[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 09:52.34 AM GMT ]
மசாஜ் நிலையத்தின் உரிமையாளரின் வீட்டில் குழந்தை ஒன்றை பராமரிப்பதற்காக ஆனமடுவ பிரதேசத்தில் இருந்த சிறுமி அழைத்து வரப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் மசாஜ் நிலையத்தின் உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹபரணை நகரில் இயங்கி வந்த இந்த மசாஜ் நிலையம் குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சிறுமி மீட்கப்பட்டதுடன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
சிறுமி பாடசாலையில் பயின்று வருவதாகவும் விடுமுறை காலத்தில் குழந்தையை பராமரிப்பதற்காக தாயின் அனுமதியும் அழைத்து வரப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
முந்திரி திருடிய இராணுவ வீரர் கைது
புத்தளம் வண்ணாத்துவில்லு பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றிற்குள் களவாக புகுந்து 18 கிலோ கிராம் முந்திரியை கொள்ளையிட்ட இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மாத்தளை - நாவுல தேசிய பாதுகாப்பு படையணியில் பணியாற்றி வந்துள்ளார்.
வண்ணாத்துவில்லு 15 கட்டை மங்களபுர என்ற கிராமத்தை சேர்ந்த இராணுவ வீரர் விடுமுறையில் வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில், தனக்கு சொந்தமான காணி ஒன்றில் உலர்த்தப்பட்டிருந்த முந்திரி தொகை ஒன்று கொள்ளையிடப்பட்டுள்ளதாக வண்ணாத்துவில்லு பிரதேசத்தை சேர்ந்த தோட்ட உரிமையாளர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ததுடன் முந்திரி தொகையையும் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். வாண்ணாத்துவில்லு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdep1.html
எனக்கெதிரான அனாமதேய சுவரொட்டிகள் உண்மைக்குப் புறம்பானவை!- விந்தன் கண்டன அறிக்கை
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 10:02.20 AM GMT ]
வடமாகாணசபை உறுப்பினர் கே.என். விந்தன் கனகரத்தினம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை!
1983ம் ஆண்டு வெலிக்கடை வெஞ்சிறையில் காடையர்களால் வஞ்சகமான முறையில் வெட்டியும் குத்தியும் கொல்லப்பட்ட விடுதலை போராட்டத்தின் முன்னோடிகளான தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் உட்பட 53 பேர் கொல்லப்பட்ட 31ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வும் அதை தொடர்ந்து சர்வதேசங்களில் உள்ள எமது கட்சியின் மூத்த உறுப்பினர்களின் ஒன்று கூடல் நிகழ்வும் கடந்த மாதம் ஜேர்மனியில் உள்ள டோட்மன்ட் நகரில் நடைபெற்றது.
இந்நிகழ்வுகளுக்கு இலங்கையிலிருந்து நான், செல்வம் அடைக்கலநாதன் எம் பி, விநோநோகராதலிங்கம் எம் பி, வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜனா ஆகியோர் சென்றிருந்தோம்.
குறித்த நிகழ்வுகளுக்குப் பின் அங்கு வசிக்கும் எமது கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் பிரான்ஸ், சுவிஸ் போன்ற நாடுகளுக்குச் சென்ற போது எமது கட்சி உறுப்பினர்களின், அங்கு மாணவர்களாக இருக்கும் பிள்ளைகளையும் நான் சந்திக்க நேரிட்டது.
குறித்த மாணவர்கள் இங்குள்ள அதாவது வடபகுதியில் உள்ள மாணவர்களின் கல்வி நிலை தொடர்பாக என்னிடம் வினவிய போது நான் கூறினேன் “இலங்கையில் அரசாங்கத்தால் மாணவர்களுக்கு இலவசமாக பாடநூல் சீருடை போன்றவை வழங்கப்பட்டாலும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களான கொப்பி, கொம்பாஸ், பேனா, பென்சில் உட்பட புத்தகப்பை, காலணி, காலுறை போன்றவை கூட இல்லாமல் இருக்கும் வறிய மாணவர்கள் கல்வியில் மட்டுமல்ல உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டு பின்னடைவை சந்தித்து வருகின்றனர்”; என கூறிய போது வன்னிப்பகுதியிலும் மாணவர்கள் அதிகமாக இதே நிலையில் இருப்பதாக தெரிவித்த அங்குள்ள மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நேரடியாக சில உதவிகளை செய்து வருவதாக கூறியதோடு உங்களால் முடிந்தால் யாழ்ப்பாணத்திலுள்ள வறிய மாணவர்களின் விபரத்தை தந்துதவினால் தாம் அவர்களுக்கும் நேரடியாக உதவலாமென கூறினர்.
இதற்கு நான் கூறினேன் “வடக்கு மாகாணத்திலே தற்பொழுது கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு இருக்கின்றது அவர்களின் அனுமதியுடன் அவர்களோடு இணைந்தே நீங்கள் இப்பணியை மேற்கொள்ளலாம் நானும் அவர்களோடு இணைந்து ஒத்துழைப்பு தருகின்றேன்” என குறிப்பிட்டிருந்தேன். இந்த விடயங்களை நான் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடாத்திய செய்தியாளர் மாநாட்டிலும் பகிரங்கப்படுத்தி இருந்தேன்.
குறித்த விடயம் தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சருக்கும் நான் தெரியப்படுத்தியதோடு அவரும் இந்த விடயத்தை வரவேற்று, பயனாளிகளாக இருக்கும் வறிய மாணவர்களுக்கு உதவி நேரடியாகவே கிடைக்கும்படி வழி செய்து இதை நாம் அமுல்படுத்தலாம் என கூறியதோடு இது விடயமாக என்னை தனக்கு உத்தியோகபூர்வமாக ஒரு கடிதத்தையும் அனுப்பி வைக்குமாறும் பணித்திருந்தார்.
