தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 5 augustus 2014

ஹரின் பெர்னாண்டோ பதவி விலகினார்


சீனாவுக்கு அனுதாபம்! பலஸ்தீனத்துக்கு உதாசீனம்! ஜனாதிபதியின் புதிய நிலைப்பாடு
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 07:24.27 AM GMT ]
சீனாவில் இடம்பெற்ற நில அதிர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.
சீனாவின் யுனான் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நில அதிர்வின் காரணமாக உயிர், உடைமை இழப்புகள் ஏற்பட்டன.
இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சீன ஜனாதிபதி ஷீ பின் பிங் இன்னுக்கு அனுதாபச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்தச் செய்தியில் நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துள்ள ஜனாதிபதி ,அந்த மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க இலங்கை தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பலஸ்தீனத்தில் இஸ்ரேலின் கொடூர தாக்குதல்கள் காரணமாக காயமடைந்த பொதுமக்கள் தொடர்பில் இலங்கை தொடர்ந்தும் மௌனமாக உள்ளது.
அங்குள்ள மக்கள் அடிப்படை மருத்துவ உதவிகளின்றி தவிப்பதாகவும், உடனடி உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஜனாதிபதியின் நீண்ட கால நட்பு நாடான பலஸ்தீன மக்களின் அவலம் தொடர்பில் ஜனாதிபதி தற்போது உதாசீனப் போக்கை கடைப்பிடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1973ல் மகிந்தவிற்கு சொன்ன இரகசியம்! நிறைவேற்றுகிறது சீனா
சீனாவுடன் நெருங்கிய உறவை பேணும் இலங்கை அரசாங்கம், திருகோணமலையில் அமைந்துள்ள சீனன்குடாவின் 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பை சீனாவுக்கு தாரைவார்க்க தயாராகி வருவதாக கடந்த வாரம் பரவரலாக பேசப்பட்டு வந்தது.
இது பற்றிய திறந்த ஆய்வொன்றை கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுதர்மா, லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியினூடாக பகிர்ந்து கொண்டார். அவர் கூறிய கருத்துக்களில்,

சீனன்குடா விவகாரம் இலங்கையின் வரலாற்றை மாற்றியெழுதப் போகும் சம்பவங்களின் அணிவகுப்பில் ஒரு அங்கமே தவிர. இதுவே முழுமையாக இலங்கையை மாற்றப் போகும் விடயமல்ல.
சர்வதேசத்தின் பிடியிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள இலங்கை சீனாவையும் இந்தியாவையும் வளைத்துப் போடுகின்ற செயற்பாட்டின் ஒரு அங்கமாக, சீனாவின் பிரசன்னத்தை நிரந்தரமாக்குவதன் ஒரு அங்கமாக இந்த சீனன்குடா விவகாரத்தைக் கூறலாம்.
சீனாவின் எப்-7 என்ற சண்டை விமானங்கள் 12ம், இலகு ரக வான்படை போக்குவரத்து விமானங்கள் 21ம், ஆக மொத்தம் 33 விமானங்கள் தற்போது இலங்கையின் பாவனையில் இருக்கிறது. இவற்றை திருத்துவதற்கான நிலையம் என்று கூறியே இத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
இந்தியா, சம்பூர் அனல் மின்நிலையம், மற்றும் திருமலைத் துறைமுகத்திலுள்ள எண்ணெய் தாங்கிகளில் 15 என திருமலை மாவட்டத்தில் முதலிட்டுள்ளது. எனவே இந்தியாவை பொறுத்தவரை இந்த சீன விமானப் பாராமரிப்புக் குறித்து அக்கறை செலுத்தாது.
இலங்கையில் 2009ம் ஆண்டு போர் முடிவுற்றதில் இருந்து இன்றைய திகதிவரை சீனா 16 ஆயிரம் மில்லியன் டொலர்களை பல திட்டங்களில் நீண்ட கால அடிப்படையாக முதலிட்டுள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையம், விமான நிலையம் அமைத்தல், பெருந்தெருக்கள் போடுதல் போன்றவையும் இத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
1973ல் எதிர்காலத் தலைவர்கள் என அடையாளம் காணப்பட்ட 10 பேரை சீனா அழைத்தது. அந்தக் குழுவிற்கு மகிந்த ராஜபக்சவே தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்தியிருந்தார்.
சுமார் ஒரு மாத காலம் தங்க வைத்து தங்களது நாட்டின் வளர்ச்சி மற்றும் உலக அரங்கில் தங்கள் நாடு எவ்வாறு இருக்கப் போகிறது என்ற எதிர்வுகூறல் உள்ளிட்ட இதுவரை ஊடகத்தின் பார்வைக்கு வராத முக்கிய விடயங்களை இந்த நிஜத்தின் தேடல் ஆய்வு நிகழ்ச்சியின் போது பகிர்ந்து கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyITZLceuy.html


