநாயக்கர் மெதகம தம்மானந்த தேரர், ஜனாதிபதி பதவியில் மஹிந்த ராஜபக்ஷவே தொடர்ந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையைப் பொறுத்தவரையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு முக்கியமானது. அதனை ஒழிப்பதற்கு முயற்சிப்பது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு எதிரான செயலாகும்.
மேலும் இப்பதவியை ரத்துச் செய்வதாக கூறும் கட்சிகள் மற்றும் நபர்கள் யார் அதிகாரத்துக்கு வந்தாலும், அதனை ரத்துச் செய்யப் போவதில்லை. அதிகாரத்துக்கு வரும்வரை தான் இந்தக் கோஷம் எல்லாம்.
தற்போதைய நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே பொருத்தமானவர். அவரைத் தவிர இன்னொருவர் கையில் அந்த அதிகாரம் கிட்டினால் இதனை விட பயங்கரமான விளைவுகள் ஏற்படலாம்.
எனவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கான அதிகாரங்களில் சிலதை ரத்துச் செய்து, அதனை தொடர்வதே நாட்டுக்கு நல்லது என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcepz.html
Geen opmerkingen:
Een reactie posten