தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 5 augustus 2014

அரசியல் எதிரிகளான ஹக்கீம், ரிசாத் இணைந்து ஊவாவில் போட்டி முஸ்லிம் மக்களுக்காகவா? அரசாங்கத்துக்காகவா?

தமிழகத்தில் இலங்கையர்களுக்கு பாதுகாப்பு தொடர்கிறது!
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 03:42.00 AM GMT ]
தமிழகத்தில் எழுந்துள்ள இலங்கை எதிர்ப்பு அலையை அடுத்து அங்கு சென்றுள்ள இலங்கையர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்கீழ் பீஹார் புத்தகாயாவில் இருந்து சென்னை வழியாக இலங்கை திரும்பிய 250 இலங்கையர்களுக்கு நேற்று முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டது.
பீஹாரில் இருந்து ரயிலில் இரண்டு பிரிவுகளாக சென்னைக்கு சென்ற இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த இலங்கை அடியார்களில் பௌத்த பிக்குகளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாதுகாப்பு கருதி நேற்று சென்னைக்கு சென்ற இலங்கையின் 15வயதுக்குட்பட்ட கிரிக்கட் அணியினர் திருப்பியனுப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyITZLces3.html
போதைப்பொருள் வர்த்தகர்களுடன் பொலிஸார் கூட்டிணைவு! அதிர்ச்சியளிக்கும் புலனாய்வு அறிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 05:18.17 AM GMT ]
இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் கொடி கட்டிப் பறக்கும் முக்கிய புள்ளிகளுடன் பொலிஸார் கூட்டிணைந்து செயல்படுவதாக புலனாய்வு அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.
பிரபல போதைப்பொருள் வர்த்தகர் வெலே சுதா தொடர்பில் இரகசியப் பொலிஸார் மேற்கொண்ட புலனாய்வின் போதே இந்த விபரம் தெரியவந்துள்ளது.
தற்போதைக்கு பொலிஸ் திணைக்களத்தில் உயர் அதிகாரிகள் தொடக்கம் கீழ் மட்டம் வரையான பலரும் வெலே சுதா உள்ளிட்ட போதைப்பொருள் வர்த்தகர்களிடம் மாதாந்த கொடுப்பனவு பெற்றுக் கொள்வதாகவும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது தவிர பல முக்கிய பொலிஸ் உயரதிகாரிகளின் பிள்ளைகள் போதைப் பொருள் வர்த்தகர்களின் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுக்கப்படும் நிகழ்வுகளும் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகவும் இரகசியப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறானவர்கள் மூலமாக போதைப் பொருள் வர்த்தகர்கள் தமக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான விபரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்காரணமாக பொலிஸாரின் நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது புலனாய்வுப் பிரிவினர் தனியான விசாரணையொன்றை முன்னெடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITZLces7.html
அரசியல் எதிரிகளான ஹக்கீம், ரிசாத் இணைந்து ஊவாவில் போட்டி முஸ்லிம் மக்களுக்காகவா? அரசாங்கத்துக்காகவா?
[ செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2014, 05:27.01 AM GMT ]
ஊவா மாகாணசபை தேர்தலில் பதுளை மாவட்டத்தில் முஸ்லிம் கட்சிகள் இணைந்து போட்டியிடவுள்ளன.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மலையக முஸ்லிம் கவுன்ஸில் என்ற மூன்று கட்சிகளும் பதுளையில் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்டத்தை பொறுத்தவரை அங்கு உரிய வேட்பாளர்களை நிறுத்துவதில் பிரச்சினை ஏற்பட்ட காரணத்தில் அங்கு இந்த மூன்று கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது கைவிடப்பட்டதாக ஹசன் அலி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த இணைப்பு தேர்தலில் வெற்றி பெற்றால் தனித்து செயற்படுமா? அல்லது அரசாங்கத்துடன் இணையுமா? என்பதில் தெளிவான பதில் கிடைக்கவில்லை.
பெரும்பாலும் இந்தக்கூட்டு அரசாங்கத்தினால் திட்டமிட்டு களமிறக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது.
அண்மைய சம்பவங்களின் பின்னர் அரசாங்கத்துக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்பதை உணர்ந்த அரசாங்கம் முஸ்லிம் கட்சிகளை கொண்டு வாக்குகளை கவர முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இலங்கையில் கோத்தா யார்? திடுக்கிடும் அந்தரங்கங்களை போட்டுடைக்கிறார்: அசாத் சாலி
இலங்கையின் அழிவுகளை ஏற்படுத்தி நாட்டை அழிக்கும் கோத்தபாய இலங்கைப் பிரஜை அல்ல, இவர் மீது அமெரிக்காவின் நடவடிக்கை மந்தம் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
சம்பந்தனின் காலத்தில் மோடி அரசு இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் தீர்வை வழங்க முன்வர வேண்டும் அல்லது நாட்டில் பாரிய ஆபத்து ஏற்படும் என தேசிய ஐக்கிய முன்னணித் தலைவரும், மத்திய மாகாண சபையின் உறுப்பினருமான அசாத் சாலி லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyITZLcety.html

Geen opmerkingen:

Een reactie posten