[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 11:44.59 AM GMT ]
இவர் தனது செந்தப் புத்தியில் தான் இவ்வாறு கூறினாரா அல்லது இரவல் புத்தியில் தான் கூறினாரா என்பது பற்றி இவர் தான் பதில் கூற வேண்டும்.
காணாமல் போனோர் ஆணைக்குழுவினுடைய முக்கிய பணிகளை ஆற்றுவதை விடுத்து சுப்பிரமணியன் சுவாமி போல கோமாளித்தனமான அறிக்கைகளை விட்டு கைக்கூலித்தனம் பண்ணுவது சரியல்ல.
99 வீதமான தமிழர்கள் வாழுகின்ற வட பகுதியில் தமிழர்கள் தமது சொந்த மொழியில் அல்லாது சிங்கள மொழியில்தான் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்ய வேண்டும் என்பதை இவர் கூறாமல் கூறுகின்றாரா?
யாழ்ப்பாணத்தில் 1974 இல் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது நடைபெற்ற கோர சம்பவத்திற்கும் யாழ். நூல் நிலைய எரிப்பு நிகழ்வின் பின்ணணிகளுக்கும் பொறுப்பானவர்கள் யார் என்பதை இவர் உரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.
வட பகுதியில் உள்ள பொலிஸ் நிலையங்ளில் உள்ள வேலை வாய்ப்புக்கள் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கே உரித்தானவை. அவற்றை சிங்களவர்களுக்கு வழங்கி சிங்கள மொழியிலேயே இப் பகுதியில் அலுவல்கள் மேற்கொள்வது ஒரு வகையில் அரசியல் அயோக்கியத்தனமே ஒழிய வேறொன்றுமல்ல.
பொலிஸ் நிலையங்களில் தமிழர் வேண்டுமெனக் கோரினால் சிங்களப் பொலிசாருக்கு தமிழ் மொழி கற்பித்து அவர்களையே சேவையில் ஈடுபடுத்தப்படுவார்களாம். தமிழ் கற்று தமிழிலேயே சிங்கள பொலிசார் பணியாற்றினால் தமிழ் மொழி என்னவாகும் என்பது செல்லித்தெரிய வேண்டியதில்லை.
அவ்தாஸ் கௌசாலிடம் ஒரு கேள்வி?
வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழர்கள் முறைப்பாடு அல்லது ஏதாவது அலுவல்களுக்கு செல்லும் போது மொழி பெயர்ப்பாளராக வந்து உதவுவீர்களா?
மேலும் நீங்கள் வாழுமிடத்தில் பொலிஸ் நிலையத்தில் உங்களது தாய்மொழியில் அல்லது வேற்று மொழியில் அலுவல் பார்க்க ஒப்புக் கொள்வீர்களா?
வந்தோமா, தந்த வேலையை மட்டும் சீராக செய்தோமா, தருவதை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினோமா என்றில்லாது தமிழ் தரப்பினருக்கு கடுப்பு ஏற்றும் கருத்துக்களை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை தாழ்மையுடன் தங்களை வேண்டுகின்றோம்.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdev3.html
ஒஸ்மானியாக் கல்லூரியில் மூக்கை நுழைத்த சந்திரசிறி
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 11:59.28 AM GMT ]
குறித்த பாடசாலையில் அண்மைக் காலங்களாக கல்வி நிலை மோசமடைந்து வருகின்றதாக கூறி அதிபரை இடமாற்றம் செய்யப் போவதாக கூட்டம் ஒன்றில் கூறியிருந்தார்.
பின்னர் அவர் கூறிய படியே உடனடியாக அவர் யாழ் வலயக் கல்வி வலயத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
கல்வி வலயத்தில் இவ் அதிபருக்கான பணிகள் ஒதுக்கப்படாத நிலையில் அங்கு அவர் பணிகள் இன்றி இருக்க வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒஸ்மானியாக் கல்லூரி யுத்தத்தினால் மிகவும் பாதிப்படைந்து அதிபர் எம். முபாரக்கினால் 2003 ஆம் ஆண்டு மீளக் கட்டி எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
1990 ஆம் ஆண்டில் அரச விமானப் படையினரால் தாக்குதலுக்கு உள்ளான இப் பாடசாலையை மீளக் கட்டியவரையே இடமாற்றம் செய்துள்ளதாக முஸ்லிம் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களை மீள திரும்பலாமென புலிகள் அறிவித்திருந்ததை அடுத்தே மக்கள் முஸ்லிம் பகுதிகளில் மீள குடியமர தொடங்கியிருந்தனர்.
இவருக்கு தொடர்ச்சியாக கொடுக்கப்பட்ட அழுத்தங்களிலிலும் பின்னர், அமைச்சர் ரிசாத் பதியுதீனின் தயவால் அவர் பதவியில் தொடர்ந்து இருந்தார்.
