இலங்கையில் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள 15 ஆயிரம் சட்டத்தரணிகள்: ரவிந்து குணவர்தனவின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 07:54.52 AM GMT ]
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய எதிர்நோக்கியுள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக சட்டம் கையாளப்படும் விதத்தை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் வெறுமனே உபுல் ஜயசூரியவிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக கருத முடியாது. நாட்டில் உள்ள 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சகோதர சட்டத்தரணிகளுக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தலாகும்.
பல பொது நலன் தொடர்பான விடயங்களில் ஈடுபட்டதன் காரணமாவே சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அவரது வாழ்க்கைக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால், அது முழு சட்டத்தரணிகள் சமூகத்திற்கு ஏற்பட்ட தீங்காக கருதப்பட வேண்டும்.
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளரது தலையீடு இன்றி பொலிஸ் சட்டத்தின் 22 பிரிவின் படி பொலிஸார் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு பாதுகாப்பு வழங்க முடியும் எனவும் திலக் மாரப்பன சுட்டிக்காட்டியுள்ளார்.
ரவிந்து குணவர்தனவின் பிணை கோரிக்கையை நிராகரித்தது மேல் நீதிமன்றம்
பம்பலப்பிட்டியை சேர்ந்த வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகன் ரவிந்து குணவர்தனவின் பிணை கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளை கொண்ட விசேட அமர்வின் முன் வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே பிணை கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.
ரவிந்து குணவர்தன சார்பில் ஆஜரான சட்டத்தரணி தனது தரப்புவாதிக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
எனினும் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிஸ்ட்டர் ஜெனரல் அயேஷா ஜினசேன, கொலை சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்று வருவதால், சந்தேக நபரை மேலும் மூன்று மாதங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து ரவிந்து குணவர்தனவை மேலும் மூன்று மாதங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITaLdno5.html
கொலன்னாவ நகர சபை தலைவர் தலைமறைவு- குராம் ஷேக் கொலைக் குற்றவாளிக்கு சிறையில் விசேட சலுகை
[ புதன்கிழமை, 06 ஓகஸ்ட் 2014, 07:58.40 AM GMT ]
அவருக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நேற்று நள்ளிரவு திரும்ப பெறப்பட்டுள்ளது.
வெள்ளை வானில் சென்றவர்களால் பல முறை நகர தலைவர் கடத்த முயற்சிக்கப்பட்டதன் காரணமாவே அவருக்கு இந்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நகர சபைத் தலைவர் கொலன்னாவ பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை கைது செய்ய பொலிஸார் தொடர்ந்தும் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே கொலன்னாவ நகர சபைக்கு எதிரில் தலைவரின் ஆதரவாளர்கள் மற்றும் நகர சபை ஊழியர்கள் அவருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
நகர சபைத் தலைவருக்கும் உப தலைவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலுக்கு பின்னர் இந்த நிலைமை உருவாகியுள்ளது.
இவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் எனவும் கூறப்படுகிறது.
ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர குற்றம் சுமத்தி வருகின்றனர்.
தங்காலை பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு சிறையில் விசேட சலுகை
தங்காலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சம்பத் விதான பத்திரனவிற்கு வெலிக்கடைச் சிறைச்சாலையில் விசேட சலுகைகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2011ம் ஆண்டு நத்தார் பண்டிகையன்று பிரிட்டன் பிரஜை குராம் ஷேக்கை கொலை செய்தமை மற்றும் அவரது ரஸ்ய காதலி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்காக சம்பத் விதான பத்திரன உள்ளிட்ட நான்கு பேருக்கு 20 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பத் விதான பத்திரனவிற்கு விசேட சலுகைகள் சிறைச்சாலையில் அளிக்கப்பட்டுள்ளது என சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஏனைய கைதிகளுக்கு கடுமையான வேலைகள் வழங்கப்படுவது வழமையாகும், எனினும் தங்காலை பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு சிறைச்சாலையில் இவ்வாறு கடுமையான வேலைகள் எதுவும் வழங்கப்படுவதில்லை.
ஏனைய கைதிகள் கடுமையாக உழைக்கும் போது குறித்த கைதிக்கு மட்டும் சலுகை வழங்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை சம்பத் விதான பத்திரன உள்ளிட்ட குறித்த நான்கு குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானதல்ல என சட்ட மா அதிபர் மேன்முறையீடு செய்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITaLdno6.html
Geen opmerkingen:
Een reactie posten