[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 03:32.03 PM GMT ]
அத்துடன், இச் சந்திப்பு எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ளது.
இதன் மூலம் வடமாகாண சபைக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தில் பேரின் காரணமாக எங்களுடைய தமிழ் மக்கள் பலவிதமானடிபாதிப்புக்களுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள். அந்தப் பாதிப்புக்களால் அவர்கள் இன்று வரைக்கும் திண்டாடிக் கொண்டு இருக்கின்றார்கள்.
இவ்வாறு திண்டாடிக் கொண்டு இருக்கும் மக்களுடைய தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இன்று நம் இருக்கின்றோம்.
ஆனாலும் வடமாகாண சபை ஆட்சி அமைக்கப்பட்ட பின்னர் எங்களால் முடிந்த அளவு வடமாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பாகுபாடுகள் காட்டப்படாமல் எங்களுக்கு கிடைப்பவற்றினை பகிரிந்தளித்துள்ளோம்.
ஆனாலும் மக்களுடைய முழுமையான தேவைகளுடன் ஒப்பிடுகையில் அந்த உதவிகள் போதுமானதாக இருக்காது. இதனால் மேலும் உதவிகளை புரியுமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளோம். இதுவரையில் அதற்கு சாதகமாக எதுவும் நடைபெறவில்லை.
இதனால் நாங்கள் துவண்டுவிடக் கூடாது ஒவ்வொருவரும் தன் கையே தனக்குதவி என்ற ரீதியில் எவ்வாறு நாங்களே எங்களுடைய சமூகத்தினை முன்னோக்கிச் கொண்டு செல்ல முடியும் என்ற வகையில் யேசனை செய்துஅதன்படி ஒன்றிணைந்து செயற்பட நாங்கள் தயாராக உள்ளோம்.
நாங்கள் யாரையும் குறைகூறிக் கொள்ளவில்லை. ஆனால் நடந்தவற்றை சிலவேளைகளில் வெளியில் கூறிக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஜனாதிபதியிடம் வடமாகாணசபைக்கு வழங்கப்படும் நிதி சம்மந்தமாக பேசினோம்.
அதற்கு வெளியில் இருந்து பணம் வரும் போது திறைசேரியுடைய செயலாளர் ஊடாகவே பணத்தினைப் பெற்றுக் கொள்ளலாம் நேரடியாக வெளிநாடுகளில் இருந்து பணத்தினைப் பெற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவிததிருந்தார்.
இவ்விடயம் சம்பந்தமாக பேசி ஒரு தீர்வினைக் காண்பதற்கு திறைசேரியுடைய கலாநிதி ஜெயசுந்தரவைக் சந்திக்கவுள்ளோம். இன்னும் இரண்டு வாரங்களுக்கும் அவருக்கும் வடமாகாண சபைக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது. அந்தச் சந்திப்பின் போது வடமாகாண சபை எதிர்கொள்ளும் நிதி தொடர்பான பிரச்சினைகளை தெளிவுபடுத்தவுள்ளோம்.
உண்மையில் வெளிநாட்டு தூதரகம் வடமாகாண சபைக்கு மிகப் பெரிய தொகையினை தருவதாக இருந்தது. அந்த பணத்தினை கூட்டுறவு சங்கம், சமாசங்கள் ஊடாக மக்களுக்குக் கொடுத்து அதனை திரும்பிப் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவிருந்தார்கள்.
ஆனால் அந்த நடவடிக்கை திடீரென கைவிடப்பட்டிருந்தது. எமக்கு உதவி புரிவதாக இருந்த அந்த வெளிநாட்டடுத் தூதரகம் யாரால் எப்படி இந்த உதவி புரியும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது என்று கூறவில்லை.
ஆகவே வடமாகாண சபையின் செயற்பாடுகளுக்கு பல விதங்களிலும் தடைகள் போடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனாலும் இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சில நடைமுறைகள் உள்ளது.
ஒன்று அரசாங்கத்துடன் பேசி இணக்கப்பாட்டுடன் ஏதாவது ஒன்றினைச் செய்யலாமா என்று ஆராய்வது. அப்படி இல்லை என்று சொன்னால் பிற இடங்களில் உள்ள மக்களின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொண்டு வெளிநாடுகளில் வாழும் எங்களுடைய சகோதரர்கள் உறவுகளின் ஒத்துழைப்பு வேறு எதாவது விதத்தில் பெற்று எங்களுடைய தமிழ் மக்களுக்குத் தேவையானவற்றை பூர்த்தி செய்ய வேண்டிய தேவை உள்ளது.
