தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 6 augustus 2014

ஜனாதிபதியின் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன!- வடமாகாண முதலமைச்சர்!



மனிதவுரிமை கூட்ட இடையூறு மற்றும் இணையத்தள அவதூறு: கோத்தபாயவே பொறுப்பு
[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 08:40.02 AM GMT ]
தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்தில் அவதூறு செய்யப்பட்டதற்கும், கொழும்பில் நடைபெற்ற மனித உரிமை கூட்டத்தில் குழப்பம் நிகழ்ந்தமைக்கும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே பொறுப்பேற்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற, அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய மனோ கணேசன் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தை தனியார் ஒரு ஊடக  நிறுவனம் நடத்தவில்லை. பாதுகாப்பு அமைச்சு என்பது அதிகாரபூர்வ அரசாங்க நிறுவனம் ஆகும். 
ஆகவே முதல்வர் ஜெயலிதாவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ  இணையத்தளம் அவதூறு செய்துள்ளது.  அதுவும் மிகவும் ஆபாசமான முறையில்  கேலிச்சித்திரமும் வரையப்பட்டு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இலட்சணத்தில்தான் இவர்கள் இந்த நாட்டு மக்களது உண்மை உணர்வுகளை எடுத்துக்கூறும் சமூகத் தளங்களையும், தனியார் இணைய ஊடக தளங்களையும் தடை போட்டு நிறுத்த முயல்கிறார்கள்.
பாதுகாப்பு அமைச்சு இன்று ஒரு அரசியல் கட்சியை போல் நடந்துகொள்கிறது. அதன் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஒரு அரசியல்வதியை போல் நடந்து கொள்கிறார். ஆனால் அவர் ஒரு திரைமறைவு அரசியல்வாதி.
இதனால்தான் இவரை பகிரங்க அரசியலுக்கு வரும்படி நான் சில வாரங்களுக்கு முன்னர் அழைப்பு விடுத்தேன். திரைக்கு பின்னால் இருந்துகொண்டு இப்படியான குழப்பங்களை இவர் விளைவிக்கக்கூடாது. 
இந்த நாட்டின் நட்பு நாடு  இந்தியா. எவர் என்ன சொன்னாலும் இந்திய மத்திய அரசும், தமிழக மாநில அரசும் இந்த நாட்டு தேசிய இனப்பிரச்சினை தீர்வுடன் பின்னிப் பிணைந்தவை. மத்திய அரசின் பிரதமரையும், மாநில அரசின் முதல்வரையும் ஆபாசமாக சித்தரித்த இந்த நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாதுகாப்பு செயலாளர் என்ற முறையில் கோத்தபாய ராஜபக்ச இதற்கு முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
அடுத்து நேற்று முதல்நாள், தங்கள் சோகங்களை பகிர்ந்து கொள்ள நாட்டின் தலைநகரம் கொழும்புக்கு, வடக்கில் இருந்து வந்த தாய்மார்களையும், பிள்ளைகளையும் சிலர் பயமுறுத்தி திருப்பி அனுப்பியுள்ளார்கள்.
இது ஒரு தொடர்கதை. சில தேரர்கள் அடங்கிய தீவிரவாதிகள், சமீப காலமாக பல்வேறு பொது நிகழ்வுகளை குழப்பி வருகிறார்கள். ஊடக மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை உள்ளே நுழைந்து தடாலடியாக குழப்பும் இவர்கள், நாளை வீடுகளுக்குள் வந்து படுக்கையறை, குளியலறைகளுக்குள்ளும் நுழைவார்கள்.
சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு இவர்கள் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றார்கள். இந்த சட்ட விரோத செயல்களை தடுத்து நிறுத்தாத, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இவை அனைத்துக்கும் பொறுப்பு ஏற்க வேண்டும்.  காணாமல் போன தங்கள் உறவுகளை தேடி அப்பாவி மக்கள் நாடு முழுக்க போவார்கள். 
