தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 26 augustus 2014

மீனவர் பிரச்சினை அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியாக தீர்க்கப்பட வேண்டும்: இந்திய உயர்நீதிமன்றம்

காலிமுகத்திடலில் பட்டங்களை பறக்க விடுவதனால் நல்லிணக்கம் ஏற்படுமா?: பொதுபல சேனா
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 02:16.28 PM GMT ]
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்புத்துறை அமைச்சு தோல்விக்கண்டுள்ளதாக பொதுபல சேனா குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும் பொதுபலசேனாவும் அகில் இலங்கை இந்து சம்மேளனமும் இணைந்து இதனை நிறைவேற்றவுள்ளதாக பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை இந்து சம்மேளனமும் பொதுபலசேனாவும் இணைந்து இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தின.
இதன்போது கருத்து வெளியிட்ட கலகொட அத்தே ஞானசார தேரர்,
காலிமுகத்திடலில் பட்டங்களை பறக்கவிடுவதனால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று சுட்டிக்காட்டினார்.
மக்களின் மனங்களை கவர்வதற்கு வலுவான பொறிமுறை தேவை. இதன்மூலம் வழங்கப்படும் செய்தியினால் எண்ணங்களில் மாற்றங்களை கொண்டு வரமுடியும். இந்தநிலையில் அகில இலங்கை இந்து சம்மேளனத்துடன் தீவிரமான வலையமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக தேரர் கூறினார்.
இதன் முதல் கட்டமாக அகில இலங்கை இந்து சம்மேளனமும் பொதுபலசேனாவும் இணைந்து பௌத்த மற்றும் இந்து பிரிவு ஒன்றை அமைக்கவுள்ளன.
இதன்மூலம் இரண்டு தரப்பும் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்படவுள்ளதாக ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
இந்த இரண்டு அமைப்புக்களும் இணைந்து அமைக்கும் பிரிவுக்கு பௌத்த மற்றும் இந்து தர்ம ஆரக்கசன சபாவ ( பௌத்த, இந்து தர்ம பாதுகாப்பு சபை) என்று பெயரிடப்பட்டுள்ளது
இந்த அமைப்பு தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிழையான எண்ணங்களை மாற்றும் முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdewy.html
மஹிந்தவுக்கு எதிராக சோபித தேரர் எச்சரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 03:48.29 PM GMT ]
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் உறுதிமொழியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொதுவேட்பாளருக்கு மக்களின் ஆதரவை பெற்றுக் கொடுக்கப் போவதாக சமூகத்துக்கான மக்கள் இயக்க தலைவர் மாதுளுவாவே சோபித தேரர் எச்சரித்துள்ளார்.
கண்டியில் இன்று மகாநாயக்கர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மகாநாயக்கர்களும் முன்னதாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படவேண்டும் என்று கோரியதாக சோபித தேரர் சுட்டிக்காட்டினார்.
பிரதம மந்திரி நாடாளுமன்றத்துக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டு நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று சோபித தேரர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdewz.html
பல கோடி பெறுமதியான மதுபானங்கள், சிகரெட்டுக்கள் பொலிஸாரால் மீட்பு- டுபாயில் இலங்கைப் பணிப்பெண்ணுக்கு விளக்கமறியல்
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 03:52.10 PM GMT ]
வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பெருந்தொகை மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தப் பொருட்கள் பொரளை, பெயார் பீல்ட் வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுக்களின் சந்தைப் பெறுமதி 100 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்டதென மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் உண்மையான பெறுமதி இன்னும் மதிப்பிடப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொருட்களை கைப்பற்றப்பட்ட வீட்டுக்காக மாதமொன்றுக்கு ஒன்றரை இலட்சம் ரூபாய் வாடகைக்கு பெறப்பட்டே, அங்கு மதுபான போத்தல்களும் சிகரெட்டுகளும் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டுபாயில் இலங்கைப் பணிப்பெண்ணுக்கு விளக்கமறியல்
தமது பணி வழங்குநர் உரியமுறையில் சம்பளம் வழங்காமையால் அவருடைய தங்கநகைகளை திருடியமையை இலங்கை பணிப்பெண் ஒருவர் டுபாய் குற்றவியல் நீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்டுள்ளார்.
பத்திரிகை விளம்பரம் ஒன்றின் அடிப்படையில் தமது வீட்டுக்கு பணியாளாக வந்த இலங்கை பெண், இரண்டொரு நாட்களில் தமது பெருமளவு நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றதாக பணிவழங்குநர் பெண் மன்றில் முறையிட்டிருந்தார்.
எனினும் தாம் பணியில் இணைந்து நான்கு நாட்களாகியும் பணி வழங்குநர் உறுதியளித்தப்படி நாட் சம்பளத்தை வழங்காமை காரணமாக பழி தீர்க்கும் வகையில் அவரின் நகைகளை கொள்ளையிட்டதாக இலங்கை பணிப்பெண் மன்றில் தெரிவித்தார்.
இந்தநிலையில் நீதிமன்றம் அவரை செப்டம்பர் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdew0.html
பாகிஸ்தானிய விமானப்படை தலைமையதிகாரி இலங்கை விஜயம்
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 04:06.40 PM GMT ]
பாகிஸ்தானின் விமானப்படை தலைமையதிகாரி எயார் சீப் மார்ஷல் டாஹிர் ரபீக் பட் நாளை புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கையின் விமானப்படை தளபதியின் அழைப்பை ஏற்றே இந்த விஜயம் இடம்பெறுகிறது.
மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள இந்த விஜயத்தின் போது பட், இலங்கையின் ஜனாதிபதிää பாதுகாப்பு செயலாளர்ää மற்றும் பாதுகாப்பு தரப்பினரை சந்திக்கவுள்ளார்.
இரண்டு நாடுகளின் விமானப்படையினருக்கு இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்;த விஜயம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdew1.html
மீனவர் பிரச்சினை அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியாக தீர்க்கப்பட வேண்டும்: இந்திய உயர்நீதிமன்றம்
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 04:22.03 PM GMT ]
இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை அரசியல் ரீதியாக மற்றும் இராஜதந்திர ரீதியாக தீர்க்கப்பட வேண்டும் என்று இந்திய உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினையில் நீதிமன்றம் தலையிட்டு தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்று கோரி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் லோக்சபா உதவி சபாநாயகர் எம்.தம்பிதுரை மற்றும் திராவிட முன்னேற்றக்கழக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் தாக்கல் செய்த மனு இன்று இந்திய உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மனுதாரர்கள், தமது மனுக்களில் இந்திய அதிகாரிகள், தமிழக மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்படையினரிடம் இருந்து காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
கச்சதீவை மீட்பதன் மூலமே இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என்றும் அவர்கள் தமது மனுக்களில் குறிப்பிட்டிருந்தனர்.
இதன்போது மத்திய அரசாங்கத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி முக்குல் ரொஹாட்கி, கச்சதீவை மீட்பதற்காகவே இலங்கையுடன் போர் செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
அத்துடன் இரண்டு நாடுகளுக்கு இடையிலான இந்தப்பிரச்சினையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் அவர் வாதிட்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், பிரச்சினையை அரசியல் ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் தீர்க்குமாறு மத்திய அரசாங்கத்துக்கு உத்தரவிட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdew2.html

Geen opmerkingen:

Een reactie posten