தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 24 augustus 2014

அமெரிக்க செய்தியாளருக்கு வீசா வழங்குவதில் இலங்கை பின்னடிப்பு!

இலங்கையின் வரி வருமானத்தில் வீழ்ச்சி!
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 01:19.31 AM GMT ]
அமைச்சரவை உபகுழுவின் மிகவும் இரகசியமான அறிக்கை ஒன்றின்படி இலங்கையில் கடந்த வருடம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11வீதம் மாத்திரமே வரி வருமானமாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வரி வருமானங்களுக்கு கீழ் 2015ம் ஆண்டுக்கான ஒதுக்கீடுகள் நிச்சயமற்றவையாக மாறியுள்ளன.
இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
உரிய முகாமைத்துவமின்மையே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரகசிய தகவலின்படி இந்த வருட ஆரம்பத்திலும் வரி வருமானத்தில் குறைவு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டின் வரி வருமானம் 1168 மில்லியன் ரூபாய்கள் என்ற மதிப்பிடப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டுக்கான வரி வருமானம் 1361 மில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில் அதிகரிப்பு உள்ளபோதும் அந்த அதிகரிப்பு 21வீதமாக அமையவேண்டும்.
எனினும் 2015ம் ஆண்டுக்கான வரி வருமான வீத வளர்ச்சி 11 வீதமாகவே உள்ளது என்று ஆங்கில செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfr4.html
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த கோடிக்கணக்கான பணத்தை செலவிடும் அரசசார்பற்ற நிறுவனங்கள்!
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 01:27.50 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள பொது வேட்பாளர் ஒருவருக்கு, அரச சார்பற்ற நிறுவனங்கள் பாரியளவில் பணம் வழங்கி வருவதாக தேசிய புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
கோடிக்கணக்கான ரூபா பணம் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் பூரண ஒத்துழைப்பு குறித்த வேட்பாளருக்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்தரங்குகள், செயலமர்வுகள் மட்டுமன்றி வீடு வீடாகச் சென்று பிரச்சாரப் பணிகளில் ஈடுபடவும் இந்தப் பணம் பயன்படுத்தப்பட உள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் ஏனைய வேட்பாளர்களை போட்டியிடச் செய்யாது, குறித்த பொது வேட்பாளரை மட்டும் தேர்தலில் களமிறக்கவும் அரச சார்பற்ற நிறுவனம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை போட்டியிட வேண்டாம் என இந்த அரச சார்பற்ற நிறுவனம் கோரிக்கை விடுக்க உள்ளது.
ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் பொது வேட்பாளர் ஓருவரை நியமிப்பதில் எவ்வித அர்த்தமும் கிடையாது என அரச சார்பற்ற நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதனை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை குறித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் மேற்கொண்டு வருவதாக அரச புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்தும் நோக்கிலேயே வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் பணத்தை வாரி இறைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfr5.html
அமெரிக்க செய்தியாளருக்கு வீசா வழங்குவதில் இலங்கை பின்னடிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 01:37.31 AM GMT ]
புதுடில்லியை தளமாகக்கொண்ட அமெரிக்கா செய்தியாளர் ஒருவருக்கு வீசா வழங்கும் நடவடிக்கையை இலங்கை பிற்போட்டுள்ளது.
காடினர் ஹாரிஷ் என்ற செய்தியாளர் புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரம் ஊடாக வீசாவுக்கு விண்ணப்பத்துள்ளார். எனினும் இதுவரை பதில் எதுவும் கிடைக்கவில்லை என்று நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து பதில் வழங்கியுள்ள இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சு, குறித்த செய்தியாளரின் வீசா விண்ணப்பம் கிடைக்கப்பெற்ற போதும் இன்னும் அது குறித்து தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
குறித்த செய்தியாளர், அளுத்கமை வன்முறை தொடர்பாக செய்திகளை சேகரிக்கவுள்ளதாக தமது வீசா விண்ணப்பத்தில் கோரியுள்ளார்.
சீன ஜனாதிபதி மற்றும் ஜப்பானிய பிரதமர் ஆகியோரின் விஜயங்களும் இடம்பெறவுள்ளன.
இந்தநிலையில் இலங்கைக்கு எதிரான செய்தி அறிக்கைகளுக்காக வீசா கோரப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. எனினும் அமெரிக்க செய்தியாளரின் வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்படவில்லை.
அது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfr6.html

Geen opmerkingen:

Een reactie posten