[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 06:54.02 AM GMT ]
ஊவா மாகாணசபைக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் காலம் இன்று நண்பகலுடன் பூர்த்தியாகியுள்ளது.
வேட்பு மனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் தேர்தல் ஆணையாளர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
ஊவாவில் முஸ்லிம் கட்சிகள் இணைந்து போட்டி
ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் மலையக முஸ்லிம் பேரவை ஆகியன இணைந்து போட்டியிட உள்ளன.
இந்த கட்சிகள் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் வலை சின்னத்தில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளன.
ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இன்று மதியம் 12 மணி வரை கையளிக்க முடியும்.
ஊவா மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்து முஸ்லிம் கட்சிகள் கடந்த 4 ஆம் திகதி பதுளையில் கூடி ஆராய்ந்தன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தை மலையக முஸ்லிம் பேரவை ஒழுங்கு செய்திருந்தது.
ஊவா மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் வசித்து வருவதுடன் அவர்களின் பெரும்பாலானவர்கள் பதுளை மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இதன் காரணமாக முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து பதுளையில் போட்டியிட முடிவு செய்தன.
ஊவா மாகாண முதலமைச்சர் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்
ஊவா மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாக போட்டியிடும் சஷீந்திர ராஜபக்ஷ மற்றும் ஹரின் பெர்ணான்டோ ஆகியோர் இன்று தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிடும் ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மொனராகலை மாவட்ட செயலகத்தில் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் மொனராகலை சிறிகலவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் சஷீந்திர ராஜபக்ஷவின் தந்தையான சபாநாயகர் ஷமல் ராஜபக்ஷ, சித்தப்பாவான பசில் ராஜபக்ஷ ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் சில மாகாணங்களின் முதலமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஊவா மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ பதுளை மாவட்ட செயலகத்தில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
ஹரின் பெர்ணான்டோ மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyITaLdno0.html
உலகை அச்சுறுத்தும் எபோலா: இலங்கைக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை
[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 06:56.32 AM GMT ]
உயிர்கொல்லி நோயான எபோலா வைரஸ் தற்பொழுது உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் உயிர்கொல்லி நோயான எபோலா வைரஸ் இலங்கைக்குள் நுழைவது மற்றும் பரவுவதைத் தடுக்க விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நோய்க்கென விசேட மருத்துவ குழுக்கள், சுகாதாரப் பிரிவினர் விமான நிலையங்களில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை கடந்த திங்கட்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி உலகில் 887 பேர் இந்த வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த உயிர் கொல்லி நோய் உலகின் மேற்கு ஆபிரிக்க நாடுகளான கினியா, சியாராலியோன், நைஜீரியா மற்றும் லைபீரியாவில் மிக வேகமாகப் பரவிவருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கணக்கெடுப்புப்படி 1976 இல் கொங்கோவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 280 பேர் பலியாகினர் என்றும், அதிகப்படியாகக் கொங்கோவிலேயே இந்த வைரஸ் தாக்கம் இருந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபிரிக்க நாடுகளை தாக்கி வந்த இந்த வைரஸ் தற்பொழுது உலக நாடுகளுக்கும் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyITaLdno1.html
Geen opmerkingen:
Een reactie posten