இதன் பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நெருக்கமான ஒருவரின் முறைபாடுகளை அடுத்தே றிசாத் பதியுதீனின் ஆதவாளரான தற்போதைய அதிபர் வெளியே அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பின்னர் இப் பாடசாலையின் தேவைகளை எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றி தருவதாகவும், உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஆளுநர் சந்திரசிறி கோரிக்கை விடுத்ததாக யாழ் மாநகர சபை உறுப்பினர் பி.எஸ் எம். சுபியான் தெரிவித்துள்ளார்.
;
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdev4.html
திரு. ச. வி. கிருபாகரன் இணையதளம் மீதான சட்ட நடவடிக்கை!
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 01:47.19 PM GMT ]
இவ்வடிப்படையில், 1990ம் ஆண்டு முதல், பிரான்சை தளமாக கொண்டு இயங்கும், தமிழர் மனிதர் உரிமை மையமும், கடந்த 24 வருடங்களாக சர்வதேசத்தில் மனிதர் உரிமை செயற்பாட்டாளராக திகழும், இதன் பொதுச் செயலாளரான, திரு. ச. வி. கிருபாகரன் பற்றி, சில மோசமான விசமத்தனமான விமர்சனங்களை மிக அண்மைக்காலத்தில் சில இணையதளங்களில் வெளியாகியிருந்தது.
இப்படியான பல செயற்திட்டங்களை, முன்பு பல வருடங்களாக, சிறிலங்கா அரசு ஆதரவு கொழும்பு ஆங்கில, சிங்கள ஊடகங்கள், தமிழர் மனிதர் உரிமைகள் மையம், அதனது பொதுச் செயலாளரான கிருபாகரன் பற்றியும் வெளியிட்டிருந்தனர். இறுதியில், ஐ.நா. ஊடகப்பிரிவின் தலையிட்டினால், கொழும்பு ஊடகங்கள் கிருபாகரனிடம் மன்னிப்பும் கோரினர்.
மிக அண்மையில் ச. வி.கிருபாகரனுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில், ஏதேச்சையான விசமத்தனமான குற்றச்சாட்டுகளை, கட்டுரை செய்தி வடிவில் வெளியிட்ட சில இணையதளங்கள் மீது, சட்ட நடவடிக்கைக்கான வேலை திட்டங்கள் கிருபாகரனும், தமிழர் மனிதர் உரிமைகள் மையமும் ஆரம்பித்துள்ளனர்.
ஏற்கனவே பிரான்ஸிலிருந்து இயக்கப்படும் ஓர் இணையதளம் மீது, சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதேவேளை, பிரித்தானியாவிலிருந்து இயங்கும் இன்னுமொரு இணையதளம் மீது சட்ட நடவடிக்கைக்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிருபாகரன் பற்றிய அவதூறான கட்டுரையை, வெளியிட்ட ஒரு இணையதளம், சில மணி நேரத்தின் பின்னர் கட்டுரையை வாபஸ் பெற்றிருந்தாலும், இதற்கான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பிரித்தானிய சட்டத்தில் இடம் உள்ளது.
தமிழர் மனிதர் உரிமை மையமும், இதன் பொதுச் செயலாளரான கிருபாகரனும், கடந்த 24 வருடங்களாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் காரணிகளினால் பதிக்கப்பட்ட- இறந்தவர், கைது செய்யப்பட்டோர், சித்திரவதை செய்யப்பட்டோர், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டோர், போன்றோரின் விபரங்களை, சர்வதேசத்திற்கும் ஐ.நா.மனித உரிமை பிரிவிற்கும் வழங்கி வந்துள்ளார்கள் என்பதற்கு ஆயிரம் ஆதாரங்கள் உள்ளன. இதை தெரியாதோர் யாரும் இருப்பின், இவற்றை சிறிலங்கா அரசிடமே வினாவி அறிந்து கொள்ளலாம்.
கிருபாகரனின் இச் செயற்பாட்டை, இந் நாளில் தமது பெயருக்கும் புகழுக்கும் ஐ. நா. மனித உரிமை சபையில், தமது “வரவை” பதிவு செய்வோர் சிலர், தமது புகழ் பாடும் செயற்பாட்டிற்கு, கிருபாகரன் ஓர் தடைக்கலாக இருப்பதாக எண்ணுகின்றனர்.
இச் சட்ட நடவடிக்கை முடிவுக்கு வரும் கட்டத்தில், பல லட்சம் யூரோ அபராதத்துடன் கூடிய, சில வருட சிறை தண்டனையும் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இச் சட்ட நடவடிக்கையில், இந்த இணையதளத்தினால் ஏற்கனவே பதிப்பிற்குள்ளான, சில கல்விமான்கள், முக்கிய ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள் போன்ற பலர் சாட்சியமளிக்கவுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdev7.html
Geen opmerkingen:
Een reactie posten