அரசாங்கம் சித்த சுவாதீனமற்று செயற்படுகின்றது: வீரவன்ச குற்றச்சாட்டு
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 08:00.39 AM GMT ]
அரசாங்கம் சித்த சுவாதீனமற்று செயற்பட்டு வருவதாக அமைச்சர் விமல் வீரவன்ச கடுமையான குற்றச்சாட்டை ஒன்றை முன்வைத்துள்ளார்.
12 அம்ச யோசனைத் திட்டமொன்று முன்வைக்கப்பட்ட போதிலும், இதுவரையில் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை.
யோசனைத் திட்டம் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும், இதுவரையில் அந்தக் குழு எவ்வித பதில்களையும் அளிக்கவில்லை.
அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டு வரும் தீர்மானங்களில் உடன்பாடு கிடையாது.
உதாரணமாக காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வெளிநாட்டு நிபுணர்கள் ஆலோசனை வழங்குதல்.
இது குறித்து எமது கட்சியின் கருத்து கோரப்படவேயில்லை.
எங்களது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் காட்டி வரும் உதாசீன போக்கு உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் ஊவா மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடத் தீர்மானித்தோம்.
எங்களது கட்சியை விடவும் எங்களது கட்சியிலிருந்து விலகிச் சென்ற உறுப்பினர் ஒருவருக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளமை வருத்தமளிக்கின்றது.
அரசாங்கத்தை தோற்கடிக்கும் சக்திகள் வெளியே மட்டும் இல்லை உள்ளேயும் இருக்கின்றன.
அரசாங்கத்தை தோல்வியடைச் செய்வதே இந்த குழுவின் நோக்கமாக அமைந்துள்ளது.
அரசாங்கத்தின் எல்லா நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு ஏற்றுக்கொண்டால் அது அரசாங்கத்தை அழிப்பதற்கு உதவுவதற்கு நிகரானதாகும்.
பிழையை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்தி வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டும். எதிர்க்கட்சிகள் பலத்தை அதிகரித்து வருகின்றன. இதனை அரசாங்கம் புரிந்துகொள்ளத் தவறியுள்ளது.
இவ்வாறான நிலைமை நீடித்தால் அரசாங்கம் பாரிய பின்னடைவை நோக்கிச் செல்வதனை தவிர்க்க முடியாது என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்  போது வீரவன்ச இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITZLceu0.html


கோப் அறிக்கையை பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கிறார் டியூ. குணசேகர
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 08:46.59 AM GMT ]
கோப் அறிக்கை எனப்படும் அரச நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் இன்று சமர்பிக்கப்படவுள்ளது.
இந்தக் குழுவின் தலைவர் டியூ. குணசேகர இந்த அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார்.
2014ஆம் ஆண்டுக்கான கோப் இடைக்கால அறிக்கையில் பொது நிறுவனங்களின் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் ஆராயப்பட்ட தகவல்கள் அடங்கியுள்ளது.
அடுத்த இடைக்கால அறிக்கை அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை கோப் குழுவின் இறுதி அறிக்கை இவ்வருட இறுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyITZLceu2.html


ஹரின் பெர்னாண்டோ பதவி விலகினார்
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 09:42.47 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ சற்று முன்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
எதிர்ரும் ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் அவர் இவ்வாறு பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஹரின் பெர்னாண்டோ அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளராக ஹரின் பெர்னாண்டோ போட்டியிடுவார் என தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலும் நாளை ஹரின் பெர்னாண்டோ வேட்பு மனுக்களை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உதவிகளை வழங்கிய சபாநாயகர் ஆளும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக அவர் நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் நோக்கில் தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITZLceu3.html



Geen opmerkingen:

Een reactie posten