[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 07:19.10 AM GMT ]
இந்த நபர் கடந்த சில தினங்களாக நகரில் உள்ள வீடுகளுக்குள் புக முயற்சித்த போதிலும் வீடுகளில் உரிமையாளர்கள் அதிகாலையில் எழுந்திருந்ததால் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.
முகம் தெரியாதபடி முழுமையாக முகத்தை கறுப்பு நிற துணியால் கட்டியபடி, கைகளில் கறுப்பு கையுறை அணிந்து இந்த நபர் வீடுகளுக்குள் நுழைய முயற்சித்துள்ளதாக கண்ணில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகாலையில், வீடுகளில் பெண்கள் எழுந்து சமையல் அறையில் சமைக்கும் பணிகளை தொடங்கி விடுவதால் அந்த நபர் தப்பிச் சென்று விடுவதாக நகர வாசிகள் கூறுகின்றனர்.
திருடும் நோக்கில் இந்த நபர் வீடுகளுக்குள் வர முயற்சித்திருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் நிஞ்சா சண்டைகாரர் போல் கறுப்பு துணியால் முகத்தை மூடி கொண்டு வீடுகளுக்குள் நுழைய முயற்சித்து வரும் இந்த நபரால் நகரில் பெரும் பீதி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் விளக்கமறியலில்
பொலிஸ் அதிகாரியின் கடமைக்கு தடையேற்படுத்தி, பொது மகன் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள குச்சவெளி பிரதேச சபையின் தலைவர் முகமது முபாரக்கை நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குச்சவெளி பதில் நீதவான் திரு செந்தில்நாதன் இன்று புதன்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சந்தேக நபரான பிரதேச சபைத் தலைவர் கடந்த 31ம் திகதி தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது புல்மோட்டை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி பிரதேசசபைத் தலைவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த முயற்சித்துள்ளார்.
அப்போது பிரதேச சபைத் தலைவர் பொலிஸ் அதிகாரியை திட்டி அச்சுறுத்தியுள்ளார்.
அதேவேளை கடந்த 2 ம் திகதி பிரதேச சபைத் தலைவர் முகமது அஸ்வர் என்ற பொது மகனை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyITaLdno2.html
5 சிரேஷ்ட ஊடவியலாளர்களுக்கு தங்க விருது
[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 07:22.30 AM GMT ]
இலங்கை பத்திரிகை ஆசிரியர் சபை ஒன்றியத்தின் விருது வழங்கும் நிகழ்வு இன்று மாலை கல்கிஸ்சை ஹொட்டலில் நடைபெறவுள்ளது.
இதில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான இராசையா செல்வராஜா, அஜந்தா ரணசிங்க, சொலமன் ரணசிங்க, ஹேன் அபேசேகர, சிரேஷ்ட புகைப்பட ஊடகவியாளர் பந்து எஸ் கொடிக்கார ஆகியோருக்கு தங்க விருது வழங்கப்பட உள்ளது.
இராசையா செல்வாராஜா, தினபதி, சிந்தாமணி, வீரசேகரி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியதுடன் சக்தி எப்.எப் வானொலியின் செய்திப் பிரிவின் ஆரம்ப முதன்மை செய்தியாசிரியருமாவார்.
http://www.tamilwin.com/show-RUmsyITaLdno3.html
வடமாகாண கல்வியமைச்சிற்கு முன்னால் யாழ். தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 07:29.37 AM GMT ]
யாழ். மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள், தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இன்று காலை 11 மணியளவில் கல்வியங்காடு, ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் முன் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்கள், பல ஆண்டுகளாக பணி புரியும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டுமென்று இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நிரந்தர நியமனம் வழங்கத் தவறும் பட்சத்தில் வடக்கு மாகாண சபையின் முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்போம் என்றும் தொண்டர் ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITaLdno4.html
Geen opmerkingen:
Een reactie posten