அதுமட்டுமல்ல நெடுந்தீவில் என்னுடன் ஒன்றாய் கல்வி கற்ற பாடசாலை நண்பனும் உறவினருமான ஒருவரிடமிருந்து ஏற்கனவே கிடைத்த நன்கொடை நிதி மூலம் யாழ் தீவுப்பகுதியிலுள்ள சில விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களுக்கு நாம் நிதி வழங்கியதும் அங்குள்ள சில மருத்துவமனைகளுக்கு நிதி வழங்கவுள்ள விடயமும் நாட்டில் ஏற்பட்ட வரட்சி காரணமாக யாழ் தீவுப்பகுதியில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியதால் வடக்கு மாகாண விவசாய, நீர்ப்பாசன அமைச்சர் பொ.ஜங்கரநேசனும் நானும் இன்னும் சில மாகாணசபை உறுப்பினர்களும் இணைந்து தீவகத்தின் சில பகுதிகளுக்கு பவுசர்கள் மூலம் தொடர்ச்சியாக குடிநீர் வழங்கி வரும் விடயம் ஏற்கனவே செய்தியாக வந்துள்ளது.
இந்நிலையில் 23.08.2014 அன்று இரவு இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிள்களில் பசை வாளிகளுடன் கொச்சை தமிழில் பேசிக்கொண்டு எனக்கு எதிராக யாழ் நகரப்பகுதியில் கையால் எழுதப்பட்ட சுவரொட்டிகளை சிலர் ஒட்டித் திரிந்து இருக்கிறார்கள்.
“புலம்பெயர்ந்த மக்கள் தந்த நிதி எங்கே?” என்ற தலைப்புடன் ஒட்டப்பட்ட சுவரொட்டியில் நான் ஏற்கனவே ஜேர்மன் பிரான்ஸ் போன்ற நாடுகளிலுள்ள தமிழ் மக்களிடம் இங்கு கல்வி சீரான முறையில் இல்லை என கூறி முப்பத்திஎஐந்து இலட்சத்திற்கும் அதிகமான பணத்தை பெற்றுள்ளதாக நான் கூறியதாக அப்பட்டமான பொய் ஒன்றை சுவரொட்டியில் குறிப்பிட்டதோடு அப்பணத்தினை இன்று வரை ஏழை மாணவருக்கு நான் வழங்கவில்லை எனவும் குறிப்பி;டப்பட்டுள்ளது.
அச்சுவரொட்டிக்கு உரிமை கோருபவர்களின் முழுப்பெயரையோ முகவரியையோ குறிப்பிடாமல் கடைசியில் கஷ்டப்படும் மாணவர்களின் பெற்றோர் என குறிப்பிட்டு ஆறு பேரின் பெயரை கற்பனையில் எழுதியுள்ளனர்.
வடபகுதியில் கல்வியையும் கலாச்சாரத்தையும் சீரழித்து விளையாட்டு நிகழ்வுகளில் பியர் ரின்களையும் வழங்கி மாணவர்கள் மத்தியிலே போதை வஸ்துகளை திணித்து சமூகத்தை சீரழிக்கும் நயவஞ்சக கூட்டத்திற்கும் கைக்கூலிகளாகி காட்டிகொடுக்கும் துரோகக் கூட்டங்களுக்கும் எம்மைப் போன்றவர்களின் மக்களுக்கான சேவையை ஜீரணிக்க முடியாமல் நன்கு திட்டமிட்டு குழப்புவதிலும் தடுப்பதிலும் குறியாய் இருக்கின்றனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பும் எனது வீடு ஒரு முறை உடைக்கப்பட்டது வீட்டின் மீது போத்தல்கள் கழிவு ஒயில் போன்றவையும் வீசப்பட்டது. ஒருமுறை துப்பாக்கியை கொண்டு சுட முயன்றார்கள் ஒருமுறை துப்பாக்கியை காட்டி மிரட்டினார்கள். இன்னுமொருமுறை யாழ் மாநகர சபைக்குள் ஆறு பேர் துப்பாக்கியுடன் நுழைந்தும் எம்மை அச்சுறுத்தினர். மற்றுமோர் முறை பொலிஸ் பாதுகாப்பையும் மீறி யாழ் மாநகர சபை கூட்ட மண்டபத்தின் உறுப்பினர்களின் மேசையில் எனக்கு எதிராக அநாமதேய துண்டுப்பிரசுரம் கூட வைத்தார்கள்.
இவற்றை எல்லாம் யார் செய்தார்கள் என அப்போதே ஆதாரத்துடன் நான் அம்பலப்படுத்தி விட்டேன்.
இந்நிலையில் மீண்டும் என் மீது சேறு பூசும் விதமாக விசமப்பிரசாரத்தினை மேற்கொண்டு, எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் அடிப்படையற்ற உண்மைக்கு புறம்பான சில குற்றச்சாட்டுகளை சுமத்தி யாழ் நகரப்பகுதியில் சுவரொட்டிகளையும் தீவுப்பகுதியில் துண்டுப்பிரசுரங்களை வீசிச்சென்றதாகவும் அறிகின்றோம்.
ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக எனக்கூறி புலம்பெயர் மக்களிடமோ அல்லது அங்குள்ள அமைப்புக்களிடமோ முப்பத்தி ஐந்து சதத்தையேனும் நான் வாங்கவில்லை என உள்ளூர் மற்றும் புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகளுக்கு விநயமாக தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
நன்றி
கே.என்.விந்தன் கனகரத்தினம்
வடக்கு மாகாணசபை உறுப்பினர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
வடக்கு மாகாணசபை உறுப்பினர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdep2.html
Geen opmerkingen:
Een reactie posten