ஜனாதிபதியையும், அமைச்சர்களையும் கடந்த காலங்களில் சந்தித்தார்கள். இன்று சிவில் பிரதிநிதிகளையும், இந்த நாட்டில் சட்டப்படி தங்கி இருக்கும் வெளிநாட்டு பிரதிநிதிகளையும் அவர்கள் சந்தித்தார்கள். இதில் என்ன தவறு இருக்க முடியும்?
இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் சட்டத்தை மீறி இருந்தால் அவர்கள் மீது வழக்கு தொடருங்கள். அவர்கள் அதற்கு தயார். உண்மையில் தமது கூட்டத்தை குழப்பிய தேரர்கள் உள்ளடங்கிய தீவிரவாத நபர்கள் மீதும், அவர்களை கைது செய்யாமல் விட்ட பொலிசார் மீதும் அந்த மனித உரிமை கூட்ட ஏற்பாட்டாளர்கள் வழக்கு தொடர வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyITaLdnpy.html
ஞானசார தேரர் தாமாகவே காவியை உடுத்திக்கொண்ட ஓர் பிக்கு: ராஜித சேனாரட்ன
[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 08:55.41 AM GMT ]
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாமாகவே காவி உடையை உடுத்திக் கொண்ட ஓர் பௌத்த பிக்கு என மீன்பிடி வள அமைச்சர் ராஜித சேனாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்
ஊரில் காவியைத் துறந்து கொழும்பிற்கு வந்து தாமே காவியை உடுத்திக் கொண்ட பௌத்த பிக்கு எனக்கு எதிராக குற்றம் சுமத்துகின்றார்.
நான் கேரளா கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்வதாக இந்த பௌத்த பிக்கு குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர திட்டமிட்டுள்ளேன்.
போலியான பிரச்சாரத்தை மேற்கொண்டமைக்காக நேற்று நீதிமன்றில் வழக்குத் தொடர்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.
பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரர் பி.எம்.டபிள்யூ காரில் கேரள கஞ்சா போதைப் பொருள் கடத்துவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும் என்னிடம் உத்தியோகபூர்வ வாகனத்தை தவிர வேறு வாகனங்கள் கிடையாது.
எனக்கு எதிரான குற்றச்சாட்டை நீதிமன்றில் ஞானசார தேரர் நிரூபிக்க வேண்டுமென ராஜித சேனாரட்ன சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITaLdnpz.html
ஜனாதிபதியின் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன!- வடமாகாண முதலமைச்சர்
[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 10:01.35 AM GMT ]
வடமாகாணசபைக்கு சிவில் நிர்வாகப் பின்னணியைக் கொண்ட ஒருவரை ஆளுநராக நியமிப்பேன் என ஜனாதிபதி எமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாங்கள் நம்பியிருந்தோம். அதனாலேயே தற்போதுள்ள ஆளுநர் விடயத்தில் நாங்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் நடந்து கொண்டோம்.
ஆனால் ஜனாதிபதியின் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆளுநருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது சாதாரணமானதல்ல. அதற்கு நியாயமான காரணங்கள் வேண்டும். காரணங்கள் இல்லை. என்பது அர்த்தமல்ல. காரணங்கள் இருக்கின்றன. நாம் சமகாலத்தில் அவர் விடுகின்ற பிழைகளை சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கின்றோம். எதிர்காலத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் தேவை இருப்பின் அதை செய்வோம். எனவும் கூறியுள்ளார்.
சமகால அரசியல் நிலமைகள் மற்றும் சர்வதேச அரசியல் நிலைமைகள் தொடர்பில் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிற்கு முதலமைச்சர் அண்மையில் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த செவ்வியில் மேலும் அவர் கூறுகையில்,
மாகாண ஆளுநருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது சாதாரண விடயமல்ல. அதற்கு நியாயமான பல காரணங்கள் இருக்கவேண்டும். அதற்காக காரணங்களே இல்லை. என்பது அர்த்தமல்ல. காரணங்கள் அதிகம் இருக்கின்றது. ஆனாலும் சமகாலத்தில் ஆளுநர் விடுகின்ற சில தவறுகளை நாங்கள் சுட்டிக்காட்டி வருகின்றோம்.
