தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 4 augustus 2014

ஆஸியில் கொலை செய்யப்பட்டவரின் உடல் கிளிநொச்சியை வந்தடைந்தது!

தமிழக முதல்வரை இழிவுபடுத்தியமை தொடர்பில் சட்டநடவடிக்கைக்கு அதிமுக கோரிக்கை- இலங்கை நிறுவனங்களுக்கு பாதுகாப்பு
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 03:00.36 AM GMT ]
தமிழக முதல்வர் மற்றும் இந்திய பிரதமரை இழிவுபடுத்தும் வகையில் இலங்கை பாதுகாப்பு இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அண்ணா திமுக வலியுறுத்தியுள்ளது.
இந்திய ராஜ்யசபாவின் உறுப்பினர் நவநீதகிருஸ்ணன் தலைமையிலான குழுவினர் தமிழக பொலிஸ் அதிபர் கே. ராமானுஜத்தை சந்தித்து இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து ஊடகங்களிடம் கருத்துரைத்த நவநீதகிருஸ்ணன், இலங்கை அதிகாரிகளுக்கு எதிராக உத்தியோகபூர்வ முறைப்பாட்டை செய்திருப்பதாக குறிப்பிட்டார்.
இதேவேளை, குறித்த கட்டுரை வெளியானதை அடுத்து பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றமை தொடர்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
தற்கொலை என்பது கோழைத்தனமான செயல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் இலங்கை நிறுவனங்களுக்கு பாதுகாப்பு
தமிழகம் திருச்சியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மீது கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டமையை அடுத்து இலங்கை நிறுவனங்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தெ ஹிந்து செய்தித்தாள் இதனை தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவதூறு ஏற்படும் வகையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் வெளியான கட்டுரை ஒன்றை அடுத்தே ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் அலுவலகம் தாக்கப்பட்டது.
குறித்த சம்பவம் கடந்த சனிக்கிழமையன்று இடம்பெற்ற நேரத்தில் அங்கு வந்த பொலிஸார் பாதுகாப்பை உறுதிப்படுத்தினர்.
அத்துடன் 24 மணித்தியால பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcfx3.html

ஆஸியில் கொலை செய்யப்பட்டவரின் உடல் கிளிநொச்சியை வந்தடைந்தது!
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 03:14.37 AM GMT ]
கிளிநொச்சி பளையை சேர்ந்தவரும் ஊற்றுப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபெருமான் கேதீஸ்வரன் அவுஸ்திரேலியாவிற்கு உழைக்கச் சென்ற சந்தர்ப்பத்தில் இலங்கையை சேர்ந்த விசமிகள் சிலரால் கடந்த ஜனவரி மாதம் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இரண்டு சிறிய குழந்தைகளின் தந்தையான கேதீஸ்வரனின் இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள அவரின் உடலை பெற்றுக்ககொள்ள வழிதெரியாது அவரது இளம் மனைவி மற்றும் உறவுகள் ஏங்கிய நிலையில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் உறவுகள் மூலம் உடலை பெற்றுக்கொண்ட முயற்சிகளை இடையறாது மேற்கொண்டனர்.
இந்த நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அவுஸ்திரேலிய கிளை மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் சங்கம் என்பன கைகொடுத்து தூதரகங்களுடன் பேசி மேற்கொண்ட முயற்சியில் ஏழு மாதங்களின் பின் நேற்று கேதீஸ்வரனின் உடல் ஊற்றுப்புலத்தை வந்தடைந்தது.
இதன் பிறகு அவரின் குடும்பத்தினர் இறுதிக்கிரியைகளை மேற்கொண்டனர்.
இதில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.கேதீஸ்வரனின் உடல் அவர்களின் குடும்பத்தாருக்கு அவுஸ்திரேலியாவில் இருந்து கிடைப்பதற்கு பாடுபட்ட அவுஸ்திரேலிய தமிழ் தேசிய கூட்டமைப்பு கிளை மற்றும் அவுஸ்திரேலிய தமிழ்ச்சங்கம் அவுஸ்திரேலிய தூதரகம் என்பவற்றிற்கு பா.உறுப்பினர் தனது நன்றிகளை கேதீஸ்வரனின் குடும்பத்தின் சார்பிலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcfx4.html

Geen opmerkingen:

Een reactie posten