தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 3 augustus 2014

சில்க் ஸ்மிதாவுடன் நடனமாடும் மகிந்த: தொடர்ந்து அசிங்கப்படுத்தும் அதிமுக!

இவ்வருட இறுதிக்குள் சிம் அட்டைகளை பதிவு செய்யாவிட்டால் சட்டநடவடிக்கை- 10 வயது மகளை சங்கிலியால் கட்டி வைத்த தாய்
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 12:38.55 PM GMT ]
இலங்கையில் உள்ள கையடக்க தொலைபேசி நிறுவனங்கள் வழங்கியுள்ள சகல சிம் அட்டைகளும் இந்த வருட இறுதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது 21 மில்லியனுக்கு மேற்பட்ட கையடக்கத் தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டிருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட தெரிவித்துள்ளார்.
புதிதாக வழங்கப்படும் சிம் அட்டைகள் மூன்று நாட்களுக்கு பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயம். இதற்கு முன்னர் வழங்கப்பட்ட பெருந்தொகையான சிம் அட்டைகள் பதிவு செய்யப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கல்கமுவ - மீகலேவ பிரதேசத்தில் சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தை அடுத்தே சிம் அட்டைகளை பதிவு செய்ய வேண்டும் என்ற யோசனைகள் மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து தகவல் வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன,
சிறுவனை கடத்திச் சென்றவர்களிடம் 7 சிம் அட்டைகள் இருந்துள்ளன. அவர்கள் இரண்டு சிம் அட்டைகளை பிரதான பயன்படுத்தி வந்துள்ளனர்.
7 சிம் அட்டைகளில் ஒன்று கொழும்பில் மூட்டை தூக்கும் தொழிலில் ஈடுபடும் நாட்டமி ஒருவரின் பெயரில் இருக்கின்றது.
குருணாகலில் இருக்கும் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் முகவர்கள் எந்த அடையாள அட்டைகளையும் பெறாது சிம் அட்டைகளை விநியோகித்து வருகின்றனர்.
எவராது சிம் அட்டையை கொள்வனவு செய்ய வரும் போது அவர்களிடம் அடையாள அட்டை இல்லையென்றால், முன்னர் வாங்கியவர்களின் அடையாள அட்டையை பயன்படுத்தி அந்த முகவர் நிறுவனம் சிம் அட்டைகளை வழங்கியுள்ளது.
இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் சிம் அட்டைகளை விற்ற நபர்களை கைது செய்வோம் என பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
10 வயது மகளை சங்கிலியால் கட்டி வைத்த தாய்
நீர்கொழும்பு கொச்சிக்கடை, போகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டிருந்த 10 வயதான பெண் பிள்ளையை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இன்று அதிகாலை இந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் தாய் இவ்வாறு சங்கிலியால் சிறுமியை கட்டி வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறுமியின் தவைமறைவாகியுள்ளதுடன் அவரை தேடி கண்டுப்பிடிப்பதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITXLcfv2.html

சில்க் ஸ்மிதாவுடன் நடனமாடும் மகிந்த: தொடர்ந்து அசிங்கப்படுத்தும் அதிமுக
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 12:55.48 PM GMT ]
சிங்கள அகதிகளின் மறுவாழ்வுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷவின் மாபெரும் ஆடல் பாடல் நிகழ்ச்சி என்று குறிப்பிட்டு, தமிழகத்தின் பளையங்கோட்டை பகுதியில் பாரிய விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவித்த இலங்கை அரசைக் கண்டிக்கும் வகையில் தமிழகத்தின் ஆங்காங்கே இவ்வாறான வித்தியாசமான சுவரொட்டிகளும் விளம்பர பலகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தமிழக முதல்வரின் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
தமிழக மீனவர்கள் விடுதலை தொடர்பாக ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவதை வேறு வகையில் திரித்து இழிவாக அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது.
இதற்கு கண்டிக்கும் வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
நேற்றைய தினம், “தாயே என்னை மன்னித்து விடுங்கள். நான் பிழை செய்துவிட்டேன்” என்று இலங்கை ஜனாதிபதி தமிழக முதல்வரிடம் கோருவதைப் போன்ற சுவரொட்டிகள் தமிழகத்தின் கோயம்புத்தூரில் காணக்கூடியதாக இருந்தன.
இந்த நிலையில், சில்க் ஸ்மிதாவுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நடனமாடுவது போல் பாளையங்கோட்டையில் பாரிய விளம்பரம் பலகை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
“சிங்கள அகதிகளின் மறுவாழ்வுக்கு அதிபர் ராஜபக்சவின் மாபெரும் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி” என அந்த அதில் எழுதப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வாழ் சிங்களவர்கள் சங்கம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதன் பதிவு எண் என 420 குறிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிக்கான டிக்கெட் அனைத்து இலங்கைத் தூதரகங்களிலும் கிடைக்கும் என இந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது. 
விளம்பர உதவி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் - பானை பகுதி கழகம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்திகள் இந்திய ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyITXLcfv3.html

Geen opmerkingen:

Een reactie posten