தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 2 augustus 2014

கோத்தபாய மீது போர்க் குற்றச்சாட்டை சுமத்த அமெரிக்கா முயற்சி? - சட்டங்கள் குறித்தும் பரிந்துரை

இந்தியாவின் சிங்கள இனவெறி ஆதரவுக் கொள்கையே முதலமைச்சரை கொச்சைப்படுத்தியமைக்கு காரணம்!- மணியரசன், கருணாநிதி கண்டனம்
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 02:20.07 AM GMT ]
இலங்கை அரசு தமிழக முதலமைச்சரைக் கொச்சைப்படுத்தியதற்கான மூலகாரணம் இந்திய அரசின் சிங்கள இனவெறி ஆதரவுக் கொள்கையே. இவ்வாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்
வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு,
தமிழக மீனவர்களை அன்றாடம் தளைப்படுத்தி அவர்களின் மீன்களைக் கொள்ளை யிட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டிருக்கும் சிங்கள இனவெறி அரசின் மீது நடவடிக்கை எடுத்து இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக முதலமைச்சர் செல்வி செயலலிதா அவர்கள் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு அவ்வபோது கடிதம் எழுதி வருகிறார்.
இதனை கொச்சைப்படுத்தும் வகையில், தரக் குறைவாக படங்கள் போட்டும் வசனங்கள் எழுதியும் ஒரு கட்டுரையை இலங்கை அரசின் படைத்துறை இணையதளம் வெளியிட்டுள்ளது.
சிங்கள அரசின் இந்த சின்னத்தனமான பண்பாட்டை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சிங்கள ஆளும் வர்க்கம் எந்த அளவு பண்பு கெட்ட மனநிலையில் இருக்கிறது என்பதற்கும் தமிழினத்தை இழிவுபடுத்தும் அதன் இனவெறி இன்னும் அடங்கவில்லை என்பதற்கும் மேற்படி கட்டுரை மற்றமோர் எடுத்துக்காட்டு.
கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவிப்பிள்ளை அவர்கள் இலங்கை சென்று இனஅழிப்புப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளையும் தமிழ் மக்களையும் சந்தித்த பின் இலங்கை அரசு குறித்து ஆக்கபூர்வமான சில திறனாய்வுகளைக் கூறினார்.
அதற்காக  ராஜபக்ச தலைமையில் உள்ள ஓர் அமைச்சர் நவிப்பிள்ளை இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் சம்மதித்தால் நான் அவரைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கொச்சைப்படுத்தி அறிக்கை வெளியிட்டு தனது கீழ்த்தர மனநிலையைக் காட்டிக்கொண்டார்.
சிங்கள இனவெறியர்கள் திருந்தும்படி உலக நாடுகள் உருப்படியான நடவடிக்கை எடுக்காததால் அவர்களின் அடாவடித் தனங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
இந்திய அரசு, ராஜபக்ச அரசுடன் மிகவும் நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்ளத் தீவிரமாக முனைந்துள்ளது.
இந்திய இலங்கை உறவுகளை வளர்க்கும் தூதுவர்களாக தமிழினத்தின் நிரந்தரப் பகைவர்களான சுப்பிரமணியசாமி, சேசாத்திரி சாரி இருவரையும் நரேந்திர மோடி அமர்த்தியிருப்பது புதிய நடுவண் அரசின் சிங்கள ஆதரவுப் போக்கின் தீவிரத்தைக் காட்டுகிறது.
இதனால் ஊக்கம் அடைந்த சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் தங்களின் இராணுவ இணையதளத்தில் தமிழக முதல்வர், பிரதமர் அவர்களுக்கு, எழுதும் அலுவல் வழிப்பட்ட கடிதங்களைக் கொச்சைப்படுத்தி குதூகலிக்கிறார்கள்.
இந்திய அரசு தனது தீவிரமான சிங்கள ஆதரவுப் போக்கைக் கைவிட்டு, தமிழ் இனம் தனது பகை இனம் இல்லை என்ற புதிய முடிவுக்கு வந்தால் ஒழிய சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் தமிழினப் பகைச் செயல்களும், தமிழக முதலமைச்சர் அவர்களை இழிவுப்படுத்தும் வன்மமும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
எனவே இலங்கை அரசு தொடர்பான இந்திய அரசின் கொள்கையை மாற்றி அமைக்கவும், சுப்பிரமணிய சாமித் தரகுக் கும்பலை இந்திய இலங்கை பேச்சு வார்த்தையிலிருந்து விடுவிக்கவும், இந்தியா முன் வரவேண்டும். இந்திய அரசு புதிய முடிவுகளுக்கு வர தமிழக மக்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டிய தருணம் இது என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.


