தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 4 augustus 2014

திருச்சியில் உள்ள ஸ்ரீலங்கன் ஏர் வேஸ் நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது !


திருச்சியிலுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் ஆசன பதிவு காரியாலயத்துக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. திருச்சியிலுள்ள குறித்த அலுவலகத்தின் மீது சனிக்கிழமை (02) தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உதவி பொலிஸ் அதிகாரி தலைமையிலான 9 பேர் அடங்கிய குழு குறித்த அலுவலகத்துக்கு முன்னால் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடர்பில் அவதூறான செய்தி வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு முன்னால் தமிழ் திரையுலகினர் இன்று திங்கட்கிழமை (04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten