தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 4 augustus 2014

உயிர்காக்கும் படகுகளில் ஏற்றி இந்து சமுத்திரத்தை நோக்கி அனுப்ப முயற்சி செய்தனர்!

போர்க்குற்றச் செயல் விசாரணை நடாத்த சர்வதேச நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 12:37.50 AM GMT ]
இலங்கை போர்க்குற்றச் செயல் குறித்து விசாரணை நடாத்த சர்வதேச நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைää அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையினால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினால் மட்டுமே சர்வதேச நீதிமன்றில் விசாரணை நடத்தப்படக் கூடிய சாத்தியம் உண்டு.
சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் சேன்க் சொங் இதனை உறுதி செய்துள்ளார் என சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.
உலகில் பல் நாடுகளில் குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன.
குற்றச் செயல்கள் இடம்பெறும் நாடுகள் சர்வதேச விசாரணைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே சர்வதேச நீதிமன்றின் உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே> இலங்கை போர்க்குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என சேன்க் சொங் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcfw2.html
பலஸ்தீனம் பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு ஜனாதிபதிக்கு தெரியுமா எனத் தெரியவில்லை!- தயான் ஜயதிலக்க
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 12:43.51 AM GMT ]
பலஸ்தீனம் பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு ஜனாதிபதிக்கு தெரியுமா என்பது தெரியவில்லை என முன்னாள் தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நீண்ட காலமாக பலஸ்தீன ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகித்து வருகின்றார்.
ஜனாதிபதியின் நிலைப்பாடு எது என்பது நமக்குத் தெரியும். எனினும் அரசாங்கத்தின் பலஸ்தீனம் குறித்த நிலைப்பாட்டை ஜனாதிபதி அறிந்துள்ளரா?
இலங்கை வெளிவிவகார அமைச்சு பிரசுரத்தில் பலஸ்தீனம் என்ற பெயரே கிடையாது.
இலங்கை வெளியுறவுக் கொள்கைகளில் குழப்பம் காணப்படுகின்றது.
முதுகெலும்புடன் தைரியமாக தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது.
இலங்கை இஸ்ரேலின் சதி வலையில் சிக்கியுள்ளது.
பலஸ்தீனத்தின் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை நாம் மனிதாபிமான அடிப்படையிலேயே நோக்க வேண்டும்.
காஸா நிலப்பரப்பு என்பது ஓர் திறந்த சிறைச்சாலையாகும்.
புலிகளுக்கு எதிராக போர் நடத்திய போதிலும் சிவிலியன்களை பாதுகாக்க வேண்டுமென்பது குறித்து படையினர் கவனம் செலுத்தினர்.
எனினும் இஸ்ரேலியர்கள் பலஸ்தீனர்களை சிறைபிடித்து மேலிருந்தும் கீழிருந்தும் தாக்குகின்றனர்.  பலஸ்தீனர்கள் செய்வதறியாது அல்லலுறுகின்றனர்.
இலங்கை தொடர்பில் சத்தமிடும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் போன்றவர்கள் பிரபாகரனை பாதுகாக்க முயற்சித்த போதிலும்> பலஸ்தீனர்களை பாதுகாக்க முயற்சிக்கவில்லை என தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcfw3.html
இலங்கை குறித்த ஐ.நா விசாரணைக் குழு லண்டனில் கூடவுள்ளது!
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 12:48.13 AM GMT ]
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு அடுத்த வாரம் லண்டனில் கூடவுள்ளது.
விசாரணைகளை எவ்வாறு நடாத்துவது என்பது குறித்து இந்தக் குழு ஆராய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போனவர்களது உறவினர்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களுடன் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக தொடர்பு கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
குறித்த விசாரணைக்குழுவினர் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்குழுவிற்கு சவால் விடுக்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,  சர்வதேச நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcfw4.html
உயிர்காக்கும் படகுகளில் ஏற்றி இந்து சமுத்திரத்தை நோக்கி அனுப்ப முயற்சி செய்தனர்!
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 01:06.27 AM GMT ]
அவுஸ்திரேலிய அதிகாரிகள் தங்களை உயிர்காக்கும் படகுகளில் ஏற்றி இந்து சமுத்திரத்தை நோக்கி அனுப்ப முயற்சி செய்தனர் என நவுறுவில் அடைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளனர்.
நவுறுவிற்கு தங்களை பலவந்தமாக அனுப்ப முயன்ற வேளை தாங்கள் அதனை பலவந்தமாக எதிர்த்ததாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் நவுறுவிலிருந்து தொலைபேசி மூலமாக தமிழ் அகதிகள் கவுன்சிலிடம் தெரிவித்துள்ளனர்.
எங்களை திருப்பியனுப்புவதை நீதிமன்றம் தடைசெய்து இரு தினங்களுக்கு பின்னர் அவர்கள் எங்களை ஒரேஞ் நிறமுடைய உயிர்காக்கும் படகுகளில் ஏற்றி இந்து சமுத்திரத்தை நோக்கி அனுப்ப முயற்சி செய்தனர்.
எங்களை அடைத்து வைத்திருந்த அறைக்குள்ளிலிருந்து வெளியே கூட்டிச்சென்ற அவர்கள் எவ்வாறு அந்த படகுகளை பயன்படுத்துவது என காண்பித்தனர்.
இலங்கை, இந்திய வரைபடத்தை காண்பித்த அவர்கள், தென்னிந்தியாவின் கன்னியாகுமரியை காண்பித்து, 5 மணித்தியாலங்களில் நாங்கள் கரையை அடையலாம் என்றனர்.
எந்நேரத்திலும் நாங்கள் உங்களை அந்த படகுகளில் ஏற்றுவோம் நீங்கள் மிக அவதானமாக அந்த படகை செலுத்தவேண்டும் என்றனர்.
நாங்கள் மிகவும் அச்சம் அடைந்தும் சுங்க கப்பலில் இருந்து தண்ணீர் கூட அருந்தாமல் இருந்தோம். அது காரணமாகத்தான் எங்களைக் கரைக்கு கொண்டு வந்து தற்போது நவுறு முகாமில் அடைதுள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcfw7.html

Geen opmerkingen:

Een reactie posten