[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 02:22.38 AM GMT ]
காலவரோதய சட்டம் தொடாபிலான நாடாளுமன்றில் விவாதத்தில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
போரில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நலன்களை வழங்குவது நம் அனைவரினதும் கடமையாகும்.
காடுகளாக காணப்பட்ட பூமியை, செழிப்பான விவசாய நிலங்களாக மாற்றிய மக்களிடமிருந்து அந்தக் காணிகளை மீளப்பெற்றுக் கொள்வதில் சிக்கல் உண்டு.
இது தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
நீண்ட காலத்திற்கு முன்னர் போர் காரணமாக கைவிடப்பட்ட நிலங்களில், கடின உழைப்பின் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர்.
நீண்ட காலமாக தங்கியிருக்கும் மக்களை உடனடியாக வெளியேற்ற முடியாது.
கிளிநொச்சியில் வாழ்;ந்து பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு காணி உரிமை கியைடாது.
இந்த மக்களுக்கு ஏதேனும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
சட்டத்தின் மூலம் காணியுரிமை இல்லாத மக்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களை கருத்திற்கொண்டு அவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென சந்திரகுமார் முருகேசு தெரிவித்துள்ளார்.
மலையக மக்களின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும்- ராஜதுரை
மலையக மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பீ.ராஜதுரை தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக செயற்பட்டு வரும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் லயன் அறைகளில் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த 230 ஆண்டுகளாக இந்த நிலைமை நீடித்து வருகின்றது. காலவரோதய சட்டத்தின் ஊடாக பெருந்தோட்ட மக்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும்.
பெருந்தோட்ட மக்கள் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைமையில் வாழ்ந்து வருகின்றனர்.
பெருந்தோட்டத்தில் வாழ்ந்தாலும் வேறு இடங்களில் வாழ்ந்தாலும் அனைவருக்கும் காணிகளும் வீடுகளும் வழங்கப்பட வேண்டும்.
ஏனைய பிரதேச மக்களின் உரிமைகள் எமது மக்களுக்கு வழங்கப்படுவதில்லை. எமது பிரதேச மக்கள் வேறும் நாட்டைச் சேர்ந்தவர்களா என்ற எண்ணம் இவ்வாறான சந்தர்ப்பங்களில் உருவாகும் என ராஜதுரை தெரிவித்துள்ளார்.
காலணிக்குள் மறைத்து தங்கம் கடத்திய இருவர் கைது
காலணிக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு கட்டுநாயக்கவிலிருந்து இந்தியாவின் பெங்களூர் நோக்கிப் புறப்பட்ட விமானத்தின் பயணிகள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்னர்.
இவர்கள் தங்கள் காலணியின் அடிப்பகுதியில் செயற்கையான இடவசதியை ஏற்படுத்தி அதற்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்திச் செல்ல முற்பட்டிருந்தனர்.
கடத்திச் செல்ல முற்பட்ட தங்கத்தின் எடை 682 கிராம் என்றும், இதன் மதிப்பு சுமார் 34 லட்சம் ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் அரசாங்க திறைசேரியில் ஒப்படைத்துள்ளனர்.
கடத்தல்காரர்கள் இருவரும் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளதுடன், இருவருக்கும் தலா ஐம்பதினாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdnv7.html
இலங்கையர்கள் மலேசியாவில் நிர்க்கதியாக்கப்படுகின்றனர்
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 02:15.01 AM GMT ]
ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரையில் பணம் பெற்றுக் கொண்டு மலேசியாவிற்கு அழைத்து சென்று அங்கு, இலங்கையர்கள் கைவிடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகத் தெரிவித்து இவ்வாறு இலங்கையர்கள் மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு நிர்க்கதியாக்கப்பட்ட 300 பேர் எதிர்வரும் வாரத்தில் நாடு கடத்தப்பட உள்ளனர்.
நிர்க்கதியானவர்கள் அபராதமாக மலேசியாவிற்கு 16,000 ரூபா செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
கடத்தல்காரர்களின் பொறியில் சிக்கிய 2500 பேர் வரையில் கடந்த நான்கு மாதங்களில் இலங்கை கடத்தப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இலங்கையர்களை அழைத்துச் சென்று மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைத்து விட்டு தப்பிச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdnv6.html
விமல் வீரவன்சவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை!– அரசாங்கம்
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 02:07.46 AM GMT ]
விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி அரசாங்கத்தை நல்வழிப்படுத்தும் நோக்கில் 12 அம்ச கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தது.
இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என அரசாங்க ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்ட யோசனைகளை ஏற்றுக் கொள்வதும் அது குறித்து பேச்சுவார்த்தை நடாத்த இணங்குவதும் இரு வேறுபட்ட விடயங்களாகும்.
உத்தியோகபூர்வமாக 12 அம்ச கோரிக்கைகளை அமைச்சர் விமல் வீரவன்ச சமர்ப்பிக்கவில்லை.
பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
பேச்சுவார்த்தை நடாத்தவே அரசாங்கம் இணங்கியுள்ளது என கெஹலிய தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பிய கேள்விகளுக்கு நேற்று பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdnv4.html
முள்ளிவாய்க்காலில் பொதுமக்களின் 617 ஏக்கர் காணியை கடற்படையினர் சுவீகரிக்க நடவடிக்கை! மக்கள் எதிர்ப்பு
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 01:09.09 AM GMT ]
அத்துடன், மேற்படி காணிகளில் 90வீதமானவை பொதுமக்களுக்குச் சொந்தமான அறுதி உறுதிக் காணிகளாகும்.
எனவே மக்களுடைய காணிகள் பொது தேவை என அடையாளப்படுத்தப்பட்டு கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கப்படுவது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு காணி உரிமையாளர்கள், மாகாணசபை பிரதி பேரவை தலைவர் அ.ஜெயநாதன் ஊடாக முதலமைச்சருக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமத்தில் 617ஏக்கர் பொதுமக்களுக்குச் சொந்தமான காணி 1964ம் ஆண்டின் 28ம் இலக்க காணி எடுத்தல் (திருத்தம்) சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டவாறான காணி கொள்ளல் சட்டத்தின் 2ம் பிரிவின் 1ம் உட்பிரிவின் கீழ் குறித்த காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக கடந்த 6ம் மாதம் 17ம் திகதி பிரிவு 2பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது.
குறித்த பிரசுரத்தில் 617ஏக்கர் 3றூ ட் 31பேர்ச் அளவுள்ள காணியை பொது தேவைகளுக்காக சுவீகரிக்கவுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளதுடன், காணி சுவீகரிப்பதற்கான காரணம் மாவட்ட பிரதான கடற்படை முகாம் அமைப்பதற்கு என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் காணி உரிமையாளர்களை அடையாளம் காண முடியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் மேற்படி 617ஏக்கர் காணியில் 90வீதமானவை பொதுமக்களுக்குச் சொந்தமான அறுதி உறுதிக் காணிகளாகும். மேலும் காணிகளுக்கான உறுதிகளை மக்கள் தற்போதும் வைத்திருக்கின்றார்கள்.
2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடையும் வரையில் இந்தப் பகுதியில் மக்கள் நிரந்தரமாக வாழ்ந்திருந்ததுடன் மிகவும் வளமான நிலமுமாகும். 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்து மக்கள் நலன்புரி முகாம்களுக்கு சென்றதன் பின்னர் மக்களுடைய நிலத்தில் கடற்படையினர் நிலைகொண்டு விட்டனர்.
இதனால் மக்கள் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்டபோதும், கடற்படையினர் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கவில்லை. இதனால் மக்கள் உறவினர், நண்பர்கள் வீடுக ளில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தங்களை தங்களது சொந்த நிலங்களில் மீள்குடியேற்றுமாறு பல தடவைகள் கடற்படையினரிடம் கோரிக்கை விடுத்திருந்த போதும், கொழும்பில் உள்ள கடற்படை தலமையகத்திற்கு தெரியப்படுத்துமாறு கடற்படையினர் கூறியிருந்தனர். பின்னர் கொழும்பில் உள்ள கடற்படை தலைமையகத்துடன் காணி உரிமையாளர்கள் பேசியபோதும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எவையும் எடுக்கப்படவில்லை.
மேலும் பிரிவு 2பிரசுரத்தில் சுட்டிக்காட்டப்பட்டவாறு காணி உரிமையாளர்களை இனங்காண முடியவில்லை என கூற முடியாது. ஏனெனில் காணி உரிமையாளர்கள் தங்கள் காணிகளின் உறுதிகளை பிரதேச செயலருக்கு நேரடியாக காண்பித்திருக்கின்றனர்.
இதேபோன்று சுவீகரிக்கப்படவுள்ள காணியின் சரியான அளவு பிரிவு 2 பிரசுரத்தில் சரியாக குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், தங்கள் காணிகள் மிக கபடத்தனமாக ஆக்கிரமிக்கப்படுவதாகவும், காணிகள் முன்னரே அளக்கப்பட்டு விட்டனவா என்ற சந்தேகத்தை உருவாக்குவதாகவும் குற்றம்சாட்டியிருக்கும் மக்கள், குறித்த காணி சுவீகரிப்பினை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு வடமாகாண முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை குறித்த காணிகள் உள்ள பகுதி 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் நடைபெற்ற பகுதியாகும், இந்தப்பகுதியிலேயே கடுமையான தாக்குதல்கள், உயிரிழப்புக்கள் இடம்பெற்றதாக சர்வதேச மட்டத்திலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்புக்களினாலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.
இந்நிலையிலேயே குறித்த சுவீகரிப்பு திட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdnv3.html
Geen opmerkingen:
Een reactie posten