அரசியலுக்கு வருமாறு கோத்தபாயவிற்கு, விமல் அழைப்பு
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 12:16.30 AM GMT ]
தாய் நாட்டை நேசிக்கும் கோத்தபாய ராஜபக்ச போன்றவர்களின் சேவை தேவைப்படுகின்றது. இவ்வாறானவர்களின் பங்களிப்பின் மூலமே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும்.
எனவே, பாதுகாப்புச் செயலாளரை எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்.
ஜனாதிபதியின் சகோதரர் என்ற காரணத்திற்காக நாம் கோத்தபாயவை நேசிக்கவில்லை. அவரது செயற்திறன் மிக்க சேவையையே நேசிக்கின்றோம்.
தனது வாழ்க்கையையே முன்னுதாரணமாகக் கொண்டு கோத்தபாய சிறந்த சேவையாற்றி வருகின்றார். இவ்வாறானவர்களின் பங்களிப்பு நாட்டின் அரசியலுக்கு மிகவும் அவசியமாகின்றது.
போரில் ஈடுபட்ட படையினர் சிவில் சமூக அபிவிருத்தி செயற்பாடுகளில் பங்களிப்பு வழங்கி வருகின்றனர்.
ஊரிலிருந்து கொழும்பு வருபவர்கள் காலி முகத்திடலை மட்டுமே பார்வையிடக் கூடிய காலமிருந்தது.
தற்போது பொழும்பில் பல இடங்களை பார்வையிடக் கூடிய வகையில் நகரம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் நடைபெற்ற அபிவிருத்தித்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITVLcgsz.html
தர்கா நகரில் உயிரிழந்த இருவரின் மரணத்திற்கான காரணம் துப்பாக்கிச் சூடு
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 12:29.15 AM GMT ]
பிரேதப் பரிசோதனைகளின் மூலம் இந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக களுத்துறை நாகொட வைத்தியசாலையின் பிரதி சட்ட வைத்திய அதிகாரி ஹேமந்த ஹரிச்சந்திர சில்வா நேற்று நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
குறித்த இரண்டு பேரினதும் மரணத்திற்கான காரணம் தொடர்பிலும் பிரேதப் பரிசோதனை அறிக்கை தொடர்பிலும் மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
மொஹமட் பய்ரூஸ் என்பவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது பற்றிய மருத்துவ அறிக்கைள் உரிய முறையில் வெளியிடப்படவில்லை எனத் தெரிவித்து நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை பரிசீலனை செய்த களுத்துறை மேலதிக நீதவான் அயேஸா ஆப்தீன்ää உயிரிழந்த இருவரினதும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறுää சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த மனு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் 7ம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITVLcgs0.html
அரச சார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பது அரசாங்கத்தின் கடமை!- கெஹலிய
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 12:59.16 AM GMT ]
நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், செயலமர்வுக்காக கொழும்பு நோக்கி வந்த யாழ். ஊடகவியலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
30 ஆண்டு கால போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும்.
சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இன, மதச் சமூக அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது.
எவ்வாறு வாக்களிப்பது யாருக்கு வாக்களிப்பது என்பது வரையில் மக்களுக்கு அறிவுரை வழங்க சில அரச சார்பற்ற நிறுவனங்கள் முயற்சிக்கின்றன.
போர் இடம்பெற்ற காலத்தில் பயங்கரவாதிகளின் முகாம்களிலிருந்து மீட்கப்பட்ட சில ஆயுதங்கள் பற்றிய விபரங்களை வெளியிட வேண்டாம் என சில தூதுவர்கள் அந்தக் காலத்தில் கோரியிருந்தனர்.
இதன் காரணமாக அரச சார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகக் கண்ணுடன் நோக்க வேண்டியுள்ளது.
அரசாங்கத்தின் தீர்மானங்களினால் எதேனும் ஓர் தரப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
அமெரிக்க அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டு செயற்படுகின்றது எனவே அதன் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITVLcgs3.html
Geen opmerkingen:
Een reactie posten