ஏனென்றால் நிதி பற்றாக்குறைதான் எங்களுடைய மிகப் பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. எமக்குத் தேவையான நிதிகளை தருவதற்கு ஆட்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவ்வாறு பெறப்படும் நிதியினை இங்கு கொண்டுவர முடியாத நிலையில் நாங்கள் இருக்கின்றோம்.
ஆனால் இது சம்பந்தமாக பேசியும், அது சம்மந்தமாக முடிவுகளை எடுப்பதற்கு இருக்கின்றோம். இன்னும் இரு வாரகாலத்திலே நிதிப்பற்றாக்குறை தொடர்பில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு உரிய பதிலை வழங்கக்கூடிய நிலை ஏற்பாடும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcer1.html
புலிகளெல்லாம் அழியவில்லை! தமிழ்நாட்டு சிங்கங்களாக மாறுகின்றன: நடிகர் விஜய் உட்பட திரையுலகினர் ஆவேசம்
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 03:44.52 PM GMT ]
இந்த நடவடிக்கையானது ஒட்டுமொத்த தமிழர்களையே இழிவுபடுத்தும் செயல், என் தாயைத் தவறாக பேசியது மாதிரியே நினைத்து வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார்.
“பாவிகளை அழிக்க புலிகள் பிறந்தன. புலிகள் எல்லாம் தமிழ் நாட்டு சிங்கங்களாக மாறி வருவதாக இயக்குனர் ரவிக்குமார் இதன்போது தனது கண்டனத்தை வெளியிட்டார்.
சீமான் தனது உரையில், “தமிழக மக்களையும் இந்தியாவையும் இழிவாக பேசுவது சிங்களவர்களுக்கு புதிதானது அல்ல. இதன் தொடர்ச்சியாக நமது தமிழக முதல்வரையும் இழிவுபடுத்தியிருக்கிறார்கள். நமது முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதியதன் காரணம், தமிழக மீனவர்களை காப்பாற்றுவதற்கும், சிறையில் தவிப்பவர்களைய மீட்பதற்குமான கோரிக்கை மட்டுமே அது.
சர்வதேச கடல் எல்லையை முடிவு செய்யும்போது கச்சதீவு யாருக்கு என்பதைத்தான் முதலில் முடிவு செய்வோம். தமிழக மக்களின் உரிமைக்காக கடிதம் எழுதியதை கொச்சைப்படுத்தியது தவறு. இதற்காக இலங்கை அரசு நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க வேண்டும். 8 கோடி தமிழ் மக்களின் பிரதிநிதியான முதலமைச்சரை இழிவுபடுத்தும்போது இந்திய அரசு அதனை கண்டிக்காமல் இருக்கிறது. இந்த மாதிரி செயலை இலங்கை அரசு தொடர்ந்தால் நாங்களும் போராட்டதை தொடர்வோம் என்றார்.
சரத்குமார் தனது உரையில், இலங்கை அரசு இதை எதற்காக செய்திருக்கிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும். தொடர்ந்து தமிழக மீனவர்களின் கோரிக்கைகளுக்கும் பாதுகாப்புக்காகவும் குரல் கொடுத்திருக்கிறார் நம் முதலமைச்சர். இதில் தைரியமாக ஒரு முதலமைச்சர் ஈடுபட்டு செயல்படுத்தயிருக்கிறார் என்பதுதான் அவர்களது உறுத்தல். இதற்கெல்லாம் அஞ்சமாட்டார் நம் முதலமைச்சர் என்றார்.
விக்ரமன் தனது உரையில், அன்னை இந்திரா என்று கூறுகிறோம், மதர் தெரேஸா என்று கூறுகிறோம், ஆனால் அம்மா என்று நமது முதலமைச்சரை மட்டும் தான் அழைக்கிறோம். இவரை இணையத்தளத்தில் இழிவுபடுத்திய இலங்கை அரசை கண்டிக்கிறேன். சிங்களர்களே உங்களுக்கு தெரியவில்லை நாகரிகம்... பின்பு எதற்கு இங்கே தூதரகம். என இலங்கைக்கு எதிராக தமது கண்டனங்களை திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி- ஜெயலலிதா பற்றி அவதூறு: இலங்கைக்கு எதிராக கிளம்பிய திரையுலகினர்- மக்களவையிலும் எதிரொலி
http://www.tamilwin.com/show-RUmsyITYLcer2.html
Geen opmerkingen:
Een reactie posten