ஹக்கீமுக்கு தலையில் அடித்த சுவிட்சர்லாந்து அமைச்சர்!
அதாவது, கடல்சார் ஒப்பந்த மொன்றில் கைச்சாத்திடுவதற்காக சுவிட்சர்லாந்து அமைச்சர் ஒருவர் கொழும்பு வந்துள்ளார். அவருடன் நீதியமைச்சர் ஹக்கீமே உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார். இதன்போது, குறித்த அமைச்சரிடம் எமது நீதிஅமைச்சர் கேள்வியொன்றை எழுப்பியுள்ளார். “சுவிட்சர்லாந்தில் கடல் வளம் இல்லை. எனவே, எதற்காக கடல்சார்உடன்படிக்கையில் கைச்சாத்திடுகின்றீர்கள்” என்பதே அந்தக் கேள்வியாகும். இதற்கு பதில் வழங்கிய சுவிட்சர்லாந்து அமைச்சர், “நீதியே இல்லாத நாட்டில் நீங்கள் நீதியமைச்சராக இருக்க முடியும் என்றால், கடல்வளம் இல்லாத நாட்டில் ஏன் நான் கடல்சார் அமைச்சராக இருக்கு முடியாது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் என்று ரங்கா எம்.பி. குறிப்பிட்டார்.
அதேவேளை, சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய ரங்கா எம்.பி., “இலத்திரனியல்அடையாள அட்டைக்கு தனிப்பட்ட விவரங்கள் கோரப் பட்டுள்ளன. இவ்வாறு தனிப்பட்ட விவரங்கள் கோரப்படுவது தமிழர்களுக்கு புதுமையான விடயமல்ல. முன்னர் வடக்கு, கிழக்கில் இருந்த நடைமுறை இன்று தெற்குவரை வியாபித்துள்ளது. நாட்டில் தகவல் அறியும் சட்டம் இல்லை. தரவுகளை பாதுகாப்பது சம்பந்தமான சட்ட ஏற்பாடும் இல்லை. இந்நிலையில் எவ்வாறு தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்க முடியும். தகவல்கள் கசியுமானால் பாதிக்கப்பட்ட தரப்பினர் எவ்வாறு சட்டத்தின் நிவாரணத்தைப் பெறுவது? எனவே, சட்டத்துக்கு புறம்பான வகையில் இலத்திரனியல் அட்டைக்குரிய விண்ணப்பங்களை விநியோகிப்பவர்களை கைதுசெய்ய வேண்டும்” என்றார்.
http://www.jvpnews.com/srilanka/80271.html
கூட்டமைப்பு மீது வாசுவிற்கு கோபமாம்
இந்தியாவுடன் இலங்கை அரசாங்கமும் தமிழர் தரப்பும் சேர்ந்து பேச்சு நடத்தியிருக்கலாம் என்று தான் நான் கருதுகிறேன். இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதியொருவரும் இந்தியாவுடனான பேச்சில் கலந்துகொண்டிருந்தால் மட்டுமே அது முறையாக அமைய முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனியாகவும் இலங்கை அரசாங்கம் தனியாகவும் இந்திய அரசுடன் பேச்சுவதன் மூலம் நன்மைகளை எட்டமுடியாது. குறைந்த பட்சம் ஏனைய மாகாணசபைகளில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற அதிகாரங்களையாவது வடக்கு மாகாணசபைக்கு அளிப்பதற்காக அரசாங்க தரப்பை இணங்கச் செய்யும் முயற்சிகளில் தாம் உள்ளிட்ட அரசாங்கத்திலுள்ள இடதுசாரித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
BBC
http://www.jvpnews.com/srilanka/80277.html
அமெரிக்க ஊடகவியலாளர் வீசாவிற்கு ஆப்பு…
எனினும், குறித்த வீசா விண்ணப்பத்தை இலங்கை அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்படவில்லை என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அலுத்கம சம்பவம் உள்ளிட்ட சில உள்ளுர் விடயங்கள் தொடர்பில்செய்தி சேகரிப்பில் ஈடுபடும் நோக்கில் குறித்த ஊடகவியலாளர் வீசா கோரியதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
சீன மற்றும் ஜப்பான் நாட்டுத் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் இந்த தருணத்தில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இலங்கைக்கு எதிராக கருத்து வெளியிட அனுமதிக்க முடியாது எனவும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இதன் காரணமாகவே குறித்த ஊடகவியலாளரின் வீசா கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. காலம் தாழ்த்தி வீசா விண்ணப்பம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/80280.html
மீண்டும் இலங்கையை காப்பாற்றும் டாக்டர் சாரி ஷேசாத்திரி…
இந்திய அரசு மாறிவிட்டது என்பதற்காக இலங்கை குறித்த வெளிவிவகார நிலைமை மாறும் என்று சொல்லமுடியாது. 13 வது திருத்தம் என்பது இந்தியாவுக்கும் இலங்கைக்குமுள்ள ஒரு குத்துப்பாடு. இந்தத் திருத்தத்துக்குள் என்னென்னவோ அவற்றைத்தான் பேசவேண்டும். தீர்வுகாணவேண்டும். இதற்கு கொழும்பு அரசு தயாராகவே இருக்கிறது. தமிழ் கட்சிகள் அதற்கு தயாராக வேண்டும். நாம் எப்போதும் கொழும்பு அரசுக்கு சொல்வது 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில்தான் தீர்வு காணவேண்டும் என்று. இப்போது அந்த எண்ணத்தை மாற்றமுடியாது. மாற்றவும் கூடாது.
13 ஆவது திருத்தத்தில் ஒன்றுமில்லை என்ற எண்ணத்தை வைத்துக்கொண்டு பேச முடியாது. அதில் என்ன பிரச்சினையுள்ளது, என்னதிருத்தம் கொண்டுவரவேண்டும் என்பது குறித்து ஆராயவேண்டும். ஒருகையை இலங்கை அரசு ஒன்றும் செய்யமுடியாது. அவர்களுக்கு காலம் தேவைப்படுகிறது. தமிழ் கட்சிகள் சொல்வது எல்லாம் சரி என்று இல்லை. இலங்கை அரசுக்கும் சில வாதங்கள் இருக்கின்றன. அவர்கள் உட்கட்டுமாக அபிவிருத்திகளைச் செய்திருக்கிறார்கள். எனவே அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று கூறமுடியாது.
ஆனாலும் சிலவற்யை செய்துவிட்டார்கள் என்பதற்காக மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்துவிட்டார்கள் என்றும் சொல்லமுடியாது. எனவே தீர்வு விடயத்தில் தமிழ்கட்சிகளும், அங்குள்ள வேறு மாற்றுக் கட்சிகளும் முன்வரவேண்டும். இதுபோல இலங்கை அரசும் முன்வரவேண்டும். இப்படியான சந்தர்ப்பத்தில் பேச்சு நடத்தினால் இலங்கைப் பிரச்சினையைத் தீர்த்துவிடலாம். வெளிநாட்டு விவகாரங்களில் மத்திய அரசே முடிவுகளை எடுக்கும். தமிழக அரச தலைவர்களின் ஆலோசனை பெறவேண்டும் என்ற அவசியம் கிடையாது. என்றார்.
http://www.jvpnews.com/srilanka/80283.html
Geen opmerkingen:
Een reactie posten