காஸா விவகாரம் குறித்து பேசுகையில் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைய அதிகாரி கிறிஸ் கன்னேஸ் கதறி அழுதுள்ளார். இது வெறுமனே அழுகை அல்லாமல் காசாவில் ஓடும் இரத்தத்தையும் எடுத்துக்காட்டுகின்றது. காஸாவில் மக்களை வெளியேறச்சொல்லிவிட்டு இஸ்ரேல் வான்வழி தாக்குதல், தரைவழி தாக்குதலையும் நடத்தி வருகிறது. வடக்கு காஸா முனையில் ஜெபல்யா என்ற இடத்தில் உள்ள வீடுகள், பாடசாலை மீது இஸ்ரேல் பீரங்கித்தாக்குதலையும், வான்வழி தாக்குதலையும் நடத்தியது. குறித்த பாடசாலை மக்களின் பாதுகாப்பு இடம் என்று ஐ நா அதிகாரிகள் 17 தடவைகள் இஸ்ரேலுக்கு அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இதனையும் மீறி குறித்த பாடசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காஸாமுனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 1360 பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலைப் பொறுத்தமட்டில் 53 வீரர்களும், பொதுமக்களில் 3 பேரும் கொல்லப்பட்டனர். இரு தரப்பினருக்கு இடையே நிரந்தர போர் நிறுத்தம் செய்வதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக அல்ஐசிரா தொலைக்காட்சி ஒன்றில் பேசுகையில், ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண உதவி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ் கன்னேஸ் கதறி அழுதார்.
என் உணர்வுகளை, காஸாவில் மக்கள் எதிர்கொள்ளும் பெரும் துயரங்களுடன் ஒப்பிட முடியாது. இஸ்ரேல் படையின் அறிவிப்பை அடுத்துதான் மக்கள் முகாம்களுக்கு வருகின்றனர் என்று கூறியுள்ள அவர் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருப்பிடங்களின்றி அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர் என்றும் தன்னை தானே கட்டுப்படுத்த முடியாமல் அழுதுள்ளார். முன்னதாக ஒருதடவை துக்கம் தொண்டையை அடைத்தபோது ஆழமாக மூச்சு மீண்டும் பேச எத்தனித்தவர் முடியமாட்டாமல் தேம்பி தேம்பி அழுதேவிட்டார்
Geen opmerkingen:
Een reactie posten