தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 augustus 2014

சிறுமிகளை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த இராணுவச் சிப்பாய்க்கு பாலியல் நோய்!

சிறுமிகளை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த இராணுவச் சிப்பாய்க்கு பாலியல் நோய் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
களுத்துறை பிரதேசத்தில் அண்மையில் 14 வயதான பாடசாலை மாணவிகள் இருவர்,  ஐந்து பேரினால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர்.
இந்த ஐந்து சந்தேக நபர்களில் ஒருவரான இராணுவச் சிப்பாய்க்கு பாலியல் நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிகளை, பாலியல் நோய் தொடர்பான நிபுணத்துவ மருத்துவர் ஒருவரிடம் காண்பித்து சிகிச்சை வழங்கப்பட வேண்டுமென பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இந்த அறிக்கையை பரிசீலனை செய்த நீதவான் மாசிங்க, சிறுமிகளை மருத்துவர் ஒருவரிடம் காண்பிக்குமாறு நேற்று உத்தரவிட்டுள்ளார்.
கடற்படை மற்றும் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.
சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க வேண்டாம் என பொலிஸார் விடுத்த கோரிக்கையை நீதவான் ஏற்றுக்கொண்டுள்ளார்.
மாணவியை கடத்திச் சென்ற இராணுவ வீரர் கைது
பாடசாலையில் நடந்த பகுதி நேர வகுப்பு முடிந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்த மாணவியை கடத்திச் சென்ற இராணுவ வீரர் கைது செய்யப்பட்டதாக மாதம்பை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் மாவட்டம் மாதம்பை - மெதகம பிரதேசத்தில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிங்கிரிய -வெள்ளவாவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவியே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டார்.
மாணவியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் கூறியுள்ளனர்.
சந்தேக நபர் மாணவியை மோட்டார் சைக்களில் ஒன்றில் ஏற்றிச் சென்று கொண்டிருந்தார்.
மாதம்பை பனிரெந்தாவ தேவாலவத்தை பகுதியை 23 வயதான சந்தேக நபரை தான் இரண்டு வருடமாக காதலித்து வந்ததாகவும் சந்தேக நபர் அழைத்ததால் அவருடன் சென்றதாகவும் மாணவி பொலிசாரிடம் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் கைது செய்யப்பட்ட இராணுவ வீரருக்கு எதிரான திருமணம் செய்யும் வயதை பூர்த்தி செய்யாத இளம் பெண்ணை கடத்தினார் என்ற குற்றச்சாட்டில் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdnv5.html

Geen opmerkingen:

Een reactie posten