தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 2 augustus 2014

போரை இராணுவமே வெற்றி கொண்டது! ராஜபக்சாக்கள் அல்ல!– கரு ஜயசூரிய

இஸ்ரேல், பலஸ்தீன படுகொலைகள் தொடர்பில் நவிபிள்ளையின் நிலைப்பாடு என்ன!– ஹெல உறுமய
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 12:45.54 AM GMT ]
இஸ்ரேல் - பலஸ்தீனம் ஆகிய நாடுகளில் இடம்பெற்று வரும் படுகொலைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் நிலைப்பாடு என்ன என ஜாதிக ஹெல உறுமய கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
காஸா நிலப்பரப்பில் இடம்பெற்று வரும் வன்முறைகள் தொடர்பில் நவனீதம்பிள்ளை தனது கருத்தை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரச்சார செயலாளர் நிசாந்த சிறி வர்னசிங்க தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனத்தில் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்படுகின்றனவா? பலஸ்தீனத்தில் போர்க்குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றனவா? என்பது குறித்து நவனீதம்பிள்ளை தெளிவாக விளக்க வேண்டும்.
உக்ரேய்னில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது போர்க்குற்றச் செயல் என நவனீதம்பிள்ளை திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
எனினும், பலஸ்தீன சம்பவங்கள் குறித்து நவனீதம்பிள்ளை மௌனம் காத்து வருகின்றார்.
பலஸ்தீன இஸ்ரேல் மோதல்களில் போர்க்குற்றச் செயல்கள் இடம்பெறவில்லையா என கேள்வி எழுப்புகின்றோம்
பலஸ்தீன விவகாரத்தில் நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் வித்தியாசமாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcgxz.html
எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்படும்!- அமைச்சர் ஜகத் பாலசூரிய
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 01:05.04 AM GMT ]
உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இராஜசிங்க மன்னருக்கு சொந்தமான பழமையான கட்டிடமொன்றை உடைத்துள்ளதாக எஸ்.பி. திஸாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் இராஜசிங்க மன்னரின் திறைசேரியாக ஹங்குராங்கெத்தவில் உள்ள குறித்த கட்டிடம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொல்பொருள் சட்டத்தின் அமைய 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கட்டிடங்கள் தேசிய உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படும்.
இவ்வாறான கட்டிடங்களை சேதப்படுத்தல் தொல்பொருள் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றச் செயலாகும்.
இதேவேளை, ஹங்குராங்கெத்த வளவு தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க கட்டிடமாக அறிவிக்கப்படவில்லை என அமைச்சர் ஜகத் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
தேசிய மரபுரிமைக் கட்டிடங்களில் ஒன்றாக அறிவிக்கப்படாத நிலையில்,  கட்டிடம் சேதப்படுத்தப்பட்டிருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது.
எனினும்,  மன்னர் காலத்து கட்டிடம் என்பதனால் அதனை தேசிய மரபுரிமையாக அறிவிக்க முடியும்.
அதன் பின்னர் தேசிய மரபுரிமை ஒன்றை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியும்.
இதற்காக தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தின் ஆணையாளரது ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும்.
அமைச்சர் திஸாநாயக்க கட்டிடத்தை சேதப்படுத்தியிருந்தால் அதற்கு எதிராக எவ்வாறு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜகத் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தொல்பொருள் ஆய்வு திணைக்களத்தின் ஆணையாளர் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது என சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcgx0.html
போரை இராணுவமே வெற்றி கொண்டது! ராஜபக்சாக்கள் அல்ல!– கரு ஜயசூரிய
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 02:10.39 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை இராணுவமே வெற்றி கொண்டது, ராஜபக்சாக்கள் வென்றெடுக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பேரவையின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
போர்க்களத்தில் நேரடியாக தோளுக்கு தோள் கொடுத்து அர்ப்பணிப்புடன் போராடிய படைவீரர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்குமே போர் வெற்றியின் பெருமிதம் சென்று சேர வேண்டும்.
தெரிவு செய்யப்பட்ட ஒரு சிலருக்கு மட்டும் போர் வெற்றிக்கான கீர்த்தி சென்று சேராது. படைத்தரப்பைச் சேர்ந்த அனைவருக்குமே போர் வெற்றியின் கௌரவம் உரித்தாகும்.
அரசாங்கம் மக்களை மாயையில் ஆழ்த்தி மக்களை பிழையாக வழியில் நடாத்த முயற்சிக்கின்றது.
கூட்டமைப்பின் பொய்யர்களுக்கு ஊவா மாகாணசபைத் தேர்தல் ஊடாக பாடம் கற்பிக்க வேண்டும்.
அரசாங்கம் குடும்ப ஆட்சி அதிகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது.
நாட்டு மக்கள்; பாரியளவிலான பிரச்சினைகளை எதிர்நோக்கி; வருகின்றனர். வர்த்தமானி அறிவித்தல்களின் மூலம் உணவுப் பொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்படுகின்றன. வறிய மக்கள் எதிர்ப்பார்ப்புகளை இழந்து அல்லலுறுகின்றனர்.
வலம், இடம், மேல், கீழ் ஆகிய சகல கோணங்களிலும் அரசாங்கம் நாட்டை சாப்பிட்டு வருகின்றது என கரு ஜயசூரிய சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcgx1.html

Geen opmerkingen:

Een reactie posten