இன்னணம்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.
அறிக்கை வெளியீடு:
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி,
ஜெயலலிதாவுடன் முரண்பாடுதான்! ஆனால் இலங்கையின் செயலை ஏற்க முடியாது: கருணாநிதி கண்டனம்
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்தில் தமிழக முதல்வர் மற்றும் இந்திய பிரதமரை பற்றி வெளியிடப்பட்ட கட்டுரை தொடர்பில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மத்திய அரசாங்கம் தமது கடுமையான செய்தியை இலங்கைக்கு தெரிவிக்க வேண்டும் என்று கருணாநிதி கோரியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கருணாநிதி, இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், தமிழக மீனவர்களின் விடுவிப்பு தொடர்பாகவே தமிழக முதல்வர் இந்திய பிரதமருக்கு கடிதங்களை எழுதினார்.
எனினும் அந்த கடிதங்களை கொச்சைப்படுத்தும் வகையில் இலங்கை அரசாங்கம் நடந்து கொண்டமையானது, இலங்கை அரசாங்கத்தின் நோக்கத்தை தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளது என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக்கழக தலைமைக்கும் தமக்கும் முரண்பாடுகள் இருக்கின்றபோதும் இலங்கை அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு தாம் ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcgx2.html

இத்தாலிய குறும்படப் போட்டியில் ஈழத்தமிழனுக்கு முதல் பரிசு!
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 02:42.14 AM GMT ]
ஈழத்து தமிழ் திரைப்படத்துறையில் இன்னுமொரு மைல்கல்லாக அமைந்திருப்பது  “மொழிப்பிறழ்வு” ( “MISINTERPRETATION”) எனும் குறுந்திரைப்படம், அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி திரைப்பட கல்லூரி ஒருங்கமைத்திருந்த இத்தாலிய குறும்படப் போட்டியில், பல மொழி குறுந்திரைப்படங்களுடன் போட்டியிட்டு முதலாம் பரிசை தட்டிச்சென்றுள்ளதாகும்.
இப்படத்தில், ஒரு ஈழத்து அகதிப் பெண்ணின் துன்பங்கள் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படியான ஈழத்து கதையை சொல்ல வேண்டிய கோணத்தில் இருந்து, சரியான கதை தெரிவுடனும், தெளிவுடனும், கலாச்சார சீர்கேடுகள், வன்முறைகள் போன்றவை இல்லாமல் மிக அழகான முறையில் இயக்கி அமைத்து இருக்கிறார் இயக்குனர் ஈழன் இளங்கோ அவர்கள்.
“MISINTERPRETATION” பற்றி சொல்ல வேண்டுமாக இருந்தால், காலத்துக்கு தேவையான கதை, ஈழத்து உறவுகளின் உண்மையை கொண்டுவந்து வெளிநாட்டவர்களுக்கும் தெரியப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதைவிட சிறந்த ஒளிப்பதிவு, பின்ணணி இசை, காட்சி அமைப்பு என்று தமிழ் சினிமாவைத் தாண்டி சிறப்பாக செய்துள்ளார்கள், நடித்த கலைஞர்கள் சிறப்பாக தங்களது பங்கை செய்து சிறப்பித்து உள்ளார்கள். ஈழத்து கலைஞர்கள் மட்டுமின்றி வெளிநாட்டுக் கலைஞர்களையும் சிறந்த முறையில் இயக்கி இருக்கிறார் இயக்குனர்.
இவர் பிரான்ஸ் நாட்டில் இயக்கி நடித்த “தொடரும்” எனும் ஈழத்து மக்களின் பிரிவுளையும் தேடல்களையும் சித்தரிக்கும் மற்றுமொரு குறுந்திரைப்படம் இதே போட்டியில் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இவருடைய வேறு பல படைப்புகள் ஏற்கனவே சாதனை படைத்திருப்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.
அவுஸ்திரேலியாவில் முதல் தமிழ் திரைப்படமாக இவர் இயக்கிய “இனியவளே காத்திருப்பேன்” எனும் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
இவரின் அடுத்த படைப்பாக பல நாடுகளில் இருந்து ஈழத்து, வெளிநாட்டு, இந்திய கலைஞர்களையும் தொழில்நுட்பவாதிகளையும் உட்கொண்டு ஈழன் இளங்கோ கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கவிருக்கும் “பாரி” எனும் முழுநீள திகில் திரைப்படம் விரைவில் சாதனை படைத்து ஈழத்து தமிழர் திரைப்பட வரலாற்றில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.