உதாரணமாக, வடக்கில் உள்ளூராட்சி சபைகளுக்கு செயலாளர்களை நியமிப்பதற்கான நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. அந்த நியமனங்கள் மிக ஒழுங்காகவே நடைபெற்றன. ஆனால் அவை ஆளுநரிடம் சென்ற பின்னர் கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு நியமிக்கப்பட்ட செயலாளர் அந்தப் பதவிக்கு எவ்வகையிலும் தகுதியானவர் அல்ல. அவர் ஏதோ ஒரு அரசியல் காரணத்தை முன்னிறுத்தி அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
எனவே அந்தவிடயத்தை நான் மிக தெளிவாக சுட்டிக்காட்டியிருந்தேன். அது பிழை என கூறியிருந்தேன். அதேபோன்று பல விடயங்களில் பிழைகளை நாங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றோம். சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கின்றோம். எனவே எதிர்காலத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டிய தேவை இருந்தால் நிச்சயமாக அதனை நாங்கள் செய்வோம்.
நில ஆக்கிரமிப்பு
நில ஆக்கிரமிப்பு அல்லது மக்களுடைய நிலங்களை படையினர் வைத்திருக்கின்றமைக்கு எதிராக நாங்கள் நீதிமன்றங்களை கடந்த காலத்தில் நாடியிருக்கின்றோம். நாடவில்லை. என்பதில் எமக்கு உடன்பாடில்லை. குறிப்பாக நான் உச்ச நீதிமன்றில் இருக்கும் காலத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அது தொடர்பில் ஒரு இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்ட போதும், மக்களுடைய நிலத்தில் தொடர்ந்தும் இராணுவம் இருக்கின்றது. இதுதான் யதார்த்தம். மேலும் 18ம் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டதன் பின்னர் நீதித்துறையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றது.
எல்லாவற்றையும் இன ரீதியாக பார்க்கும் இந்தக் காலத்தில் நீதித்துறையிலும் அவ்வாறான நிலை உருவாகிவிட்டதோ என்றும் எண்ணத்தோன்றுகின்றது.
இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக. உலகில் எந்தவொரு நாடும் தங்களுடைய நலன்களின் அடிப்படையிலேயே செயற்படும். அதற்கு இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.
எனவே தங்களுடைய நலன்களுக்கு அப்பால் இந்தியா தமிழர் விடயத்தில் அக்கறை கொள்ளும் என நினைப்பது மடமை என்றே சொல்லவேண்டும். எனவே அவர்களுடைய நலன்களின் அடிப்படையில் எங்கள் பிரச்சினை அமைந்தால் இந்தியா நிச்சயமாக ஒரு முடிவினை எடுக்கும்.
மேலும் இந்திய பிரதமர் மோடி குறித்துச் சொல்வதானால். அவர் தமக்குள்ள கடப்பாட்டை மனதில் வைத்துக் கொண்டு, இலங்கை ஜனாதிபதிக்குரிய பொறுப்வை மனதில் வைத்துக் கொண்டு, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மனதில் வைத்துக் கொண்டு இலங்கை ஜனாதிபதியிடம் கூறியிருக்கின்றார்.
அதாவது நீங்கள் 13ம் திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக கூறினீர்கள். 13ற்கும் அப்பால் செல்வதாக கூறினீர்கள். எனவே அதனை செய்வீர்கள் என நான் நம்புகின்றேன். ஏன கூறியிருக்கின்றார்.
எனவே எந்தவொரு விடயத்தையும் சரியாக புரிந்து. சரியாக செயற்படுவார், செயற்படுகின்றார். எனவே நான் மேலே குறிப்பிட்டதைப் போன்று எங்கள் பிரச்சினைகள் அவர்களுடைய நலன்களுடன் ஒட்டிப் போகுமானால் அவர் அது தொடர்பில் சரியான முடிவினை எடுப்பார்.
http://www.tamilwin.com/show-RUmsyITaLdnp1.html

Geen opmerkingen:

Een reactie posten