தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 24 augustus 2014

இலங்கையில் ஊடகத் தணிக்கை இல்லையாம்? உதாரணம் கூறும் அமைச்சர்

இலத்திரனியல் அடையாள அட்டை நிரந்தரமாக இராணுவத்தின் பிடியில் சிக்க வைக்கும்: சரவணபவன் எம்.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 12:25.33 PM GMT ]
இலத்திரனியல் அடையாள அட்டையை இன ஒடுக்கு முறையின் ஓர் ஆயுதமாக அரசு பயன்படுத்தக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.
இலத்திரனியல் அடையாள அட்டை தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
நாம் இன்று ஒரு விஞ்ஞான யுகத்தில் வாழ்கிறோம். எமது ஒவ்வொரு நடவடிக்கையிலும் மின்னணு உபயோகத்தின் பங்கு எமது பணிகளை மிகவும் இலகுவாக்கியுள்ளது. அதே அடிப்படையில் இலங்கையில் தேசிய அடையாள அட்டைகள் மின்னணு மயப்படுத்துவதை ஒட்டி நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.
இது வேலையினை மேலும் சுலபமாக்கும் என நம்புகிறோம். எந்த ஒரு நல்ல விடயமும் அவை கையாள்பவரைப் பொறுத்தும் அது பாவிக்கப்படும் நோக்கத்தைக் கொண்டும் தீய அம்சமாக மாறக் கூடிய ஆபத்தும் உண்டு. அவ்வாறே மின்னணு தேசிய அடையாள அட்டையும் பிழையான நோக்கங்களுக்காகவும் பாவிக்கப்படுமோ என நாம் அச்சமடைகிறோம்.
இம் மின்னணு அடையாள அட்டைக்கான விண்ணப்பப் படிவமே கேள்வியை எம்முள் எழுப்பியுள்ளது. இதில் அடையாள அட்டை உரிமையாளர் பெயர் மட்டுமின்றி தகப்பன், பேரன், பூட்டன், சகோதரங்கள் உட்பட உறவினர்கள் தொடர்பாக பல்வேறு விவரங்களும் கோரப்பட்டுள்ளன.
ஒரு தேசிய அடையாள அட்டை என்பது ஒரு தனி மனிதரை சந்தேகத்துக்கு இடமின்றி அடையாளப்படுத்தும் ஒரு சாதனமாகும். அப்படி இருக்கும் போது தனி மனிதனுக்கு அப்பால் உறவுகள் போன்ற பல விடயங்கள் ஏன் கோரப்படுகின்றன என்பதே எமது கேள்வியாகும்.
அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தபோது கொழும்பில் குடியிருந்த தமிழ் மக்கள் பதிவு செய்யப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். அப்பொழுது வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் இருந்த விவரங்கள் போன்றே தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பத்திலும் விவரங்கள் கோரப்பட்டுள்ளன. அந்த நாட்களில் பொது மக்கள் அனைவருமே பயங்கரவாதிகள் என்றோ அல்லது பயங்கரவாதிகளுக்கு ஒத்தாசை வழங்குபவர்கள் என்றோ சந்தேகிக்கப்பட்டோம்.
எங்களில் பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டோம். எங்கள் உறவினர் கள் சிலர் தேடப்படும் போது அவர்கள் பிடிபடாத பட்சத்தில் நாங்கள் கைது செய்யப்படும் அவலமும் இடம்பெற்றது.
அந்த நாள்களில் தமிழ் மக்கள் பெரும் அச்சத்துடனேயே வாழ வேண்டிய நிலை இருந்தது. அதே போன்ற விவரங்கள் தேசிய அடையாள அட்டைக்கும் கோரப்படுகின்றன. அடையாள அட்டைத் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கி வருகிறது.
எனவே நாம் மின்னணு தேசிய அடையாள அட்டைக்கு என வழங்கும் தகவல்கள் பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்புக்கு உட்படுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு.
எமது பெயரையோ அல்லது அடையாள அட்டை இலக்கத்தையோ வைத்துக் கொண்டு எம்மைப் பற்றியோ அல்லது எமது உறவினர்கள் பற்றியோ தகவல்களை ஒரு சில விநாடிகளில் திரட்டி விடமுடியும். இன்னொரு முறையில் சொல்லப்போனால் நாம் நிரந்தரமாக இராணுவக் கண்காணிப்புக்குக் கீழ் உட்படுத்தப்படும் ஒரு நிலை தோன்றும்.
இன்று வடக்கு, கிழக்கில் ஆளுநர்கள் இராணுவ அதிகாரிகள் என்பது மட்டுமன்றி அவர்கள் மாகாண சபைகளின் சகல அதிகாரங்களிலும் தலையீடு செய்கின்றனர்.
மேலும் இராணுவத் தளபதிகள், பிரிவுப் பொறுப்பதிகாரிகள் உட்பட இராணுவத்தினர் சகல சிவில் நிர்வாக அலுவல்களிலும் தலையிடும் ஒரு மோசமான நிலை நிலவி வருகிறது. மின்னணு அடையாள அட்டைக்கென திரட்டப்படும் இந்தத் தகவல்கள் இராணுவத்தினரின் இத்தகைய நடவடிக்கைகளை இலகுபடுத்தவும், வலுப்படுத்தவுமான நோக்கம் கொண்டவையோ என நாம் சந்தேகிக்கிறோம்.
நாம் பாரம்பரியமாக வாழ்ந்த எமது காணிகள் இராணுவ முகாம்களுக்காகவும் இராணுவத்தினரின் குடும்பங்களின் குடியிருப்புக்காகவும் வேறு சில இராணுவத் தேவைகளுக்காகவும் அபகரிக்கப்படும் நிலைமையை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.
அதுமட்டுமின்றி இராணுவ முகாம்களை விரிவாக்கும் நோக்கத்துடன் அயல் காணிகளையும் அபகரிக்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன.
மொத்தத்தில் இன்று 28 ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் வடக்கில் இராணுவத்தினரின் வசம் உள்ளது என்பதை இராணுவப் பேச்சாளர் ஒப்புக் கொண்டிருக்கிறார். எமது மக்களோ இன்றும் உறவினர் வீடுகளிலும், அகதி முகாம்களிலும் வாழ்ந்து பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
மின்னணு அடையாள அட்டைக்கு என சேகரிக்கப்படும் தகவல்கள் இப்படியான காணி அபகரிப்புகளுக்கு பயன் படக்கூடும் என நாம் நம்புகிறோம். மின்னணு அடையாள அட்டைக்கென கைரேகை அடையாளங்கள் பெறப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தற்சமயம் வெளிநாட்டில் தற்காலிக விசா பெற்று வாழும் தமிழ் மக்கள் எப்படி கைவிரல் அடையாளங்களை வழங்க முடியும். அவர்கள் தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாத நிலை ஏற்படலாம்.
ஒரு கட்டத்தில் தம்மை அவர்கள் அடையாளப்படுத்த முடியாத நிலையில் அவர்களின் காணிகள், சொத்துகள் அபகரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
தேசிய அடையாள அட்டை மின்னணு மயப்படுத்தப்படு வதை நாம் வரவேற்கும் அதேவேளையில், அது இன ஒடுக்கு முறையின் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப் படுவதை நாம் வன்மையாக எதிர்க்கிறோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfvz.html