முயற்சியில் வெற்றிபெற ஈழன் இளங்கோவையும் குழுவினரையும் வாழ்த்துகிறோம்.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcgx3.html
அரசாங்க அரசியல்வாதிகளின் இரகசியங்களை வெளியிடுவேன்: சம்பிக்க எச்சரிக்கை
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 03:15.55 AM GMT ]
அரசாங்க அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதமான இரகசிய பரிமாற்றங்கள் தொடர்பில் தகவல்களை வெளியிடப் போவதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.
“பவர் என்ட் பொலிட்டிக்கல் பவர்” என்ற தலைப்பில் அமைச்சர் தொகுத்துள்ள நூலில் இந்த விடயங்கள் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நூல் எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதியன்று கொழும்பில் வெளியிடப்படவுள்ளது.
இதில் முக்கியமாக பெற்றோலிய துறையில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் இதனால் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நட்டங்கள் வெளிக்கொணரப்படவுள்ளன.
அத்துடன் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் எவ்வாறு தடுக்கப்பட்டன. ஆவணங்கள் காணாமல் போனமை, உட்பட்ட பல விடயங்களும் இந்த நூலில் அடங்கியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcgx4.html
கோத்தபாய மீது போர்க் குற்றச்சாட்டை சுமத்த அமெரிக்கா முயற்சி? - சட்டங்கள் குறித்தும் பரிந்துரை
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 04:15.02 AM GMT ]
இலங்கையின் இறுதிப்போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீது குற்றம் சுமத்த அமெரிக்காவின் சில பிரிவுகள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்பு தொடர்பான இணை ஆசிரியர் ராயன் குட்மேன் அண்மையில் காங்கிரஸில் மேற்கொண்ட விளக்கம் ஒன்றில் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டில் அமெரிக்க பிரஜை என்ற அடிப்படையில் கோத்தபாயவின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று குறிப்பிட்டார்.
1966ம் ஆண்டு அமெரிக்காவின் போர்க்குற்ற சட்டத்தின்படி கோத்தபாய போன்ற அமெரிக்க பிரஜைகளுக்கு பொருத்தமாக இருக்கும் என்று அவர் வாதிட்டார்.
இந்தநிலையில் குற்றச்சாட்டுக்களுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லாதுபோனால் குறித்த அமெரிக்க சட்டத்தின்படி அமெரிக்காவின் நீதி திணைக்களம் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று ராயன் குட்மேன் ஆலோசனை வெளியிட்டார்.
கோத்தபாய மீது குற்றம் சுமத்தக்கூடிய அமெரிக்க சட்டங்கள் குறித்து பரிந்துரை
குற்றவியல் சட்டத்தின் கீழ் கோத்தபாய மீது சட்டநடவடிக்கை எடுக்க முடியாதுபோனால் குடியியல் சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் ராயன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்காக வெளிநாட்டில் உள்ள அமெரிக்க பிரஜை ஒருவர் சித்திரவதையில் ஈடுபட்டால் (18 I.S. Code § 2340A) என்ற சட்டத்தின் அடிப்படையிலும், அமெரிக்க- இலங்கை இரட்டை குடியுரிமையைக் கொண்ட ஒருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் {18 I.S. Code § 2332} என்ற சட்டத்தின் அடிப்படையிலும், உளவாளி என்ற குற்றச்சாட்டு தொடர்பில் (18 I.S. Code § 1512) என்ற சட்டத்தின் அடிப்படையிலும், சாட்சிக்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் {18 I.S. Code § 1513} என்ற சட்டத்தின் அடிப்படையிலும் கோத்தபாய மீது குடியியல் ரீதியான சட்ட நடவடிக்கையை எடுக்கலாம் என்றும் ராயன் குட்மேன் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcgx6.html

Geen opmerkingen:

Een reactie posten