தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 1 augustus 2014

இத்தாலிக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ்.இளைஞனிடம் பணம் மோசடி

கொமன்வெல்த் போட்டியில் ஜனாதிபதி பங்கேற்காததன் காரணம் பாதுகாப்பு பிரச்சினையே!- கெஹலிய
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 03:44.56 PM GMT ]
பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையே, ஜனாதிபதி ஸ்கொட்லாந்து க்ளாஸ்கோ நகரில் இடம்பெற்று வரும் பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்காமைக்கான காரணம் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
பொதுநலவாய அரச தலைவர் என்ற வகையில், அந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு ஜனாதிபதி எதிர்பார்த்திருந்தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், ஜனாதிபதியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக அந்த தீர்மானம் மாற்றமடைந்ததாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQVLcgr3.html
இஸ்லாமிய கலாச்சார உடைகளை அணிந்து வாக்களிக்க முடியாது!– தேர்தல் ஆணையாளர்
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 11:57.36 PM GMT ]
இஸ்லாமிய கலாச்சார உடைகளை அணிந்து வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
அண்மையில் கட்சிகளின் செயலாளர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களின் போது பெண்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க முடியாது.
தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படங்களை எடுக்கும் போதும் ஹிஜாப் அணிந்து காதுகளை மறைக்கக் கூடாது.
வாக்குச் சாவடிக்குச் செல்லும் முஸ்லிம் பெண்கள் அல்லது வேறு தரப்பினர் முகத்தை மூடிக்கொண்டு வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQVLcgsy.html
குராம் ஷெய்க் கொலைக் குற்றவாளிகள் மேன்முறையீடு தாக்கல்
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 12:37.08 AM GMT ]
பிரிட்டன் பிரஜை குராம் ஷெய்க் கொலை வழக்கில் குற்றவாளிகளாக தண்டிக்கப்பட்டவர்கள் மேன்முறையீடு செய்துள்ளனர்.
கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் தங்காலை பிரதே சபையின் தலைவர் சம்பத் விதான பத்திரண உள்ளிட்ட நான்கு பேருக்கு உயர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்திருந்தது.
எனினும், இந்த தீர்ப்புக்கு எதிராக குறித்த குற்றவாளிகள் கொழும்பு உயர் நீதிமன்றில் மேன்முறையீடு ஒன்றை நேற்று தாக்கல் செய்துள்ளனர்.
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் சார்பில் அவர்களது சட்டத்தரணிகள் நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளனர்.
வழக்கு விசாரணைகளின் போது சாட்சியங்களின் மூலம் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் நீதவான் தண்டித்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைகளின் போது சட்ட மற்றும் சம்பவங்களின் பின்னணி ஆராயப்படவில்லை.
குற்றவாளிகள் எனத் தெரிவித்து உயர் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்து, விடுதலை செய்ய வேண்டுமென மேன்முறையீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளின் மேன்முறையீடுகளுக்கு வழக்கு தீர்ப்பு தொடர்பான ஆவணங்களும் இணைக்கப்பட்டு நீதிமன்றில் எதிர்வரும் நாட்களில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தண்டனை விதிக்கப்பட்ட பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட நால்வரும் வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITVLcgs1.html
இத்தாலிக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ்.இளைஞனிடம் பணம் மோசடி
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 02:48.17 AM GMT ]
இத்தாலிக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ். இளைஞனிடம் பணம் மோசடி செய்த நபரைக் கைது செய்யுமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த 28 வயது இளைஞன், இத்தாலி செல்வதற்காக கொழும்பு 7ஐ சேர்ந்த ஒருவரிடம் 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார்.
குறித்த நபர் இளைஞனை இத்தாலிக்கு அனுப்புவதாகக் கூறி ஏமாற்றி வந்துள்ளார்.
இதனையடுத்து பணத்தைக் கொடுத்த இளைஞன் கடந்த 22ஆம் திகதி காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கு மீதான விசாரணை நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பணமோசடி செய்த சந்தேகநபரைக் கைது செய்யுமாறு, பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கே.கஜநிதிபாலன், காங்கேசன்துறைப் பொலிஸாரிற்கு உத்தரவிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyITVLcgs7.html

Geen opmerkingen:

Een reactie posten