பிரித்தானியாவில் ஆசிரியை ஒருவர் தனது கணவரால் கொடுரமாக தாக்கப்பட்ட உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியாவின் க்ரேடர் மான்செஸ்டர் பகுதியைச் சேர்ந்த ருக்‌ஷனா மியா (35) தனது கணவர் கசேம் மியா (36) கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் திகிதி தனது வீட்டில் கொடுரமாக தாக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிருக்காக போராடி கொண்டிருந்த மியா வடக்கு ரெட்டிஸில் உள்ள மருத்துவமனியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இரண்டு குழந்தைகளுக்கு தாயான மியா கழுத்து நெரித்ததால் தான் உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் முன்னதாக கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட இவரின் கணவர் கசேம், தற்போது கொலை செய்த வழக்காக மாற்றப்பட்டு வரும் செப்டம்பர் மாதம் 10ம் திகதி மான்செஸ்டர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளார்.
இதுகுறித்து இவரது அதிர்ச்சியில் இருக்கும் குடும்பத்தினர் கூறுகையில், ருக்‌ஷனா ஒரு அருமையான மகள், தாய், சகோதரி மற்றும் தோழி, என மிகுந்த வருத்ததுடன் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுபற்றி ருக்‌ஷனா பணிபுரிந்த ஏஸ்டன் – அண்டர் – லின் பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறுகையில், ருக்‌ஷனா ஒரு நல்ல திறமையான ஆசிரியர் என்றும், அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் உயிரிழந்தது பள்ளிக்கூடத்திற்கு ஒரு பெரும் இழப்பு என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ருக்‌ஷனாவின் குழந்தைகள் தங்கள் தாய் இல்லாமல் வளர வேண்டும் என்பது ஒரு இதயத்தை உருக்கும் விடயமாகும்.
rukshana2rukshana4