இலங்கைக்கு எதிராக விமர்சனங்களை வெளியிடுவோர் இந்த உலகத்தில் வாழ்கின்றார்களா என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அனுராதபுரம் மதவச்சியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக சில தரப்பினர் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் சில பகுதிகளில் பாரியளவில் மனிதப் பேரவலம் இடம்பெற்று வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
உள்விவகாரப் பிரச்சினைகளில் வெளித் தரப்பினரின் வகிபங்கு நடைமுறைச் சாத்தியத்தன்மையுடன அவதானிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். சில தரப்பினர் நாட்டை பிளவுபடுத்த முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். வெளிச் சக்திகளின் அழுத்தங்களை ஈடு செய்ய வலுவான ஓர் அரசியல் தலைமைத்துவம் அவசியம் எனவும், அதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/78437.html
Geen opmerkingen:
Een reactie posten