ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து செயல்பட்ட அமெரிக்கர் ஒருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் (Illinois) பகுதியில் பிறந்த டெளக்லஸ் மெக்காத்தர் மெக்கெய்ன் (Douglas McAuthur Mc Cain age-33) என்ற இந்நபர் சிரியாவில் தங்கியிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் செயல்பட்டு வந்துள்ளார்.
இவரது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது என அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் கெய்த்லின் ஹெய்டன் (Caitlin Hayden) தெரிவித்துள்ளார்.
தற்போது மெக்கெய்னின் உடலை திரும்ப அமெரிக்காவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் மெக்கெய்னின் தீவிரவாத தொடர்புகள் குறித்து அவரது குடும்பத்தினர் கவலையுடன் இருந்து வருகின்றனர்.
இவரை பற்றி கென் மெக்கெயன் (Ken McCain) என்ற உறவினர் கூறியதாவது, படிப்பை முடித்த பின் மெக்கெய்ன், சான் டியாகோவுக்கு (San Diego) இடம் பெயர்ந்தார் என்றும் இதன்பின் இஸ்லாமியராய் மதம் மாறிய அவர் துருக்கி (Turkey) வழியாக சிரியாவுக்கு சென்று ஐ.எஸ்.ஐ.எஸ்டன் இணைந்து உள்நாட்டு போரில் பங்கேற்றுள்ளார் எனவும் கூறியுள்ளார்.
|
Geen opmerkingen:
Een reactie posten