[ சனிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2014, 11:50.14 PM GMT ]
கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியா புறப்பட்ட சிங்களப் பயணி ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரது நடத்தையில் சந்தேகம் கொண்ட விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை பரிசோதித்துள்ளனர். அப்போது அவர் தனது செல்போனுக்குள் மறைத்து சுமார் 230 கிராம் தங்கத்தை கடத்திச் செல்ல முற்பட்டது தெரிய வந்துள்ளது.
இதன் மதிப்பு சுமார் பன்னிரண்டு இலட்சம் ரூபாவாகும்.
கடத்திச் செல்ல முயன்ற தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், விமானப் பயணியும் கைது செய்யப்ட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRXLdfr0.html
ஊவா தேர்தல் வன்முறைகளில் அம்பாந்தோட்டை குண்டர்கள்!- சரத் பொன்சேகா
[ சனிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2014, 11:57.18 PM GMT ]
ஊவா மாகாண சபைத் தேர்தலை ஒட்டியதாக நடைபெறும் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மொனராகலை அப்பாவி மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட அம்பாந்தோட்டையிலிருந்து குண்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் சஷீந்திர ராஜபக்ச செய்து கொடுக்கின்றார்.
இந்த குண்டர்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் புகார் கொடுத்தாலும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றார்கள். தேர்தல் ஆணையாளரோ இவர்கள் தொடர்பில் பேசவே அச்சப்படுகின்றார். அரசாங்கத்தின் அதிகார வெறி முன்பாக இவர்கள் செய்வதறியாத நிலையில் உள்ளனர்.
எங்களது கட்சி வேட்பாளர் ஒருவர் அண்மையில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் அம்பாந்தோட்டை குண்டர்களே சம்பந்தப்பட்டிருந்தனர். அது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம். ஆனால் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி, தேர்தல் மோசடிகள் மூலம் வெற்றி பெற அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கு எமது கண்டனத்தைத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளோம் என்றும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRXLdfr1.html
தமிழ் கூட்டமைப்பின் இந்தியப் பேச்சுவார்த்தை தொடர்பில் அமைச்சர் வாசுதேவ அதிருப்தி
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 12:28.31 AM GMT ] [ பி.பி.சி ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றமை தொடர்பில் அதிருப்தியடைந்துள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, இணக்கப்பாடு ஏற்படாத விடயங்களையும் இணக்கப்பாடு ஏற்பட்ட விடயங்களையும் குறித்துக் கொண்டு, இந்தியாவுடன் இலங்கை அரசாங்கமும் தமிழர் தரப்பும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் என்று தான் நான் கருதுவதாகவும் அமைச்சர் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதியொருவரும் இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை முறையாக அமைய முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனியாகவும் இலங்கை அரசாங்கம் தனியாகவும் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் நன்மைகளை எட்டமுடியாது என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
குறைந்த பட்சம் ஏனைய மாகாணசபைகளில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற அதிகாரங்களையாவது வடக்கு மாகாணசபைக்கு அளிப்பதற்காக அரசாங்க தரப்பை இணங்கச் செய்யும் முயற்சிகளில் தாம் உள்ளிட்ட அரசாங்கத்திலுள்ள இடதுசாரித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் சமூக நல்லிணக்க அமைச்சர் பிபிசியிடம் கூறினார்.
வடக்கில் பாதுகாப்பு படைகளுக்காக காணிகள் கையகப்படுத்தப்படுவதையும் மக்களின் சிவில் வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும் விதத்தில் இராணுவம் நிலைகொண்டிருப்பதையும் தடுப்பதற்காக தாம் உள்ளிட்ட சில தலைவர்கள் அரசாங்கத்தை இணங்கச் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfr3.html
Geen opmerkingen:
Een reactie posten