கொழும்பில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகம் முன்பாக படைச்சிப்பாய் ஒருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.
இராணுவ உயர் அதிகாரிகள் தொடர்பான முறைப்பாடு ஒன்று தொடர்பில் நேற்று மாலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
அதன் போது விசாரணைக்கு வருகை தந்திருந்த படைச்சிப்பாய் ஒருவர், விசாரணையில் அதிருப்தியடைந்துள்ளார். தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஆணைக்குழு அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டு விசாரணையிலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளார்.
இதனையடுத்து எலிகளைக் கொல்லும் இரசாயன மருந்தொன்றை உட்கொண்ட அவர், மனித உரிமை ஆணைக்குழு அலுவலகம் முன்பாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
உடனடியாக பொலிசார் வரவழைக்கப்பட்டு, குறித்த படைச்சிப்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், இதுவரை அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவே மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மைக்காலமாக இராணுவத்தின் உயர் அதிகாரிகள் தொடர்பில் சிப்பாய்கள் அதிருப்தியுற்று, முறைப்பாடுகள் மற்றும் விமர்சனங்களை முன்வைக்கும் சம்பவங்கள் அதிகரி்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdet0.html
Geen opmerkingen:
Een reactie posten