வடமாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கவில்லை: சீ.வி.கே.சிவஞானம்
[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 10:22.41 AM GMT ]
மாகாணசபை உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு பின்னர் மீள பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் உறுப்பினர்கள் தமக்கு பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சினைகள் உள்ளதாக பல தடவைகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். எனவே இவ்விடயம் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்ட போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
மாகாணசபை உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். என 2014.04.04ம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களின் பொலிஸ் அதிகாரிக்கு நாம் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தோம். இதற் கமைவாக அனந்தி சசிதரன், கஜதீபன், சுகிர்தன் ஆகிய மாகாணசபை உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வ ழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த யூன் மாதம் உறுப்பினர்களுடைய பொலிஸ் பாதுகாப்பு திடீரென மீளப்பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் விடயம் தொடர்பாக நாம் பேசியபோது பொலிஸ் பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும் என கூறப்பட்டது.
இதனை மேற்குறிப்பிட்ட உறுப்பினர்கள் மாகாண சபை அமர்வில் எமக்கு நேரடியாக சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதற்கமைவாக நாம் 30.06.2014ம் திகதி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றிணை அனுப்பியிருந்தோம். அதில் குறிப்பாக மாகாணசபை உறுப்பினர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னதாக பாதுகாப்பு வழங்கப்பட்டு மீளப்பெறப்பட்ட உறுப்பினர்களுக்கும், மற்றய உறுப்பினர்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பினை வழங்குமாறு நாம் கேட்டிருக்கின்றோம்.
குறித்த கடிதம் கிடைத்துள்ளது. என்பதை உறுதிப்படுத்தி 14.07.2014ம் திகதி எமக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன் பின்னர் எவ்விதமான பதிலும் வழங்கப்படாததுடன், எமது கோரிக்கைகளுக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனவே முடிவு என்ன என்பதை அறிந்துகொள்ள முடியாத நிலையில் நாங்கள் இருக்கின்றோம்.
இதேவேளை இலங்கையில் மற்றய மாகாணங்களில் உள்ள மாகாணசபை உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு மட்டும் அது வழங்கப்படவில்லை. அதற்கு காரணம் என்ன என்பதும் சொல்லப்படவில்லை.
மேலும் மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினருமான, எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பும் மீளப்பெறப்பட்டுள்ளது. எனவே அவருக்கான பாதுகாப்பையும் வழங்கும்படி நாங்கள் கேட்டிருந்தோம். அதற்கும் பதில் வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது. ஆனால் எமது வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு பிரச்சினை இருக்கின்றது.
அவர்கள் பல தடவைகள் எம்மிடம் நேரடியாக சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். குறிப்பாக அனந்தி சசிதரன் பல முறைப்பாடுகளை எமது கவனத்திற்கு கொண்டுவந்திருக்கின்றார். ஆனால் நாம் அவர்களுடைய பாதுகாப்பு தொடர்பில் முழுமையான நடவடிக்கையினை எடுத்திருக்கின்றோம். மேலதிகமாக அவர்களுடைய பாதுகாப்பு தொடர்பில் மத்திய அரசாங்கத்தின் பதிலையே நாம் எதிர்பார்த்திருக்கின்றோம்.
எனவே அரசாங்கம் இந்தவிடயத்தில் ஒரு முறையான பதிலை வழங்காத விடத்து, உறுப்பினர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்படுவதை தவிர்க்க முடியாததாகவே இருக்கின்றது.
என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITaLdnp2.html
ஆஸி. எல்லைப் பாதுகாப்பு கட்டளை அதிகாரி இலங்கைக்கு விஜயம்
[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 10:32.13 AM GMT ]
மைக்கல் நூனன், நேற்று கடற்படை தலைமையகத்தில் இலங்கை கடற்படைத் தளபதி ஜெயந்த பெரேராவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
சட்டவிரோத ஆட்கடத்தல், சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுத்தல், கடலில் தவிக்கும் மக்களை காப்பற்றுவது தொடர்பான இலங்கை கடற்படையின் நடவடிக்கை வரை திட்டங்கள் குறித்து அவுஸ்திரேலிய அதிகாரிக்கு விளக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சட்டவிரோத ஆட்கடத்தலை தடுக்க இலங்கை கடற்படையினர் வழங்கி வரும் ஆதரவு, ஆபத்தான கடல் பயணங்களை தடுக்க இலங்கை கடற்படையினர் எடுத்து வரும் தொடர் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கப்படும் என ரியர் அத்மிரல் மைக்கல் நூனன் குறிப்பிட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அதேவேளை ரியர் அத்மிரல் மைக்கல் நூனன் செவ்வாய் கிழமை இலங்கை வந்ததாகவும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தலைவர்களை சந்தித்து சட்டவிரோத ஆட்கடத்தல் உட்பட கடற்பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி வருவதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகம் அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITaLdnp3.html
தொடர்ந்தும் இலங்கையின் உதவியை கோரும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்
[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 11:12.13 AM GMT ]
ஆணைக்குழுவின் தீர்மானத்தின் அடிப்படையிலான விசாரணைகளில் இலங்கை அரசை ஈடுபட வைப்பதற்கான முயற்சிகள் தொடரும் என மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஐ.நா விசாரணைக்குழுவினர் இலங்கைக்கு வந்து அரசாங்க அதிகாரிகளையும் ஏனையவர்களை சந்திக்கவும் தொடர்புடைய ஆவணங்களை பெறவும் அனுமதி வழங்குமாறு மனித உரிமை ஆணையாளர் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகிறார் எனவும் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் விசாரணைக்குழுவினர் இலங்கைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இலங்கை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITaLdnp6.html
Geen opmerkingen:
Een reactie posten