[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 01:53.05 PM GMT ]
குருணாகல் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை கூறியதாக அவரது ருவிட்டர் சமூக வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
குருணாகல் மாவட்டத்தின் கல்வி மற்றும் சுகாதாரத்துறை முன்னேற்றங்களை காண முடிவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLceq7.html
சிறையில் இருந்தவாறு மாகாண சபை உறுப்பினருடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்த ரவிந்து குணவர்தன!
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 02:51.40 PM GMT ]
கொலை வழக்கு தொடர்பாக சட்டமா அதிபர் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரகசிய அறிக்கையிலேயே இந்த தகவல் தெரியவந்துள்ளது.
வாஸ் குணவர்தனவின் மகன் ரவிந்து குணவர்தன சிறைச்சாலையில் இருந்து தனது தாய் உட்பட பல்வேறு நபர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்ந்தும் தொடர்புகளை வைத்திருந்தார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2013 ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபரை மேலும் மூன்று மாதங்களுக்கு தடுத்து வைக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அயேஷா ஜினசேன நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். எனினும் சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதனடிப்படையில் சந்தேக நபரான ரவிந்து குணவர்தனவிற்கு பிணை வழங்குவதா இல்லை என்பது பற்றி எதிர்வரும் 6 ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcerz.html
வடமாகாண நிர்வாகத்தை குழப்பாத வகையில் செயற்படுமாறு பிரதம செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவு
[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2014, 03:15.16 PM GMT ]
மாகாண நிர்வாகத்தை குழப்பாத வகையில் செயற்படுமாறு வடமாகாண சபையின் பிரதம செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டதாக, முதலமைச்சர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கையில் அரசுத்துறைச் செயலர்களை பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என்று நாட்டின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வடமாகாண சபையின் பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஷ் தாக்கல் செய்திருந்த மனுவின் மீதே இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.
மாகாண முதலமைச்சர் சட்டவிரோதமான உத்தரவுகளைப் பிறப்பிப்பதாகவும், தன்னைப் பதவி நீக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதைத் தடுக்க வேண்டும் என்று கோரியே மாகாண பிரதம செயலாளர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
பிரதம செயலாளர் உட்பட அனைத்துச் செயலர்களையும் நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள அதேவேளை, வட மாகாண முதலமைச்சர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் ஒத்துழைப்பாக ஒருங்கிணைந்து செயலபட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மாகாண முதலமைச்சர் பிறப்பிக்கும் சட்டபூர்வமான உத்தரவுகளுக்கு, பிரதம செயலாளர் மதிப்பளித்து, நிர்வாகத்தை சீர்குலைக்காத வகையில் செயல்படுவாரானால், சுமுகமான ஒரு தீர்வுக்கு தாங்கள் தயார் என, வடமாகாண முதல்வர் சீ வி விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார்.
முதலமைச்சரின் இந்த அறிவித்தலை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறிய அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ஏ.சுமந்திரன், மாகாண நிர்வாகத்தை குழப்பாத வகையில் செயற்படுமாறு பிரதம செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டதாக தமிழோசையிடம் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கு முடிவுக்கு வருகிறது எனவும் நீதிமன்றம் அறிவித்தது.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcer0.html
Geen opmerkingen:
Een reactie posten