தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 augustus 2014

அவுஸ்திரேலியா 157 அகதிகள் விடயத்தில் பொய்யாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு- கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

கறுப்பு யூலைக்குப் பின்னர் அதிகளவான மக்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 03:45.21 AM GMT ]
1983 ஆம் ஆண்டு கறுப்பு யூலை கலவரத்துடன் இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட ஐக்கியமின்மை காரணமாக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நாட்டை விட்டு சென்றதாக அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற காலவரோதய விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் சொத்துக்கள் இழக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்த சட்ட மூலத்தின் மூலம் சொத்துக்களை இழந்தவர்கள் தமது சொத்து உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
முன்னைய உரிமையாளர்களின் உறவினர்கள் பலவந்தமாக கைப்பற்றிய நிலங்களும் உள்ளன.
யாழ்ப்பாணத்தில் உரிமையாளர்கள் இல்லாத நிலங்களும் இருக்கின்றன.  இவ்வாறான காணிகள் ஏனையோர் பலவந்தமாக குடியேற வாய்ப்புள்ளது.
அவ்வாறான நிலைமை ஏற்படுவதை தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் அமைச்சர் கஜதீர மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdnw0.html
இந்தியாவின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுப்பு
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 03:02.17 AM GMT ]
இலங்கையில் உள்ள தமது இராஜதந்திரி ஒருவர் சென்னையில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
குறித்த பாகிஸ்தான் இராஜதந்திரியின் மூலமே இலங்கையர் ஒருவர் தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தூதரகங்களை உளவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்டார் என்று இந்தியா ஏற்கனவே குற்றம் சுமத்தியிருந்தது.
இந்தக்குற்றச்சாட்டு தொடர்பில் அறிக்கை ஒன்றையும் இந்தியா, இலங்கையின் உள்துறை அமைச்சிடம் கோரியிருந்தது.
இந்தநிலையில் குறித்த பாகிஸ்தான் அதிகாரியையும் பாகிஸ்தான் திருப்பியழைத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதற்கு மத்தியிலேயே பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தஸ்னீம் அஸ்லம் பாகிஸ்தானின் மறுப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் இந்தக் குற்றச்சாட்டு இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நல்லுறவை கெடுக்கும் முயற்சி என்றும் தஸ்னீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdnwz.html

