தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 1 augustus 2014

பிரணாப் முகர்ஜியைச் சந்தித்தார் இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகர்!

மிஹின் லங்கா நிறுவனத்தின் நஷ்டத்தை மறைக்க முயற்சிக்கும் அரசாங்கம்- உட்கட்சி பூசலை தீர்க்க நேரடியாக தலையிடும் ஜனாதிபதி
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 09:54.49 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட அரச நிறுவனமான மிஹின் லங்கா விமான நிறுவனத்தின் நஷ்டத்தை மறைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் நஷ்டம் 2 ஆயிரத்து 866 மில்லியன் ரூபா எனவும் அது 2013 ஆம் ஆண்டின் இறுதியில் ஆயிரத்து 956 மில்லியன் ரூபாவாக குறைந்தது என நிதியமைச்சின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தகவல்களுக்கு அமைய மிஹின் லங்கா நிறுவனம் 2012 ஆம் ஆண்டில் ஆயிரத்து 968 மில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்நோக்கியதுடன் அது 2013 ஆம் ஆண்டில் 3 ஆயிரத்து 284 மில்லியன் ரூபாவாக அதிகரித்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சின் ஆண்டறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள நஷ்டத்தை விட அதிகளவான நஷ்டத்தை அந்த நிறுவனம் எதிர்நோக்கியிருப்பதை பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக் குழு கண்டறிந்துள்ளது.
 2012 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு மிஹின் லங்கா நிறுவனத்திற்கு ஜனாதிபதி வரி விலக்கும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உட்கட்சி பூசலை தீர்க்க நேரடியாக தலையிடும் ஜனாதிபதி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக தலையிட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
சிரேஷ்ட அமைச்சர்களை கொண்ட குழு மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்காததால் இந்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக சுதந்திரக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதனடிப்படையில், பிரச்சினைகளை ஏற்படுத்தி கொண்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களை அலரி மாளிகைக்கு அழைத்து பேச்சுவார்த்தைகளை நடத்தும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பமாக உள்ளன.
முதலில் மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடன இது சம்பந்தமாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாக தெரியவருகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyITVLcgv5.html
மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொலை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு- வாஸ் குணவர்தன தொடர்ந்தும் விளக்கமறியலில்
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 12:43.07 PM GMT ]
மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொலை தொடர்பான வழக்கு இன்று மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.
அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
முறைப்பாட்டாளர் சார்பில் வழக்கில் ஆஜராகும் அரச சட்டத்தரணி சேத்திய குணசேர அவசரமாக வெளிநாடு சென்றுள்ளதன் காரணமாவே இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனடிப்படையில் எதிர்வரும் 22 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.
சாட்சியங்களை வழங்க இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அனுராதபுரம் முன்னாள் பிரதான நீதவான் தர்ஷிகா விமலசிறி உட்பட 4 சாட்சியாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றம் இன்று வழக்கை விசாரணைக்கு எடுக்கவில்லை என்பதால், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
வாஸ் குணவர்தன உட்பட சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன உட்பட 5 சந்தேக நபர்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் சஹாப்தீன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
வர்த்தகரை கொலை செய்தமை, கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பலவற்றை தம்வசம் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் சந்தேக நபர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின் போது வாஸ் குணவர்தன உட்பட சந்தேக நபர்களை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியிருந்தனர்.
விசாரணையின் போது முறைப்பாட்டாளர் தரப்பினர் ஆஜரான குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள், குற்றச்சாட்டு சம்பந்தமாக நடத்தப்பட்ட விசாரணைகளின் அறிக்கைகள் சட்ட மா அதிபரின் ஆலோசனைகளை பெறுவதற்காக அவரது திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITVLcgwy.html

பிரணாப் முகர்ஜியைச் சந்தித்தார் இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகர்
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 02:21.36 PM GMT ]
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சுதர்சன் செனவிரத்ன நேற்று புதுடெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிடம் தனது நியமன சான்றுகளை கையளித்தார்.
இதன் பின்னர் நடைபெற்ற சுமூகமான சந்திப்பில், இலங்கை உயர்ஸ்தானிகர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வாழ்த்துக்களை, இந்திய ஜனாதிபதிடம் தெரிவித்து கொண்டார்.
பரஸ்பர வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட இந்திய ஜனாதிபதி முகர்ஜி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உடனான முந்தைய சந்திப்புகளை நினைவுகூர்ந்துள்ளார்.
இந்திய ஜனாதிபதியும் இலங்கை உயர்ஸ்தானிகர் பேராசிரியர் சுதர்சன் செனவிரத்னவும் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று நெருக்கம், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான அர்ப்பணிப்புகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக இலங்கை உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITVLcgwz.html

Geen opmerkingen:

Een reactie posten