[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 10:25.58 AM GMT ]
இலங்கையின் அரச சார்பற்ற அமைப்புக்கள் மீது அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் உப்புல் ஜெயசூரிய குற்றம் சுமத்திய நாள் முதல் அவரின் வாகனத்தை மோட்டார் சைக்கிளில் சுமார் மூன்று பேர் தொடர்வதாக முறையிடப்பட்டிருந்தது.
எனினும் உரிய பொலிஸ் பாதுகாப்பு அவருக்கு வழங்கப்படவில்லை.
இதனையடுத்து கடந்த ஜ-லை 31 ஆம் திகதி சட்டத்தரணிகள் சங்க தலைவரின் வருகைக்காக அவரின் அலுவலகத்தில் காத்திருந்த அடையாளம் தெரியாத ஒருவர் சற்று நேரத்தில் அங்கிருந்து தப்பிசென்று விஹாரமகாதேவி பூங்காவின் அருகில் இருந்து இலக்கதகடற்ற வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளார்.
இதேவேளை அதேதினத்தில் மாலை 5 மணியளவில் மூன்று பேர் சட்டத்தரணிகள் சங்க தலைவரின் அலுவலகம் முன்னால் நின்றிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தபோது அவர்கள் பாதுகாப்பு கண்காணிப்புக்காக நிற்பதாக ஜெயசூரியவுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இந்தநிலையிலேயே சாதாரண உடைகளில் நின்ற குறித்த மூன்று பேரின் புகைப்படங்களை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITXLcfvz.html
கடத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் அலரி மாளிகையில்...
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 11:02.36 AM GMT ]
அலரி மாளிகையில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ச மற்றும் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இஸ்ரேல் நண்பனா? பாலஸ்தீனம் நண்பனா? இரட்டை வேடத்தில் ஜனாதிபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 11:27.05 AM GMT ]
பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவுக்கு அமைய பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்கள் காரணமாக அந்த நாட்டுடனான தூதரக தொடர்புகளை துண்டிக்குமாறு மக்கள் அமைப்புகள் அரசாங்கத்திற்கு கடும் அழுத்தங்களை கொடுத்து வருகின்றன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நீண்டகால இலங்கை - பாலஸ்தீன நட்புறவு சங்கத்தின் தலைவராக இருந்து வந்ததுடன் பாலஸ்தீன விடுதலை போராட்டத்தை ஆதரித்து குரல் கொடுத்து வந்தார்.
இந்தநிலையில், இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் மீது நடத்திய தாக்குதல்கள் காரணமாக அவர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
அதேவேளை இஸ்ரேலுடனான தூதரக தொடர்புகளை துண்டிக்குமாறு ஜெனிவாவுக்கான முன்னாள் தூதுவர்கள் இருவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறான கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், இஸ்ரேலுடன் தொடர்புகளை துண்டித்தால், கிபீர் தாக்குதல் விமானங்கள், டோரா படகுகளுக்கான உதிரிப்பாகங்களை பெற முடியாது போகும் என பாதுகாப்பு தரப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் தயாரிப்பான டோரா படகுகளே விடுதலைப் புலிகளின் கப்பல்களை அழிக்க பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இப்படியான நிலையில், இஸ்ரேலுடன் தொடர்ந்தும் தூதரக உறவுகளை பேணிக்கொண்டு, மக்கள் மத்தியில் பாலஸ்தீன நண்பனாக தன்னை காட்டிக்கொள்ளும் இரட்டை வேடத்தில் நடிக்கும் நிலைமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITXLcfv1.html
Geen opmerkingen:
Een reactie posten