[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 01:00.44 AM GMT ]
கேகாலை அரநாயக்க என்னும் இடத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசியல் கூட்டங்களில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கமாகும்.
88-89 ம் ஆண்டுகளில் இளைஞர்களிடம் ஆயுதம் கொடுக்கப்பட்டு நாட்டில் வன்முறை விதைக்கப்பட்டது.
இன, மத மற்றும் சாதி பேதங்களை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் நாடாத்துவதற்கு சில அரசியல்வாதிகள் முயற்சித்தனர்.
கடந்தகால கசப்பான அனுபவங்களை புறந்தள்ளி, இளைஞர்களுக்கான நாளை என்ற திட்டத்தின் மூலம் இளைஞர் சமூகத்திற்கு சிறந்த எதிர்காலத்தை இந்த அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
வரலாற்றில் அதிகளவான அரசியல் கட்சிகள் அரசியல் நோக்கத்திற்காகவே இளைஞர் அமைப்புக்களை உருவாக்கிக் கொண்டது. எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய திட்டமொன்றின் அடிப்படையிலேயே இளைஞர் முன்னணிகளை அமைக்கின்றது.
இளைஞர்களை சேற்றில் போடும் அரசியல் நோக்கம் எம்மிடம் கிடையாது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcfw6.html
நாட்டுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ரட்ணசிறி (செய்தித் துளிகள்)
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 01:34.16 AM GMT ]
போர் இடம்பெற்ற காலத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும், போர்க்குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகவும் நிரூபிக்க உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்துமே பொய்யானவை.
நாட்டுக்கு எதிரான சதித்திட்டங்களை முறியடிக்க அனைத்து தேசப்பற்றுடைய சக்திகளும் அணி திரள வேண்டும்.
சில வெளிநாட்டு ஊடகங்கள் நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படும் வகையில் பிரச்சாரம் செய்து வருகின்றன.
இளைய சமூகத்தினர் நல்ல பண்புகளை பேணுவதில் சவால் நிலைமை ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் எழக்கூடிய சர்வதேச சவால்களை ஈடு செய்ய பெண்கள் சமூகத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியமானதாகும் என ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹொரணையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் தனியே வெளியே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது: விதுர விக்ரமநாயக்க
பெண்கள் தனியே வெளியே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் மகனுமான விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹொரணையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பெண்கள் இன்று நிர்க்கதியான நிலையை எதிர்நோக்கி வருகின்றனர்.
பெண்கள் அல்லது சிறுமிகள் தனியாக வெளியே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
ரயிலிலோ அல்லது பஸ்ஸிலோ பெண்கள் தனியாக பயணம் செய்ய முடிவதில்லை.
பெண்களும், சிறுமிகளும் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பெண்களுக்கு எதிரான அழுத்தங்கள், துன்புறுத்தல்களுக்கு எதிராக தைரியமாக அணி திரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்றைய சமூகத்தில் ஆண்களை விடவும் பெண்கள் ஆளுமையுடையவர்களாக இருக்கின்றார்கள். எனினும், பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை தடுக்க ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டியது அவசியமானது என விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
துப்பாக்கியுடன் முதியவர் கைது - சம்மாந்துறையில் சம்பவம்
சம்மாந்துறை பிரதேசத்தில் வயல் பரப்பு ஒன்றுக்கு அருகில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஒற்றை குழல் துப்பாக்கியுடன் அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டக்களையும் வைத்திருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்மாந்துறை பெரியமடு பிரதேசத்தை சேர்ந்த 73 வயதான முதியவரே இவ்வாறு துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இந்த முதியவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
ஊவா தேர்தலில் போட்டியிடுவதில்லை! ஆதரவு நிலைப்பாடு 9ம் திகதி அறிவிக்கப்படும்- ஜமமு கொள்கை பரப்பு செயலர் வேலு குமார்
ஊவா மாகாணசபை தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணி நேரடியாக போட்டியிடப் போவதில்லை. ஆனால், தலைவர் மனோ கணேசன் தலைமையில் நமது கட்சி, பதுளை மாவட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, தமிழ் மக்களின் வாக்குகளை அரசுக்கு எதிராக சேகரிக்கும் பணியில் ஈடுபடும்.
இது தொடர்பான இறுதி முடிவு, எதிர்வரும் 9ம் திகதி நடைபெறவுள்ள நமது அரசியல் குழுவில் எட்டப்படும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் கொள்கை பரப்பு செயலாளரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான வேலு குமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஊவா மாகாணத்தில் நமது கட்சி, போட்டியிடுவது தொடர்பாக ஆராய்ந்து வந்த வேளையில், பதுளை மாவட்டத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 21 இல் இருந்து 18க்கு குறைக்கப்பட்டது.
இந்த புதிய நிலைமையினால் ஏற்படும் பாதிப்பை, ஒரு அரசியல் கட்சிக்கு என்று மட்டுப்படுத்த முடியாது. இதன் முழுமையான தாக்கம், பதுளை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்தையே பிரதானமாக பாதிக்கப்போகின்றது.
இந்த உண்மையை அறிந்தும் அறியாதது போல், அரசாங்கத்தை சார்ந்த மலையக கட்சிகள் வாய்மூடி மௌனமாக இருக்கின்றன. அத்துடன் இந்நிலைமை மேலும் மோசமாகும் விதமாக, பதுளை மாவட்டத்தில் எதிரணி மற்றும் ஆளும் கட்சி கூட்டணியில் பத்து தமிழ் வேட்பாளர்களுக்கு அதிகமாக போட்டியிடும் நிலைமையும் இன்று உருவாகியுள்ளது.
