[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 09:58.14 AM GMT ]
இந்த யோசனை திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சபையின் பேரவை தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபை முதலமைச்சர் நிதியம் ஒன்றை ஸ்தாபித்து அதன் ஊடாக வெளிநாட்டு மற்றும் தனியார் நிதியுதவிகளை பெற்றுக்கொள்ளும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், குறித்த யோசனை மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததுடன் அதில் இருந்த இரண்டு விடயங்களுக்கு அவர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தாகவும் அவற்றை திருத்தி மீண்டும் அதனை ஆளுநருக்கு அனுப்பியுள்ளதாகவும் சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.
விக்னேஸ்வரனின் சர்ச்சைக்குரிய நிதிச்சட்டடமூலம் திறைசேரிக்கு அனுப்பப்பட்டுள்ளது
வடமாகாண முதலமைச்சரின் இணைப்பாளர் எம்.மன்மதராஜாவை மேற்கோள்காட்டி இந்த செய்தியை குறித்த செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இந்த நியதிச் சட்டத்தை வடமாகாண ஆளுநர் நிராகரித்த நிலையிலேயே அது இலங்கையின் திறைசேரியின் அங்கீகாரத்துக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த செய்தியை தாம் குறித்த செய்தித்தாளுக்கு வழங்கவில்லை என்று மன்மதராஜா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த செய்திக்குறித்து தகவல் அளித்துள்ள வடமாகாணசபையின் தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம்,
குறித்த நிதி நியதி சட்டம் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதே தவிர திறைசேரிக்கு அனுப்பப்படவில்லை என்று கூறினார்.
ஏற்கனவே இந்த நிதி நியதி சட்ட மூலம் ஆளுனரின் அங்கீகாரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. எனினும் அவர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.
இந்த நிலையில் குறித்த சட்ட மூலம் திருத்தத்துடன் மீண்டும் வடமாகாண ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் சிவஞானம் குறிப்பிட்டார்.
சிலவேளைகளில் ஆளுநர் திறைசேரிக்கு அந்த சட்டமூலத்தை அனுப்பினாரா? என்பது தமக்கு தெரியாது என்றும் சிவஞானம் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfu5.html
சுப்ரமணியன் சுவாமியின் கோரிக்கையை நிராகரித்த இலங்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 10:44.18 AM GMT ]
சுப்ரமணியன் சுவாமியின் யோசனையை இராஜதந்திர யோசனையாக ஏற்றுக்கொள்ள முடியாது என மீன்பிடி மற்றும் நீரியல்வள பிரதியமைச்சர் சரத் குமார குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே பாக்கு சமுத்தரத்தில் இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான அடுத்த சுற்று பேச்சுவார்த்தை எதிர்வரும் 29 ஆம் திகதி புதுடெல்லியில் நடைபெறவுள்ளது.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிப்பது தொடர்பில் தீர்வொன்றை எட்டும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfu6.html
Geen opmerkingen:
Een reactie posten