[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 02:16.06 PM GMT ]
வலி.வடக்கு, வலி.கிழக்கு பகுதிகளிலிருந்து 1990ம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்கள் யாழ். குடாநாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் 37முகாம்களிலும், உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தம்மை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தபோதும் அ ந்த மக்களுடைய கோரிக்கை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களை வலி.கிழக்கு- வளலாய் கிராமத்தில் குடியேற்றுவதற்கு இவ்வாண்டின் ஆரம்பத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து மக்கள் கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தனர்.
இதனையடுத்து அந்த முயற்சிகள் கைவிடப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் முதல் வலளாய் மக்களுக்குச் சொந்தமான காணிகளை வலி.வடக்கு மக்களுக்கு வழங்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைவாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2 பரப்பு வீதம் காணிகளை வழங்கி அவற்றில் வீடுகள் மற்றும் மலசல கூடம் ஆகியவற்றையும் அமைத்துக் கொடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2 பரப்பு வீதம் காணிகள் நில அளவை திணைக்களத்தினால் அளக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் விடயம் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,
வலி.கிழக்கு பிரதேச செயலர் எல்லைக்குட்பட்ட வளலாய் கிராமத்திலிருந்து 1990ம் ஆண்டு போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 25 வருடங்களாக நலன்புரி முகாமம்களிலும், உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த நிலத்திற்குச் சொந்தமான மக்களை அவர்களுடைய நிலத்தில் குடியேற்றாமல், வலி.வடக்கு மக்களை வளலாய் மக்களின் காணிகளில் குடியேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக காணிகள் அளக்கப்படுவதை நாங்கள் அறிந்திருக்கின்றோம்.
எனினும் அந்த நடவடிக்கைகள் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் நடைபெற்று வருகின்றது. இதனால் அத்தகைய நடவடிக்கைகளை தடுப்பதற்கு முடியாத நிலை காணப்படுகின்றது.
முன்னர் இவ்வாறான நடவடிக்கைக்கு எதிராக நாங்கள் ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தபோது தம் அரசின் திட்டமிட்ட இந்நடவடிக்கை கைவிடப்பட்டதாக தெரியவில்லை.
மேலும் வலி. வடக்கு மக்களுடைய பிரச்சினை சர்வதேச மட்டத்தில் அம்பலமான நிலையில் அந்தப் பிரச்சினையை ஏதோ ஒரு வகையில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது.
அதனடிப்படையிலேயே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
மேலும் வளலாய் கிராமத்தில் குடியேறுவத ற்கு வலி,வடக்கில் காணி இல்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பித்திருப்பதாக அறிகின்றோம். எனவே ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படப்போவது, வலி,வடக்கில் நிரந்தர காணிகளை கொண்ட மக்களும், வளலாய் மக்களுமே.
எனவே இந்த விடயம் தொடர்பாக நாங்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் தலைவர்களுடன் பேசி ஒரு முடிவினை எடுப்பதற்கு தயாராகி வருகின்றோம் என்றார்.
இதேவேளை வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாமல், முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை அந்த இடங்களிலேயே குடியேற்றுவதற்கு தற்போது முகாம்கள் அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்களை தேடி அந்தக் காணிகளை விலைக்கு வாங்குவதற்கு படையினர் முயற்சித்துள்ளதாகவும், இதற்காக பிரதேச செயலகங்களில் அந்தக் காணிகளின் விபரங்களை கடந்த சில தினங்களாக படையினர் திரட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyITXLcfv4.html
விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கையை நிராகரித்த படையினர்
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 02:24.17 PM GMT ]
2009ம் ஆண்டு போர் நிறைவடைந்ததன் பின்னர் படையினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்குவதற்கான முகாம் பூந்தோட்டம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.
இந்ந முகாம் அமைந்துள்ள கட்டிடம் வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சுக்கு சொந்தமானது என்பதுடன், கூட்டுறவு உத்தியோகஸ்தர்களுக்கு பயிற்சி வழங்கும் மையமாகவும் செயற்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த கட்டிடத்தில் படையினர் தங்கியிருப்பதனால் கூட்டுறவு உத்தியோகஸ்தர்களுக்கான பயிற்சிகள் மிகுந்த அசௌகரியங்களுக்கு மத்தியில் மாற்றிடங்களில் நடத்தப்பட்டு வருகின்றது.
இதனை நேற்றைய தினம் யாழ். நகரில் இடம்பெற்ற கூட்டுறவு உத்தியோகஸ்தர்களுக்கான செயலமர்வின்போது கலந்து கொண்டிருந்த உத்தியோகஸ்தர்கள் முதலமைச்சரிடம் நேரில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
குறித்த கட்டிடத்தை வடக்கு மாகாணசபை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் பொறுப்பேற்கப்பட்டதன் பின்னர் எமது அமைச்சுக்கு மீள வழங்குமாறு நான் படையினருக்கு கோரிக்கை விடுத்திருந்தேன்.
அதற்கு படையினர் எமக்கு வழங்கியிருக்கும் பதில், முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கும் மையமாக அந்த இடம் பயன்படுத்தப்படுவதனால் அந்தக் கட்டிடத்தை மாகாண கூட்டுறவு அமைச்சுக்கு வழங்க முடியாது என்பதே.
எனவே இந்த விடயம் தொடர்பாக நாம் தொடர்ந்தும் படையினருடன் பேச முடியாது. எனவே நாம் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருக்கும்.
அமைச்சர் சந்திரசிறி கஜதீரவுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளேன். அதில் குறித்த கட்டிடத்தை எமது அமைச்சுக்கு வழங்கும்படி கேட்டுள்ளதுடன், மிக சொற்ப அளவிலான முன்னாள் போராளிகளே இருந்து வரும் நிலையில் சிறைச்சாலைகளில் அவர்களுக்காக இடம் ஒன்றினை ஒதுக்கி அந்த இடத்தில் புனர்வாழ்வு நடவடிக்ககளை ஆரம்பிக்கும்படி கேட்டுள்ளேன்.
எனவே அவர்கள் அந்த நடவடிக்கையினை எடுப்பார்கள் என நான் நம்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITXLcfv5.html
Geen opmerkingen:
Een reactie posten