தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 23 augustus 2014

இலங்கை இராணுவத்தினரின் மோசடிகளை அம்பலப்படுத்தும் செய்மதிப் படங்கள்

அரசின் அதிரடியால் ஊவா மாகாணத்தில் வறுமை! நான் விபச்சார தொழிலில் ஈடுபடவில்லை: அமைச்சர் சுமேதா
[ சனிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2014, 02:24.27 PM GMT ]
ஊவா மாகாணத்தில் நிலவும் வறுமைக்கு கஞ்சா விற்பனையை தடுக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கையும் ஒரு காரணமாக இருக்கலாம் என அமைச்சர் சுமேதா ஜீ ஜயசேன தெரிவித்துள்ளார்.
மொனராகலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஊவா மாகாணத்தில் வறுமை அதிகரித்துள்ளதாக நான் கூறமாட்டேன். ஓரளவு அதிகரித்திருக்கலாம். ஒரு காலத்தில் இந்த பிரதேசத்தில் கஞ்சா போன்ற பல வியாபாரங்கள் நடைபெற்றன.
போதைப்பொருளை கொண்டு வருவதாக அரசாங்கத்தின் மீது அடிக்கடி குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.
போதைப்பொருள் விற்பனையாளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு உதவி வருவதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. எனினும் நான் அதனை மறுக்கின்றேன்.
போதைப்பொருளை கடத்தி வருபவர்களை அரசாங்கம் பகிரங்கமாக கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
மொனராகலையில் அதிகளவு வருமானம் பெறும் தொழிலாக கஞ்சா இருந்து வந்தது. கஞ்சா போன்ற போதைப்பொருட்களை தடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்ததால், வருவாய் குறைந்து போயிருக்கலாம் என நம்புகிறேன் எனவும் அமைச்சர் சுமேதா ஜீ. ஜயசேன கூறியுள்ளார்.
அதேவேளை பாலியல் தொழிலுடன் அமைச்சர் சுமேதா சம்பந்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளுக்கு பதிலளித்துள்ள அமைச்சர்,
விபச்சார விடுதிகளின் பின்னணியில் அமைச்சர் சுமேதா என செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.
நான் எப்போதும் அப்படியான நடவடிக்கைகளில் சம்பந்தப்படவில்லை. நான் பெண்கள் விவகார அமைச்சராக 10 வருடங்கள் பணியாற்றியிருக்கின்றேன்.
இப்படியான நடவடிக்கைகளை நான் எதிர்ப்பவள். எவர் செய்தாலும் அதனை அனுமதிக்க மாட்டேன். அதனை கண்டிக்கின்றேன். எனக்கு அவதூறு ஏற்படுத்த பலர் முயற்சித்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRXLdfq2.html

இலங்கை இராணுவத்தினரின் மோசடிகளை அம்பலப்படுத்தும் செய்மதிப் படங்கள்
[ சனிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2014, 04:51.20 PM GMT ]
யாழ்ப்பாணத்தில் காணிகளை அபகரிப்பதற்காக இலங்கை இராணுவத்தினர் கூறி வந்த பொய் காரணங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
பொதுத் தேவைகளுக்காக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இராணுவத்தினர் பொது மக்களின் காணிகளை சுவீகரித்தனர்.
எனினும் இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகளில் பெரும்பாலானவை அவர்கள் கூறிய காரணத்துக்காக பயன்படுத்தப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் உயர் தொழில்நுட்ப இயக்கத்தின் மனித உரிமைகள் வேலைத்திட்டம், பல்வேறு செய்மதிப் புகைப்படங்களை ஆராய்ந்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் சமாதானத்துக்கும், நீதிக்குமான இயக்கம் விடுத்திருந்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி கைப்பற்றப்பட்ட காணிகளில் 30 சதவீதமானவை பொதுத் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏனைய பெரும்பாலான பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் இரண்டாயிரத்திற்கும் அதிகமாக வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதும், அதற்கான காரணங்கள் எவையும் தெரியவில்லை.
மேலும் விடுமுறை விடுதிகள் போன்ற ஆடம்பர தேவைகளுக்காகவும் இந்த காணிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக செய்மதிப் படங்கள் உறுதி செய்துள்ளதாக இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRXLdfq4.html

Geen opmerkingen:

Een reactie posten