[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 12:05.49 AM GMT ]
கல்கமுவ என்ற இடத்தில் வைத்து புலனாய்வு பிரிவினரால் சிறுவன் மீட்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
எனினும் சிறுவனை கடத்தியவர்கள் யார் என்ற விடயம் இன்னும் வெளியாகவில்லை.
இதேவேளை இந்த சம்பவமானது நாட்டில் துஸ்பிரயோகங்களும் வன்முறைகளும் அதிகரித்துள்ளமையை எடுத்துக்காட்டுவதாக ஐக்கிய தேசியக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தமைக்கு ஜனாதிபதி முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
17வது அரசியலமைப்பு ரத்துச்செய்து பொலிஸ்துறையை அரசாங்கத்தின் அங்கமாக ஆக்கிக்கொண்டமையும் இந்த நிலைமைக்கு காரணம் என்று ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது
அநுராதபுரத்தில் வைத்து நேற்று மீட்கப்பட்ட நான்கு வயது சிறுவனை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவர் சிறுவனின் சொந்தக்காரர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் தந்தையார் அரிசி ஆலை ஒன்றின் சொந்தக்காரராவார்.
இந்தநிலையில் அவரை தாக்கிய பின்னரே சிறுவன் கடந்த 28ம் திகதி தமது வீட்டில் இருந்து கடத்திச்செல்லப்பட்டார்.
இதனையடுத்து நேற்று இரவு கல்கமுவ என்ற இடத்தில் வைத்து தமிந்து யாசென் என்ற குறித்த சிறுவன் மீட்கப்பட்டார்.
இதேவேளை சிறுவனை கடத்தியவர்கள் முதலில் 10 மில்லியன் ரூபாய்களை கப்பமாக கோரியுள்ளனர். எனினும் பின்னர் அதனை 3.5 மில்லியன் ரூபாய்களாக குறைத்ததாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcgw7.html
இலங்கையின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டது இந்தியா! மேலதிக நடவடிக்கை தேவையாயின் ஆராயப்படும்!
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 03:37.30 AM GMT ]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் கட்டுரையின் தலைப்பும், அதற்கான படமும் உள்ளடக்ககமும் நேற்று வெளியிடப்பட்டிருந்தது.
இந்திய அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த கட்டுரையை பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்திலிருந்து உடனடியாக நீக்கிக் கொண்டதுடன், பகிரங்கமாக நிபந்தனையற்ற மன்னிப்பை கோரியுளள்ளது.
தனது மன்னிப்புக் கடிதத்தினையும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் முதல் பக்கத்தில் வெளியிட்டது.
இந்த நிலையில், இலங்கையின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சயிட் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
குறித்த கட்டுரை வெளியான உடனேயே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இராஜதந்திர ரீதியில் எதிர்ப்பை வெளியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மன்னிப்பு குறித்து திருப்தி! மேலதிக நடவடிக்கை தேவையானால் ஆராயப்படும்- இந்தியா
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்தில் தமிழக முதல்வர் மற்றும் இந்திய பிரதமர் தொடர்பில் வெளியான கட்டுரைக்காக பாதுகாப்பு அமைச்சு மன்னிப்பு கோரியமை தொடர்பில் இந்திய அரசாங்கம் திருப்தி வெளியிட்டுள்ளது. இந்த கட்டுரை பின்னர் பாதுகாப்பு இணையத்தளத்தில் இருந்தும் அகற்றப்பட்டது.
ஜெயலலிதா மோடிக்கு எழுதும் காதல் கடிதங்களால் எதனை சாதிக்கமுடியும் என்ற தலைப்பில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்தில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.
இது குறித்து இந்திய தரப்பு ஆட்சேபனை வெளியிட்டமையை அடுத்து அதனை இணையத்தளத்தில் இருந்து அகற்றி இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு, எவ்வித அதிகாரத்துவ அனுமதியும் இன்றி இந்த கட்டுரை பிரசுரிக்கப்பட்டதாகவும் அது இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கட்டுரை அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தது.
இதற்காக ஜெயலலிதாவிடமும் மோடியிடமும் பகிரங்க மன்னிப்பு கோருவதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் தெரிவித்திருந்தது.
இது குறித்து கருத்துரைத்துள்ள இந்திய வெளியுறவு பேச்சாளர் சயிட் அக்பருதீன் குறித்த கட்டுரை தொடர்பில் இந்தியா உடனடியாக இராஜதந்திர ரீதியில் செயற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இது தொடர்பில் உடனடியான நடவடிக்கையை மேற்கொண்டது.
இதன்மூலம் இந்தியாவின் நோக்கம் நிறைவேற்றப்பட்டது. மேலதிக நடவடிக்கைகள் தேவைப்படுமாயின் அது தொடர்பில் ஆராயப்படும்.
எனினும் விடயம் உடனடியாக உரிய தரப்புக்கு அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறித்து இந்திய அரசாங்கம் திருப்திகொண்டுள்ளது என்று அக்பருதீன் குறிப்பிட்டார்.
மேலதிக நடவடிக்கைகள் தேவைப்படின் அது தொடர்பில் இந்தியா ஆராயும் என்றும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcgx5.html
Geen opmerkingen:
Een reactie posten