அவுஸ்திரேலியா 157 அகதிகள் விடயத்தில் பொய்யாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு- கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம்
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 02:45.38 AM GMT ]
இலங்கை அகதிகள் 157 பேர் விடயத்தில் தாம் வெளிப்படையாக நடந்து கொண்டதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் கூறியிருப்பதை அகதிகளுக்கான சட்டத்தரணி ஒருவர் விமர்சித்துள்ளார்.
157 அகதிகளும் இரகசியமாக கடலில் தடுத்து வைக்கப்பட்டமை, உயிர்காப்பு அங்கிகளை வழங்கி இந்தியாவுக்கு அனுப்ப முயற்சிக்கப்பட்டமை மற்றும் இரகசியமாக விமானங்களில் ஏற்றி நவுரு தீவுக்கு அனுப்பியமை போன்ற செயல்களை எவ்வாறு வெளிப்படையான செயல்கள் என்று கூறமுடியும் என்று சட்டத்தரணி ஜோர்ஜ் நியூகௌஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
1939 ஆம் ஆண்டில் ஜெர்மனிய யூத அகதிகள், கியூபாவில் அகதி அந்தஸ்து கோரி படகு மூலம் சென்றபோது அவர்களுக்கு அந்தஸ்து மறுக்கப்பட்டது. அவர்கள் ஐரோப்பியாவுக்கு மீண்டும் அனுப்பப்பட்டனர்.
இதன்போது நாஸி முகாம்களில் வைத்து திருப்பியனுப்பப்பட்ட அகதிகள் 937 பேரில் 600 பேர் உயிரிழந்த சம்பவத்தை நியூகௌஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையிலேயே குறித்த 157 அகதிகளும் திருப்பியனுப்பப்பட்டால் நேரும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரலாற்று ரீதியாக அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக வந்த இலங்கையர்களில் 90 வீதமானோர் உண்மையான அகதிகள் என்று இனங்காணப்பட்டனர்.
இந்தநிலையில், 157 அகதிகளும் நிச்சயமாக உண்மையான அகதிகளாகவே இருப்பர்.
அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன், நீதிமன்றத்துக்கு வழங்கியுள்ள தகவலில் 157 பேரும் பொருளாதார அகதிகள் என்று இனங்காட்டியுள்ளார்.
எனினும் அவர்கள் ஏன் இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்தனர் என்பதை இன்னும் தமது அரசாங்கம் அவர்களிடம் வினவவில்லை என்பது அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணத்தில் இருந்து புரிகிறது.
அத்துடன் அவுஸ்திரேலிய அரசாங்கம் மனிதாபிமானமற்ற ரீதியில் நடந்துக்கொண்டுள்ளது.
இல்லையெனில் 157 அகதிகள் மத்தியில் உள்ள 50 சிறுவர்களையும் எவ்வாறு ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பற்ற இடம் என்று குறிப்பிட்டுள்ள நவுரு தீவுக்கு அனுப்பியிருக்க முடியும் என்றும் நியூகௌஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவுக்கு திருப்பியனுப்புவதற்கு அகதிகளுக்கு படகு செலுத்தல் பயிற்சிகளை வழங்கிய ஆஸி.படையினர்
157 அகதிகளை கடலில் வைத்து இடைமறித்த அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு படையினர் அகதிகளில் 15 ஆண்களுக்கு உயிர்க்காக்கும் படகுகளை இயக்குவது குறித்து பயிற்சி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின்படி இந்தியர் அல்லாதோரையும் இந்தியா ஏற்றுக்கொள்ள தயாராக இருந்த நிலையில் குறித்த உயிர்காப்பு படகுகளிலேயே 157 அகதிகளும் இந்தியாவுக்கு அனுப்பப்படவிருந்ததாக மனித உரிமைகள் சட்டநிலையத்தின் பணிப்பாளர் ஹுக் டி ரெஸ்டர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த 15பேரும் தமக்கு கடல்பயணங்களில் அனுபவம் இல்லை என்று கூறிய பின்னரே அவர்கள் நௌரு தீவுக்கு அனுப்பப்பட்டதாக அவர் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு இன்று காலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து குறித்த ஊடகம் அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசனை வினவியபோது நடவடிக்கை தொடர்பான பிரச்சினைகள் இருந்தமையால் அகதிகளை உயிர்க்காப்பு படகுகளில் மீண்டும் இந்தியாவுக்கு அனுப்புவது குறித்து ஆராயப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
எனினும் இந்த திருப்பியனுப்பலுக்காக 157 அகதிகளில் 15பேருக்கு அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படையினர் பயிற்சிகளை வழங்கியதாகவும் அவர்கள் ஆங்கில மொழியில் இந்த பயிற்சிகளை வழங்கியதாகவும் மனித உரிமைகள் நிலைய பணிப்பாளர் தெரிவித்தார்.
படகு ஒன்றில் 60 பேர் இந்தியாவுக்கு செல்ல முடியும் என்று எல்லைப்பாதுகாப்பு படையினர் அகதிகளிடம் கூறியுள்ளனர்.
தமக்கு படகு செலுத்தலில் அனுபவம் இல்லை என்று அகதிகள் எல்லைப்பாதுகாப்பு படையினரிடம் தெரிவித்தபோது இது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கட்டளை என்றும் அதற்கு இணங்க நடக்க வேண்டியது தமது கடமை என்றும் எல்லைப் பாதுகாப்பு படையினர் அகதிகளிடம் தெரிவித்ததாக மனித உரிமைகள் நிலைய பணிப்பாளர் அவுஸ்திரேலிய ஊடகத்திடம் குறிப்பிட்டுள்ளார்.
"அப்பாவி தமிழர்களை வைத்து அரசியல் நடத்தாதே " அவுஸ்ரேலியாவில் இன்று ஆர்ப்பாட்டம்
கடந்த சனிக்கிழமை குடிவரவு அமைச்சர் மொரிசனும் பிரதமர் டோனி அபாட்டும் சேர்ந்து அப்பாவி 157 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை இரவோடு இரவாக நவுரு தடுப்பு காவலுக்கு அனுப்பியதை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை அகதிகளுக்காக செயற்படும் அமைப்பான Refugee Action Coalition Sydney நடத்தியது.
இந்த ஆர்ப்பாட்டமானது சிட்னியில் உள்ள குடிவரவு திணைக்களத்துக்கு முன்பாக இடம் பெற்றது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த இயன் ரிண்டோல்,
அமைச்சர் மொரிசன் சிறுவர்களினது வாழ்க்கையில் அரசியல் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும், இலங்கை தமிழர்களை மட்டும் குறி வைத்து நடத்தும் கடும்போக்கு சட்ட நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும்.
நவுரு தடுப்பு காவலானது ஒரு சிறை கூடத்துக்கு சமமானது. ஆகவே சிறுவர்களது நிலைமை மிகவும் மோசமடையக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றது.
ஆகவே இங்கு இருக்கின்ற புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நல்ல ஒரு முடிவினை அமைச்சர் மொரிசன் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டம் நடக்கும் அதே நேரத்தில் கேர்ட்டின் தடுப்பு காவலிலும் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றும் இடம் பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர்கள் சார்பில் பெரிதாக ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdnwy.html

Geen opmerkingen:

Een reactie posten