[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 09:03.42 AM GMT ]
காவத்தமுனை பாடசாலை வீதியில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான அசனார் நாசர் (வயது 38) என்பரே இவ்வாறு உயிரிழந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மீராவோடை பவுசி மாவத்தையில் உள்ள தனது தாயாரின் அம்மாவின் வீட்டுக்கு வந்து விட்டு அருகில் உள்ள சில்லறைக் கடைக்கு பொருட்கள் வாங்க சென்ர போதே தாயாரின் அம்மாவின் வீட்டுக்கு அருகில் குடியிருப்பவர்களால் தாக்கப்பட்டு அந்த இடத்திலயே உயிரிழந்துள்ளார்.
மூன்று பெண்களும், இரண்டு ஆண்களுமாக சேர்ந்து தாக்கியதில் தலைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தினாலயே இவர் உயிரிழந்திருக்கலாம் என்று வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.
மரணம் அடைந்தவரின் சடலம் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfu2.html
தமிழர்களை விட ராஜபக்சவுக்குத்தான் பாஜக தலைவர்கள் விசுவாசமாக உள்ளனர்!- நல்லகண்ணு
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 09:49.16 AM GMT ]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கை தமிழர் விவகாரத்தில் பாஜக அரசு, ஐநா தீர்மானத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியண் சுவாமி மற்றும் சிலர் இலங்கை அதிபர் ராஜபக்சவுடன் சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகின்றனர்.
பாஜக தலைவர்கள் தமிழர்களை விட ராஜபக்சவுக்குதான் விசுவாசமாக உள்ளனர்.
இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை தான் பாஜக பி்ன்பற்றுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை இலங்கை தமிழர்கள் சுய கௌரவத்துடன் வாழ தொடர்ந்து குரல் கொடுக்கும். என்றார் நல்லகண்ணு.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfu4.html
Geen opmerkingen:
Een reactie posten