இந்த பின்னணிகளை ஆராய்ந்ததன் பின்னர் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு, தமிழ் வாக்குகளை மேலும் சிதைப்பதில்லை என்ற நிலைப்பாட்டை நமது தலைமைக்குழு எடுத்துள்ளது.
எனினும் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக இனவாதத்தை கட்டவிழ்த்துள்ள இந்த வெற்றிலை சின்ன அரசை வீழ்த்தும் பயணத்தை, ஊவா மாகாணசபை தேர்தலுடன் ஆரம்பிக்க வேண்டும் என்ற பொது எதிரணி நிலைப்பாட்டின் காரணமாகவும், பதுளை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவங்களை உறுதி செய்வதற்காகவும், தலைவர் மனோ கணேசன் தலைமையில் நமது கட்சியின் பிரச்சாரக்குழு, பதுளை மாவட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, ஊவா மாகாண தமிழ் மக்களின் வாக்குகளை அரசுக்கு எதிராக சேகரிக்கும் பணியில் ஈடுபடும்.
இது தொடர்பாக ஊவா மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் எதிரணி கட்சிகளுடன் நாம் இந்த வாரத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம்.
ஊவா மாகாணசபை தேர்தல் தொடர்பில் கடந்த வாரம் நமது அரசியல்குழு கூடி முடிவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தலைவரின் அவசர வெளிநாட்டு பயணம் காரணமாக அரசியல்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
எனவே இது தொடர்பான இறுதி முடிவு, எதிர்வரும் 9ம் திகதி நடைபெறவுள்ள நமது அரசியல் குழுவில் எட்டப்படும்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcfxz.html
ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக ஆளும்கட்சி உறுப்பினர்கள் போர்க்கொடி
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 01:48.41 AM GMT ]
ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதாக அரசாங்கம் அறிவித்த போதிலும் உறுதியான திகதிகள் எதனையும் அறிவிக்கவில்லை.
மக்கள் நன்மதிப்பு பாரியளவில் வீழ்ச்சியடைந்து செல்வதனால் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.
எனினும், தற்போதைய ஜனாதிபதி முறைமையின் கீழ் நான்கு ஆண்டுகளில் ஜனாபதித் தேர்தலை நடாத்துவதில் சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மக்கள் அரசாங்கத்தை வெறுத்துள்ள காரணத்தினாலேயே ஆறு ஆண்டுகள் ஆட்சி நடாத்த வேண்டிய அரசாங்கத்திடம், நான்கு ஆண்டுகளிலேயே தேர்தல் நடத்துமாறு கோரப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் அதிகளவான அரசியல்வாதிகள் ராஜபக்ச ஆட்சி நாட்டில் தொடர்வதனை விரும்பவில்லை.
தேசிய சுதந்திர முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் இந்த அரசாங்கத்தின் ஆட்சி குறித்து நேரடியாக அதிருப்தி வெளியிட்டுள்ளன.
மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் இனவாத அரசியலை முன்னெடுத்த காரணத்தினால் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவினை ஏற்கனவே இழந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலை காலம் தாழ்த்துவது அரசாங்கத்திற்கு பாதக நிலைமைகளை ஏற்படுத்தக் கூடும்.
அதிகாரங்களை குறைத்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்வது குறித்து ஏனைய கட்சிகளுடன் அரசாங்கம் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் என லால்காந்த சிங்கள பத்திரிகையொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcfx0.html
மட்டக்களப்பில் பெண்ணொருவரைக் கடத்தி பேயோட்டிய பிக்கு கைது
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 02:02.27 AM GMT ]
மட்டக்களப்பில் பெண்ணொருவரை கடத்தி, பேயோட்டிய நால்வர் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவெடிவேம்பு கிராமத்தைச் சேர்ந்த அரசாங்க ஊழியரான குடும்பப் பெண்ணைக் கடத்தி, கண்ணைக் கட்டி பேயோட்டினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பௌத்த பிக்கு ஒருவரையும் அவரது துணையாட்கள் மூவரையும் கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் நேற்று பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தைப் பொலிஸ் பிரிவிலுள்ள விகாரை ஒன்றிலிருந்த வேளையில் கைது செய்யப்பட்டு, ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான பிக்குவையும் அவரது துணையாட்களையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகம் ஒன்றில் கடமையாற்றும் மேற்படி பெண்ணைக் கடத்தி, வெலிக்கந்தையிலுள்ள விகாரைக்கு கொண்டு சென்ற பின்னர், அவரது கண்களைக் கட்டிய நிலையில் அவரை மரத்தில் கட்டி வைத்து பேயோட்டினர் என்று சம்பந்தப்பட்ட பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் கடத்திச் செல்லப்பட்ட பெண், நேற்றுப் பகல் முச்சக்கர வண்டியொன்றில் கொண்டு வரப்பட்டு, வாழைச்சேனையில் இறக்கி விடப்பட்டுள்ளார். அதன் பின்னர் அந்தப் பெண்ணே நேரடியாக ஏறாவூர் பொலிஸ் நிலையம் வந்து தனக்கு நடந்த கதி பற்றி முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே சந்தேக நபர்களான பிக்குவும் அவரது துணையாட்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனக்குப் பேய் எதுவும் பிடித்திருக்கவில்லை என்றும் தான் பூரண சித்த சுவாதீனம் உடையவர் என்றும் கூறியுள்ள இப்பெண், குடும்பத் தகராறு காரணமாக கணவனிடமிருந்து விவாகரத்துக் கோரி வழக்குத் தாக்கல் செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcfx1.html
Geen opmerkingen:
Een reactie posten