[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 12:54.45 AM GMT ]
சம்பந்தனின் காலத்தில் மோடி அரசு இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் தீர்வை வழங்க முன்வர வேண்டும் அல்லது நாட்டில் பாரிய ஆபத்து ஏற்படும் என தேசிய ஐக்கிய முன்னணித் தலைவரும், மத்திய மாகாண சபையின் உறுப்பினருமான அசாத் சாலி லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcfw5.html
பொலிவுட் நடிகையின் காலாவதியான கடவுச்சீட்டை ஏற்றுக்கொள்ளுமாறு அரசியல்வாதிகளின் மகன் உத்தரவு
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 01:13.15 AM GMT ]
இலங்கையைச் சேர்ந்தவரும் மிஸ் இலங்கை பட்டம் வென்றவரும், தற்போது வட இந்தியாவின் பாலிவுட் நட்சத்திரமாக ஜொலித்து ரும் ஜெக்லீன் பெர்னாண்டஸ் என்ற நடிகையின் கடவுச்சீட்டு காலாவதியாகியிருந்தது.
பொதுவாக காலாவதியான கடவுச்சீட்டுடன் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள முடியாது என்பது நியதியாகும்.
எனினும் அரசியல்வாதிகளுக்கும் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் சட்டங்கள் நெகிழ்ந்து கொடுக்கும் என்பது மீண்டும் வெளிச்சமாகியுள்ளது.
குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் ஜெக்லீன் பெர்னாண்டாஸை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
உடனடியாக ஆளும் கட்சியின் மிக முக்கிய அரசியல்வாதியின் மகனுக்கு, அழைப்பை ஏற்படுத்திய ஜெக்லீன் பிரச்சினையை கூறியுள்ளார்.
உடன் செயற்பட்ட அரசியல்வாதியின் மகன், குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு அழைப்பை ஏற்படுத்தி, ஜெக்லீனுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார்.
கேம சூத்ரா (உணவுச் சூத்திரம்) என்ற பெயரிலான உணவகம் ஒன்றை ஜெக்லீன் இலங்கையில் ஆரம்பித்துள்ளார்.
இந்த உணவக அங்குரார்ப்பண நிகழ்வுகளில் பங்கேற்று சில சட்டத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக முதலீட்டு அபிவிருத்திச் சபையின் குடிவரவு குடியகல்வுப் பிரிவினரிடம் கடவுச்சீட்டை காண்பித்த போது, அது காலாவதியாகியிருந்தமை தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcfxy.html
Geen opmerkingen:
Een reactie posten