இலங்கையில் ஊடகத் தணிக்கை இல்லையாம்? உதாரணம் கூறும் அமைச்சர்
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 11:08.04 AM GMT ]
இலங்கையில் அதிகாரபூர்வமற்ற ஊடக தணிக்கையோ அல்லது சமூக ஊடக அடக்குமுறை முயற்சிகளோ இல்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு தொலைக்காட்சிகள் ஜனாதிபதியின் குடும்பத்தினரை விமர்சிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் அரசியல்வாதிகள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது தனது பார்வை இதற்கு ஒரு சிறந்த உதாரணம் என ஊடகதுறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான செய்திகளை வெளியிட பல தனியார் ஊடக நிறுவனங்கள் உள்ளன.
அரசாங்கம் முழுமையாக அரச ஊடகங்கள் மூலமே அதன் கருத்துக்களை வெளியிட முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கண்டியில் செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் வழமையாக ஊடக தணிக்கை இருப்பதாக குற்றம் சுமத்துகின்றன. எனினும் அதில் எந்த உண்மையும் கிடையாது என்றும் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பலஸ்தீனத்திற்கு ஒரு மில்லியன் டொலர்களை அன்பளிப்பு செய்தமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விமர்சனங்களை அமைச்சர் நிராகரித்துள்ளார்.
ஒரு நட்பு நாட்டுக்கு உதவி தேவைப்படும் போது உதவிகளை வழங்குவது தவறில்லை.
இலங்கை வறிய நாடு அல்ல, எனவே மற்றைய நாடுகளுக்கு உதவி தேவைப்படும் போது உதவும் நிலையில் உள்ளது.
நாட்டில் விடுதலைப் புலிகளின் தோல்வியின் பின்னர், பல பகுதிகளின் முன்னேற்றம் அடைந்து வருகின்றன.
நாட்டின் உட்கட்டமைப்பு வலையமைப்பு வளர்ச்சியடையும் போது மக்கள் பல தேவைகளை சந்தித்து வருகின்றன எனவும் ஊடகத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
சீன மற்றும் ஜப்பான் தலைவர்களின் வருகை குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ரம்புக்வெல்ல, இந்த இரு நாடுகளின் தலைவர்களின் வருகையானது இலங்கை மற்றும் அதன் எதிர்கால குறித்த நம்பிக்கையை வெளிக்காட்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என்ற நம்பிக்கை அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfu7.html

Geen opmerkingen:

Een reactie posten